Showing posts with label Culture. Show all posts

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாண பணிகளுக்கென ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ். கலீஸ், செயலாளர் எம்.எஸ். சஹுதுல் ஹலீம், பொருளாளர் எஸ்.எச். அபுல் கலாம் ஆகியோர் அடங்களாக பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் மருதமுனை மக்களின் பிரச்சினைகள், குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இதன்போது மருதமுனை பளீல் மௌலானா பௌண்டஷனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களையும் பௌண்டஷனின் நிறைவேற்று குழுவினரிடம் ஹரீஸ் எம்.பி கையளித்தார்
இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எஸ். உமர் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி MH. சேகு இஸ்ஸதீன் 80 வது அகவையில் கால் பதிக்கின்றார்.

இதனை முன்னிட்டு, அக்கரைப்பற்று  கடற்கரை  கொக்கோ கார்டன் முன்றலில்
வேதாந்திக்கு வெற்றி விழாக் கொண்டாட்டம் இன்று மாலை இடம்பெற்றது


 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு 
செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்று  11ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.

செல்வச் சந்நிதி ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சாரங்கன் குருக்களின் விஷேட பூஜை காலை 6 மணிக்கு இடம்பெறும்.

சாரங்கன் குருக்கள் பிரதான வேலை பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமியிடம் வழங்கி வழியனுப்பி வைக்கவிருக்கிறார்.

அதனையடுத்து மோகன் சுவாமிகளின் காலை ஆகார மகேஸ்வர பூஜை இடம்பெறும்.

பாதயாத்திரைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் சுமார்  60 யாத்திரீகர்கள் இணைந்து கொள்வதாகவும் பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.



இன்று சனிக்கிழமை பகல் ஆவரங்கால் சென்று இரவு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்குவார்கள்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது  குறிப்பிடத்தக்கது.

 


அக்கரைப்பற்று மன்பஉல் க்ஹைறாத் பெண்கள் அறபுக்கல்லூரியிலிருந்து 30 மாணவிகள் மௌலவியாக்களாக பட்டம்பெற்று இன்று வெளியாகின்றனர்.

2019 தொடக்கம் 2024 வரையிலான 05 வருட ஷரீஆ கற்கை நெறியை பூர்த்திசெய்த அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை, கல்முனை, இறக்காமம், பொத்துவில் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வெளியேறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.


அதன் போது  பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சடங்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரிடமும் ஏற்பாடு தொடர்பாக கலந்துரையாடினார்.
அங்கு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.

ஆலய தர்மகத்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகன், அனைவரும் இணைந்து இப்பெரும் சடங்கை நடாத்த அழைப்பு விடுத்ததுடன் நன்றியுரையுமாற்றினார்.

இறுதியில் இவ்வருட திருக்குளிர்த்தி விஞ்ஞானம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊர்ப்பிரசித்தம் தொடர்பான பட்டய நிகழ்வு இடம்பெறும்

சடங்குப் பெருவிழா எதிர்வரும்  13ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன்   ஆரம்பமாகின்றது.

இச்சடங்குப்பெருவிழா  தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று   எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 

இரண்டாம் நாள் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
20ஆம் திகதி திங்கட்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் மாலை 3 மணிக்கு பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

மறுநாள்(21) செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 27ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
.

மேலும் இந்நிகழ்வில் கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கர்கள், பரிபாலன சபையினர், பொலிஸ் உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், காரைதீவு பிரதேசத்தில் இயங்குகின்ற அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர், ஊடககர்கள்,பொது அமைப்புக்கள், கழகங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய அறநெறி ஆக்கற்திறன் போட்டிகளில் சாதனை படைத்த 40 அறநெறி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு திருக்கோவில் பாலக்குடா பாலவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையில் நேற்று (5)இடம் பெற்றது.

தேசிய ரீதியில்  தெரிவான குருகுல மாணவன் 
ஜெயராஜா யுவராஜ் உள்ளிட்ட நாற்பது மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் நடாத்தி வரும் 11 அறநெறிப் பாடசாலைகள் இணைந்து நாவுக்கரசர் பெருமானுடைய குரு பூசை தினத்தை சிறப்பாக நடாத்திய போது இக் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

 குருகுல ஸ்தாபகர் பணிப்பாளர் கண.இராசரெட்ணம் தலைமையில் குருபூஜையும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.

பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் த.உதயகுமார் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

 அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 தனித்துவமிக்க குரல் வளமுடைய பாடகரான உமா ரமணன் 69 வயதில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் சில மறக்க முடியாத பாடல்களைப் பாடியிருக்கிறார்.

