ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் காணிக்குரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் காணிக்குரிய ஆவணங்கள் இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பெயரில் மாற்றப்பட்டு அதற்கான ஆவணங்களும் இன்று சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உரிய காணியின் ஆவணங்கள் மாற்றப்பட்டு அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் அவர்களிடம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில்  சமுர்த்தி  மாவட்ட காரியாலய
கணக்காளர் எம்.எப்.பர்ஹான் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.