கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு





( வி.ரி.சகாதேவராஜா)
புத்தாண்டை முன்னிட்டு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் 35, கண்ணன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 52 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்  வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் அதிபர். தெ.பேரின்பராசா  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில்  ஆசிரியர்களான ந. நவகுமார், திருமதி. கி. விலோஜினி மற்றும் 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
ஏஎம்.ரிஸ்வான்,
சி.காந்தன், சி. துலக்சன் ஆகியோர் 
கலந்து கொண்டு 52 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான  கற்றல் உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.