உமாரமணன் பாடிய முக்கியமான 10 தமிழ்ப்பாடல்கள் இதோ.

1. பூங்கதவே தாழ் திறவாய்: பாரதிராஜா இயக்கத்தில் 1981ல் வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் உமா ரமணன் பாடிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடியிருப்பார் உமா ரமணன். 1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், இந்தப் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது.

இந்தப் பாடல் வெளியாகி 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் பரவலாக ஒலிக்கப்படுகிறது. பாடலின் இரண்டாவது பகுதியில், "திருத்தேகம் எனதாகும்" என தீபன் சக்கரவர்த்தி பாட ஆரம்பிக்க, உமா ரமணன் 'ம்ம்..' என ஹம்மிங் செய்வார். அது இந்தப் பாடலில் அதிகம் ரசிக்கப்பட்ட இடமாகும்.

2. ஆனந்த ராகம் கேட்கும் காலம்: 1981ல் பாரதி வாசு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பாடலின் துவக்கத்தில், வயலின், கீபோர்ட், கிடார் ஆகியவை இணைந்து ஒலிக்கும். அதன் பிறகு "ஆனந்த ராகம்" என உயரும் உமா ரமணனின் குரல் கவனிக்கப்பட்டது. இளம்பருவத்துக் காதலின் உணர்வைச் சொல்வதாக ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள், சற்றேனும் கடந்த காலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவார்கள் எனலாம்.

3. பூபாளம் இசைக்கும்: இளையராஜா இசையில் வெளியான தூறல் நின்னு போச்சு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாக்யராஜும் சுலக்ஷணாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கம். இந்தப் பாடலில் முதல் சரணம் முடியும்போது 'தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... னன னன னன னன னா னன னன னன னன னா' என்று உமா ரமணன் பாடும் இடம் அதிக ரசனைக்குரியது.


உமா ரமணன்

பட மூலாதாரம்,AV RAMANAN

படக்குறிப்பு,1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், பூங்கதவே தாழ் திறவாய் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது.

4. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு: 1983ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பானுப்ரியாவுக்கு இது முதல் படம். இந்தப் பாடலின் துவக்கத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளைப் பாடிவிட்டு, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு" என உமா ரமணன் துவங்கும்போது, அதிகாலையின் புத்துணர்வைத் தரும். இந்தப் படம் பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

5. செவ்வரளி தோட்டத்துல உன்னை நினைச்சேன்: 1983ல் ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பகவதிபுரம் ரயில்வே கேட்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை, கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு' என்ற பாடலும் மிகச் சிறப்பாக இருந்தாலும், இந்தப் பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடியிருப்பார். 80களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது.

6. கண்மணி நீ வரக் காத்திருந்தேன்: ஸ்ரீதர் இயக்கி 1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மோகனும் ஜெயஸ்ரீயும் பாடுவதாக வரும் இந்தப் பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். 'அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகேஏஏ' என உமா ரமணனின் குரல் உயரும் இடம் முக்கியமானது.

7. யார் தூரிகை தந்த ஓவியம்: இந்தப் பாடலை பார்த்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், 80களில் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 'பாரு பாரு பட்டணம் பாரு' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். இளையராஜாவின் இசை, உமா ரமணனின் குரல், கங்கை அமரனின் வரிகள் இணைந்து இந்தப் பாடலை கவனிக்க வைத்தன.


உமா ரமணன்

பட மூலாதாரம்,GNANAPRAKASAM

படக்குறிப்பு,இளம் வயதில் உமா ரமணன்

8. நீ பாதி நான் பாதி கண்ணே: வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி படத்தில் கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடிய பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல், சோகத்திற்கான சக்ரவாக ராகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜேசுதாஸ் - உமா ரமணனின் குரல்கள், கேட்பவர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. இடையிடையே வரும் கிடார் இசை ஒரு போனஸ்.

9. ஆகாய வெண்ணிலாவே, தரை மீது வந்ததேனோ: 1990ல் ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலை, கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடியிருந்தார்கள்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் பாடல்களின் தொனியில் உருவாக்கப்பட்ட இசையில், நவீன இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடலைக் கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா. பாடலை "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று ஜேசுதாஸ் ஆரம்பித்தவுடன், "அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ" என்று உமா ரமணன் பின்தொடரும்போதே முழு பாடலையும் கேட்ட திருப்தி ஏற்பட்டுவிடும்.

"தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம். பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம். வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம். கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்" என்று செல்லும் பாடல் வரிகளை எழுதியவர் வாலி.

