Showing posts with label Eastren. Show all posts

  


( வி.ரி. சகாதேவராஜா)


அரசாங்கத்தின் புதிய திட்டமான சமூக நலன்புரி சேவை திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் நிகழ்நிலை( online) மூலம் பயனாளிகளின் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

 அந்த அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் விண்ணப்பிக்கப்பட்ட 7430 பயனாளிகளுக்கான தரவுகளைப் பெறுவதற்கான online வேலைத்திட்டம் நேற்று(10) வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

 திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனின் தலைமையில் இந்த online நிகழ்ச்சி திட்டம் காஞ்சிரங்குடா கிராமத்தில் நேற்று
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 காஞ்சிரங்குடாவில் உள்ள 140 குடும்பங்களில் நேற்று 15 குடும்பங்கள் இந்த நிகழ்நிலை online தரவு சேகரிப்பிற்கு  உள்ளானது.

 பயனாளிகள் தொடர்பாக அநேக விடயங்கள் online சேகரிப்பில் உள்வாங்கப்படவிருப்பதால் இந்த வேலைத் திட்டம் சுமார் மூன்று மாதங்கள் இடம்பெறலாம் என்று உதவி பிரதேச செயலாளர் சதீஸ்  தெரிவித்தார்.


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின்    வழி காட்டலின் கீழ்    விளையாட்டு கழகங்கள்  இணைந்து  கல்முனை மாநகர  எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று குப்பை கூழங்கள் டெங்கு ஒழிப்பு   நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் போது சுமார்  100 க்கும் மேற்பட்ட வீடுகளில் தேங்கி காணப்பட்ட திண்மக்கழிவுகள்  மாநகர சபையின் உதவியுடன் அகற்றப்பட்டதுடன்  நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட பல பிரதேசங்களும் விளையாட்டுக்கழக வீரர்களால் சுத்தம் செய்யப்பட்டன.

 
இதன் போது  நியூ  ஸ்டார் விளையாட்டு கழகம் சைனிங் விளையாட்டு கழகம் உள்ளிட்ட அப்பகுத இளைஞர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



தம்பாளை ஆற்றில் நீரில் முழ்கி காணாமல் போன காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் (வயது46) அவர்களின் மகளின் ஜனாஸாவும் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் (46) என்பவரும் அவரது 13 வயது மகளும் பொலன்னறுவை-தம்பாலை ஆற்றில் நீரில் முழ்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது


 


அக்கரைப்பற்று அம்பாரை வீதியில், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றவர் லொறி ஒன்றுடன் மோதி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளப் பாதுகாகப்பு வீதியினைச் சேர்ந்த சப்ரின் (26) வயதுடைய இளைஞரே உயிரழந்தவராவார்.


ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாரலயில் வைக்கப்பட்டுள்ளது.


மாளிகைக்காடு நிருபர்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லயன்ஸ் கிளப் அமைப்பினால் 3.5  மில்லியன் ரூபா பெறுமதியான Multi Parameter Monitors மற்றும் Oxygen Cylinders வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் கனீபா அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிய பணிப்பாளர் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அதற்கான உபகரணங்களை பெறுவதற்கும் குறித்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  Lions Club நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
 
குறித்த கண் சத்திர சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து மாதாந்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் சம்மாந்துறை பிரதேச மக்கள் மாத்திரம் இன்றி ஏனைய பிரதேச மக்களும் பயன் பெறுவார்கள் என்று பணிப்பாளர் இந்நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். குறித்த நிகழ்வில் பணிப்பாளர் அவர்களுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனீபா லயன்ஸ் கிளப் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி அமைப்பினர் திட்டமிடல்  வைத்தியர் நியாஸ் அகமட் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் பங்குபற்றினார்கள்


( வி.ரி. சகாதேவராஜா)

 இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் "தூய்மையான  நகரத்தினை உருவாக்குவோம்" எனும் செயல் திட்டத்தின் கீழ் 
திருக்கோவில் பிரதேசத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 "தூய்மையான  நகரத்தினை உருவாக்குவோம்" திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது .அவற்றில்  திருக்கோவில்  பிரதேச செயலகமும் ஒன்றாகும்.

