வள்ளுவம் பொங்கல் விழா !





 (வி.ரி. சகாதேவராஜா)


வாகரை பிரதேசத்தில் உள்ள வெருகல் கல்லரிப்பு பழங்குடிக் கிராமத்தில் வள்ளுவம் அமைப்பின் பொங்கல் விழா நேற்று முன்தினம் சிறப்பாக கிராமிய சூழலில் இடம்பெற்றது.

 அடிப்படை வசதிகள் எதுவும் மற்ற கல்லரிப்புக் கிராமத்தில் வள்ளுவம் அமைப்பு பொங்கலுக்கென புதிய உடுப்புகள் பொங்கல் பானை முதல் சகல பொருட்களையும் வழங்கி இந்த பொங்கல் விழாவை நடத்தி வைத்தனர்.

 அங்கு மலையக மக்களின் 200 வருட வாழ்வியல் சரிதத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அம்சங்களும் அங்கே இடம்பெற்றன.

கொழுந்து பறித்தல் தொடக்கம் மலையக கலை கலாசார பாரம்பரியங்கள்ளை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை வைத்தியசாலை வீதி என்று எந்த அடிப்படை வசதியும் அற்ற கல்லரிப்பு கிராமத்தில் 40 பழங்குடி குடும்பங்கள் வாழ்ந்து  வருகின்றன .

வள்ளுவம் அமைப்பினர் இந்த பொங்கல் விழா வழக்கம் போல செய்தனர். சமூக செயற்பாட்டாளர் ஆசிரியை மலர்ச்செல்வி இதற்கான ஒழங்கமைப்பை மேற்கொண்டிருந்தார்.

வள்ளுவம் அமைப்பு அந்த கிராமத்தை தத்தெடுத்து சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.