10. நில் நில் நில்.. பதில் சொல் சொல்: பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் 1995ல் வெளியான 'பாட்டுப் பாடவா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இந்தப் பாடலையும் உமா ரமணனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்தப் பாடலின் வரிகளே இதற்கு ஒரு தனித்துவத்தைத் தந்தன என்றாலும், உமா ரமணனின் குரல் கூடுதல் இனிமையைச் சேர்த்தது.


 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும்  காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும் இணைந்து நடாத்திய

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த 
 அடிகளாரின் 
துறவற தின
 நூற்றாண்டு விழா
அங்குரார்ப்பண நிகழ்வில் விபுலாநந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் களைகட்டிய போது...


(  வி.ரி.சகாதேவராஜா)

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் ஆகியவற்றின் 17 வது பெருந்தலைவர் அதிவணக்கத்துக்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜீ தனது,
 சங்க குருவிற்கான வாசஸ்தலத்திற்கு இன்று(2) வியாழக்கிழமை எழுந்தருளினார்.

அந்த நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷனின் உயர்பீட சுவாமிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார்.


அவர்  கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பேலூர் மடத்தில் நடைபெற்ற மடத்தின் அறங்காவலர்கள் குழு மற்றும் மிஷனின் நிர்வாகக் குழு கூட்டத்தில்
 ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் 17 வதுதலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவயது நியமனத்தை அடுத்து இந்திய பிரதமர் மோடி நேரடியாக சென்று அவரை வாழ்த்தியிருந்தார்.

அகில உலக ராமகிருஷ்ண மிஷனின் 16 வது  பெருந்தலைவர் அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ்  கடந்த மாதம்  தனது 94 வது வயதில் இயற்கையெய்தியதை அடுத்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் மெதடிஸ்த திருச்சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நேற்று (01) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவில் சேகரும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையினூடாக இடம்பெற்ற 150 ஆவது ஆண்டு நிறைவும் நன்றி செலுத்தும் வழிபாடுகளிலும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்னமுகத்துவார மெதடிஸ்த திருச்சபையின் சபைக்குரு அருட்பணி டொனேற்றா மைக்கல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறப்பு இறை செய்தியாளர் முன்னாள் திருப்பேரவையின் செயலாளரும் வெள்ளவத்தை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குருவுமான அருட்பணி கிங்சிலி வீரசிங்க மற்றும் திருக்கோவில் சேகர முகாமைக்குரு அருட்பணி ஈஸ்வரன் உள்ளிட்ட அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் சபை ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருகை தந்தவர்கள் பாண்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தலைமைக் கொடியும் சேகர கொடியும் சபைக்கொடியும் ஏற்றப்பட்டு ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது திருச்சபையின் 150 வருட வரலாறு வாசிக்கப்பட்டதுடன் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கீதம் புதிதாக உருவாக்கப்பட்டு பாடப்பட்டு வெளியிடப்பட்டமை சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து அருட்பணி கிங்சிலி வீரசிங்க அவர்கள் இறை செய்தியினை வழங்கினார்.
இதன் பின்னராக ஞானஸ்த்தானம் திடப்படுத்தல் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 150 ஆவது ஆண்டு நிறைவாக மூத்த உறுப்பினர்களால் கேக் வெட்டப்பட்டது.
தொடர்ந்து கடந்த 20 வருடகாலத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு கலந்து கொண்ட அருட்பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


 


( வி.ரி.சகாதேவராஜா)


தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதிஸ்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

 சமுர்த்தி பிரிவின் தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம் முகாமைத்துவ பணிப்பாளர் பி.கமலேஷ்வரன் விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வலய வங்கி உதவி முகாமையாளர்கள்,வங்கி வலய கள உத்தியோகத்தர்கள்,திட்ட உதவியாளர்,சமூர்த்தி தலைமை காரியாலய ச.அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்ட ,வங்கி க.பா.சபைத் தலைவர்கள்,வர்த்தக.ச.தலைவர் உறுப்பினர்கள்,சமூர்த்தி உற்பத்தியாளர்கள்,ச.வங்கி வாடிக்கையாளர்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 



#Rep.Asraf. a.Samad,.

இலங்கைக்க விஜயம் மேற்கொண்டுள்ள இரான் ஜனாதிபதி, கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலுக்கு இன்று மாலை விஜயம் செய்தார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


குரோதி சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும்  இணைந்து நடாத்திய 26வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலை நிகழ்ச்சிகள்  கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை காலை மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக  ஆரம்பமாகியது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

கழக போசகர்களான சிவ.ஜெகராஜன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு கிலோமீட்டர் நீள மரதன் ஓட்டத்தில் ஏழு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 காரைதீவு பொலிசார் மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன.


( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26 வது மாபெரும்  கலாச்சார விளையாட்டு விழா எதிர்வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெற இருக்கிறது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கும் கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.


சீர்பெறு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான எந்திரி என் .சிவலிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப்பணிப்பாளர் யு. சிவராஜா ஆகியோரும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் மற்றும் ஏனைய சிறப்பு நட்சத்திர  கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

 இந்த நிகழ்விலே விசேடமாக காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய "விபுலவிருட்சம்" என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது. அத்துடன் கல்வித்துறை சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்று கழக செயலாளர் எஸ்.கிரிசாந்த் தெரிவித்தார்.


( வி.ரி. சகாதேவராஜா
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு  கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களின் சித்திரை புத்தாண்டு
விளையாட்டு விழா இடம் பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பரிசுகளை வழங்கி வைத்தார். 



வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய புது வருடப்பிறப்பை முன்னிட்டான கைவிசேட நிகழ்வு இன்று இடம் பெற்ற போது...


வி.சுகிர்தகுமார் 0777113659 



  சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


  
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை 
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங் 
களைச் சேர்ந்த பள்ளிவாசல்களில் கடமையாற்றும்  நாபீர் 
பவுண்டேஷன் மூலம் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கல்முனை நூராணியா பள்ளிவாசலில் நாபீர் 
பௌண்டேஷனின் ஸ்தாபகர் பொறி 
யியலாளர்  உதுமான்கண்டு 
நாபீர் தலைமையில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்றது.

இங்கு நாபீர் 
பௌண்டேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாயிஸ் கரீம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுக்கிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன.


ஆனால், உலகளவில் முக்கியமான இது போன்ற ஒரு நிகழ்வு எப்போது நிகழும் என்பது முடிவுசெய்யப்படுவது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.


இது ஏன் என்று, பிபிசி செய்தியாளர்களான அஹ்மென் கவாஜா மற்றும் அமீர் ரவாஷ் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றனர்.


இஸ்லாத்தில் சந்திரனின் முக்கியத்துவம்

ரமலான் மாதம் முடிவடையும் நேரத்தில், உலகிலுள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் பலர் வானம் மேகமூட்டமின்றி இருக்கவேண்டும் என்று வேண்டியபடி இருப்பார்கள். காரணம், ரமலான் விருந்து துவங்குவதற்கான சமிக்ஞையைக் காணவேண்டி.


ரமலான் துவங்குவதைப் போலவே, இதுவும் பிறையைக் காண்பதிலிருந்து துவங்குகிறது.


இஸ்லாம், நிலவின் கட்டங்களின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறது. ரமலான் அதன் ஒன்பதாவது மாதத்தில் துவங்குகிறது.


ஒவ்வொரு ஆண்டும், சந்திர நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முந்தைய சூரிய ஆண்டில் நடந்ததற்கு 11 நாட்களுக்கு முன்பு நடைபெறும்.


சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் அவர்கள் ரமலானை எப்போது கொண்டாடுகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது.


இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள், விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கிறார்கள்.


காஸாவில் 'துயரமான' ரமலான்: போரில் தாயையும் தந்தையையும் இழந்த குழந்தைகள் பெருநாளைக் கொண்டாட முடியாமல் தவிப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சூரிய கிரகணத்தின் போது ராட்சத ஆமைகள் உற்சாகமாக இனச் சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?


இஸ்லாத்தின் முக்கியமன மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன


இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்திருந்தால், பருவங்கள் அனைவருக்கும் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனால், உலகின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கோடையில் ரமலானைக் கொண்டாடுவார்கள், அங்கு பகல் நேரம் நீண்டதாக இருக்கும். மற்ற பகுதிகளில் குளிர்காலமாக இருக்கும், எனவே பகல் குறுகியவையாக இருக்கும்.


ஆனால், சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் ரமலானை கடைபிடிக்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்வின் 33 வருடங்களில் நீண்ட நோன்பு நாட்கள், குறுகிய நோன்பு நாட்கள் ஆகிய அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.

ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.


ஆனால் இஸ்லாத்தில், இந்நாள் உண்மையில் எப்போது வருகிறது என்ற விவாதம் உள்ளது.


பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் உண்மையில் பிறை நிலவு வானில் காணப்பட்ட பின்னரே புதிய மாதத்தைக் குறிக்கின்றனர்.


இது பொதுவாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களால் செய்யப்படுகிறது, தனிநபர்களால் அல்ல.



இந்த ஆண்டு ஈத் பண்டிகை எப்போது?

