மருதமுனை மாணவன் அன்பஸ் கரீம், இந்தியா பயணம்




 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


அம்பாறை மாவட்டம் மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் அன்பஸ் கரீம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெறவுள்ள இருபத்தியொரு(21)வயதிற்கு உட்பட்ட ராஜீவ் காந்தி கிண்ண T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் முகமாக இந்தியா பயணமாகின்றார். 


இலங்கை( RICHES LANKA Centre for Cricket (RCC) அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெறவிருக்கும்,பல நாடுகள் பங்குபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் (Rajiv Gandi Trophy, Hyderabad, 2024 ) இவர் விளையாடுவதற்காக நாளை (12) இந்தியா செல்கின்றார்.


அன்பஸ் ஹிபத்துல் கரீம் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டில் இடது கை வேகப்பந்துவீச்சில் காட்டிய திறமை காரணமாகத்தான் இவ் அரிய வாய்ப்பு இவருக்கு கிட்டியது.மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும். இந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மருதமுனை மண்ணிற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இடதுகை வேகப்பந்து வீச்சாளரும் வலதுகை துடுப்பாட்ட வீரருமான அன்பஸ் கரீம் அம்பாறை மாவட்ட U19 பாடசாலை அணியின் ஒரு முக்கியமான வீரராவார். மென்பந்து போட்டிகளில் மருதமுனை Brisbane Sports Club விளையாட்டுக் கழகத்திலும் கடினபந்தில் Kalmunai Victorious அணியிலும் விளையாடிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மருதமுனையை சேர்ந்த முகம்மது பழீல் ஹிபத்துல் கரீம்,முகம்மது ஜுனைட் அகீலா தம்பதிகளின் மூன்றாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

MNM.Afras
0750576661
journulist