முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் நல்லடக்கம்

 வி.சுகிர்தகுமார் 0777113659  அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் நல்லடக்கம் நேற்று (18)மாலை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இந்துமயானத்தில் நடைபெற்றது.
சுhலை விபத்தொன்றில்; கடந்த 17ஆம் திகதி காலை நேரத்தில் சிக்கிய அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்
இந்நிலையில் அக்கரைப்பற்றில் உள்ள அவரது வீட்டில் நேற்று இறுதிக்கிரியைகளும் இரங்கல் உரைகளும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் நாட்டின்; பல்வேறு பாகங்களிலுமிருந்து வருகை தந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆலயங்களில் நிருவாகத்தினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலியினை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து பொலிசாரின் மரியாதையுடன் அவரது இல்லத்திலிருந்து பூதவுடல் அக்கரைப்பற்று இந்துமயானத்தை நோக்கி தூக்கிச் செல்லப்பட்டது.
அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அன்னார் கிராமங்களில் நடைபெறுகின்ற அனைத்து மரணச்சடங்குகளிலும் கலந்து கொண்டு தனது அஞ்சலியை செலுத்துவதை வழமையாக கொண்டவர் என்பதுடன் மயானங்களை சுயமாக முன்வந்து தனியொருவராக துப்பரவு செய்வதையும் சேவையாக செய்து வந்தவர்.
அத்தோடு தன்னால் முடிந்த சிறு உதவிகளையும் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்தவர்.
அந்த வகையில் அவரது ஆத்மா சாந்திபெற கிராமமக்கள் அனைவரும் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.