சந்திரனைப் பார்த்து ஈத் பண்டிகையை நிர்ணயம் செய்பவர்கள், அவர்கள் உலகில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஏப்ரல் 9 (செவ்வாய்), ஏப்ரல் 10 (புதன்கிழமை), ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) ஈத் பண்டிகை அமையும்.


சந்திரனின் முதல் பிறை உண்மையில் இரவு வானத்தில் எப்போது தெரியும் என்பதைப் பொறுத்து, சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், இதைச் சரிபார்க்க ஈத் முன் இரவு வரை இஸ்லாமியர்கள் காத்திருக்க வேண்டும்.


வானில் பிறையைப் பார்ப்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தை நோட்டமிடத் துவங்குவார்கள். அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் மாதத்தின் 29-வது நாளில் இந்த பிறையைத் தேடுவார்கள்.


அவர்கள் பிறையைக் கண்டால், மறுநாள் ஈத் கொண்டாட்டங்கள் நடக்கும்.


இல்லையென்றால், 30 நாள் மாதத்தை நிறைவு செய்ய இன்னும் ஒரு நாள் நோன்பு இருக்கவேண்டும்.


பிரிட்டனின் ‘HM Nautical Almanac’ அலுவலகத்தின்படி, ஈத் பண்டிகை, ஏப்ரல் 10 புதன்கிழமை அன்று அமைகிறது.



படக்குறிப்பு,

பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்


இஸ்லாமிய நாடுகள் ஈத் பண்டிகையை எப்படி முடிவு செய்கின்றன?

ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்.


உதாரணமாக, சௌதி அரேபியாவில் உள்ள அதிகாரிகள் - இஸ்லாத்தின் பிறப்பிடமாக இருந்த சுன்னி ஆதிக்கம் செலுத்தும் நாடு - பார்வையால் சந்திரனைக் கவனிக்கும் பொதுமக்களின் சாட்சியங்களைப் பொறுத்து ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிக்கிறது.


பல நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.


ஆனால், ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், சந்திரனைக் கண் பார்வையால் அவதானிப்பதைச் சார்ந்து இருக்கும் அரசாங்க அறிவிப்பைப் பின்பற்றுகிறது.


பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்கள் மற்றும் சுன்னி சிறுபான்மையினரைக் கொண்ட இராக், இந்த இரண்டு முறைகளின் கலவையைப் பின்பற்றுகிறது. அங்கு ஷியா மக்கள் செல்வாக்குமிக்க மதகுரு கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியின் அறிவிப்பைப் பின்பற்றுகிறார்கள். சுன்னி சிறுபான்மையினர் அவர்களின் சொந்த மதகுருக்களைப் பின்பற்றுகிறார்கள்.


அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடான துருக்கி, ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானிக்க வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்துகிறது.


ஐரோப்பாவில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த சமூகங்களின் தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.



ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்


தமிழ்நாட்டில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 9) பிறை தென்படதாக அறிவித்து, இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) ஈத் பெருநாளை அறிவித்துக் கொண்டாடிவருகின்றன. இது தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்புக்கு எதிராக இருப்பதாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர் அப்துல் கரீம் இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.


அவர், பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் பிறையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, என்றார். “அதுவும், பிறை வானில் இருந்தால்மட்டும் போதாது, அது கண்ணுக்குத் தெரியவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.


“இதன் அடிப்படையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாட்டை 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-25 கிளைகள் உள்ளன. இவற்றில் பிறை வானில் தெரிவதைக் கண்காணிக்கக் குழுக்கள் உள்ளன. மாநில நிர்வாகிகள் இடையேயும் பிறை கண்காணிப்புக் குழு உள்ளது. இது ரமலான் மாதம் மட்டுமல்ல. அனைத்து மாதங்களும் நடைபெறுகிறது,” என்றார்.


மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தலைமை காஜி, கடந்த காலங்களில் அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிறையைப் பார்த்ததாகச் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பிறை தெரிந்ததாகச் சொல்லப்பட்டால் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் நபிகள் சொன்ன வழிமுறைப்படி அவர்கள் இல்லை. அதனால் பிறை விஷயத்தில் அவர்களை நம்புவதில்லை,” என்றார்.


“அதனால் தான் நாங்கள் தனியாகக் குழுக்கள் அமைத்து பிறையைக் கண்காணிக்கிறோம். அதனடிப்படையில் கோவையிலும் கன்னியாகுமரியிலும் பிறை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. எங்கள் நிர்வாகிகள் சென்று அதனை உறுதிப்படுத்தி அறிவித்து இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) பெருநாள் கொண்டாடினோம்,” என்றார்.


முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவில் பிறை தெரியாததால், வியாழக்கிழமையன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.