இதனடிப்படைல்  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா.கஜேந்திரன்  தலைமையில்  பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.பிரபாகரனின் ஒருங்கமைப்பில்  அரச  திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் இளைஞர் கழகங்கள் விளையாட்டு கழகங்கள் முப்படையினர் பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்கள்  ஆகியோரின் பங்களிப்புடன்  இச் சிரமதானம் இடம் பெற்றது.


 இத்திட்டமானது தொடர்ச்சியாக ஏழுநாட்கள் ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் திருக்கோவில்  பிரதேச செயலக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்  உதவிச் செயலாளர் க.சதிசேகரன் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவை மண்றத்தின் உதவி பணிப்பாளர்  ஏ.கங்கா தமயந்தி சாகரிகா  மற்றும் மாவட்ட தேசிய இளைஞர் சேவை அதிகாரி எம்.மஜீத் மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மோகனகாந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மோகனராஜா, கிராம நிர்வாக உத்தியோகத்தர்  எஸ்..கந்தசாமி, மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும்  பிரதேச செயலக  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தினர் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


( எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 75ஆவது தேசிய சுதந்திர தின விழா,இன்று (4)கல்முனை வாசலில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் 
ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,கௌரவ அதிதியாக  மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,நிகழ்வின் ஆரம்பமாக நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின் தேசிய கொடியை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஏற்றிவைத்தார் .

பின்னர் நாட்டுக்காகஉயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
மாநகரில் மர நடுகையும் இடம்பெற்றது 

இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,மாநகர சபை உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயர் அதிகாரிகள்,
கல்முனை வலயக்கல்வி பணிப்பளர்,
பொலிஸ் மற்றும் விசேடஅதிரடிப்படை உயர் அதிகாரிகள் மாநகர சபை உத்தியோகத்தர்கள்,அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியாக மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் நன்றியுரை நிகழ்த்தினார்.


வி.சுகிர்தகுமார் 0777113659  


  75ஆவது பவள விழா தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் அரச நிறுவனங்களிலும் சிறப்பாக உணர்வு பூர்வமாக இன்று (04) கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் சோபிதா திட்டமிடல் பணிப்பாளர் ஹ}{சைன்டீன்  தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சர்வமத சமய அனுஸ்டானம் இடம்பெற்றது. பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு  மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் மரநடுகையினை பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய அலுவலக உதவியாளர் திருநாவுக்கரசு நாட்டி வைத்தமை சிறப்பம்சமாக அமைந்தது.
பிரதேச செயலாளரின் உரையில் நமது ஆரம்ப கல்வி முதல் பல்கலைக்கழகம்வரைக்கும் பொதுமக்களின் வரிப்பணம் எனும் முதலீட்டின் ஊடாக கல்வி கற்று படித்தவர்கள் எனும் பெயரோடு வாழ்ந்து வருகின்றோம். அதன் பிற்பாடும் அரச தொழிலை பெற்று அதன் மூலம் பெறும் சம்பளம் தொடக்கம் ஓய்வூதியம் வரைக்கும் பெறும் மிகப்பெரும் தொகை பணமும் பொதுமக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்றார்.
கல்வி கற்கும் காலம் முதல் ஓய்வூதியம் பெறும் வரைக்கும் நமக்காக செலவு செய்யும் பணத்தை கணக்கிட்டு பார்த்தால் குறைந்தது ஒருநாள் 50 ஆயிரம் ரூபாவை அரச உத்தியோகத்தர்கள் பெறுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு பெறும் சம்பளத்திற்கு ஏற்றதுபோல் மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய சேவையின் அளவும் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பிரதேச செயலகம் எனும் போது ஏனைய அரச திணைக்களங்களை விட அதிக பொறுப்பு வாய்ந்தது. மக்களது வாழ்வாதரத்தை உயர்த்துவதில் அதிக அக்கறையுடன் செயற்படவேண்டிய அரச நிறுவனம். பிரதேசத்தில் உள்ள வளங்களை கொண்டு உச்சபயன்பாடு பெறும் வகையில் செயற்படுத்தி மக்களின் தொழில் மட்டத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


 (எம்.என்.எம்.அப்ராஸ்)


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு  புதன்கிழமை (01) மாலை இடம்பெற்றது. 

கலை கலாசார பீடத்தினால் பிராந்திய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்,பாரிய கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதான பணி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்,பணியாளர்கள்,பிராந்திய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில்,பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எம்.ஹனஸ், சமூக நலன்புரி செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஐ.எல்.மொஹமட் சாஹிர்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், இலங்கை இராணுவத்தின் 24ஆம் மற்றும் 241ஆம் காலாட்படை பிரிவுகள் என்பன இணைந்து சுத்தப்படுத்தல் பணியினை முன்னெடுத்தனர்.

கடற்கரையை சுத்தப்படுத்தும் இந்நிகழ்வில் ஏறத்தாழ 200 தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

பல்கலைக்கழக சமூக உறுப்பினர்கள்,அம்பாரை மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் 
வீ. ஜெகதீசன்,அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். றியாஸ்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் ஷாபி, 24ஆவது காலாட்படை பிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல சந்திரசிறி,241ஆவது படைத் தளபதி கேணல் தணிக பத்திரத்ன,11ஆவது இலங்கை கடற்படையின் பிரதான அதிகாரி புபுது ஹெட்டியாராச்சி மற்றும் ஒலுவில் மீனவ சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

'சுற்றுச்சூழலை வளப்படுத்துவதன் மூலம் சமூக செழிப்பு' என்பது இந்நிகழ்வின் முக்கிய கருப்பொருளாகக் காணப்பட்டது. 

ஒலுவில் கடற்கரையை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, கடற்கரையோரம் 100 மரக்கன்றுகள் நடும் வகையில் மரம் நடுகை நிகழ்ச்சியும் முன்னெடுக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

கலை மற்றும் கலாசார பீடத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொருளாதார மாணவர்கள்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான பிரயோக அறிவை நேரடியாகப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ   கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்து  கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவுவதாக  உறுதியளித்துள்ளார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் விளையாட்டரங்கொன்றினை கல்லூரியில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. தமயந்த விஜயஸ்ரீ  கடந்த செவ்வாய்க்கிழமை(31) அன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இலங்கை டெனிஸ் சங்கத்தின் (Sri Lanka Tennis Association) உறுப்பினர் என்ற வகையில், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளுள் ஒன்றாகிய கல்முனை ஸாஹிறாவில், டெனிஸ் விளையாட்டரங்கினை அமைப்பதில் தான் முன்னின்று செயலாற்றவுள்ளதாகவும், இதற்காக இலங்கை டெனிஸ் சங்கத்தின் ஒத்துழைப்பு பெறப்படுமெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கல்லூரியில் இதற்கான இடத்தை அடையாளம் காண்பது தொடர்பிலும், இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமான முதற்கட்டக் கலந்துரையாடல் கல்லூரி அதிபர் திரு எம்.ஐ.ஜாபிர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்தும் அடுத்த கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, விரைவில் கல்லூரியில் டெனிஸை அறிமுகப்படுத்துவதென பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்  கல்லூரியின் பிரதி அதிபர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பாடசாலை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

இவ்விளையாட்டரங்கை கல்லூரிக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க முயற்சிகளை கல்லூரியின் அதிபருடன் இணைந்து, பழைய மாணவர் சங்க உப தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான்   மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


  இரண்டு சிறுநீகங்களையும் இழந்த தாய்க்கு  மாதாந்த கொடுப்பனவை மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் வழங்கி வருகிறது.

 ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் பு.ரமணன் அந்த நிதி உதவியை நேற்று முன்தினம் குருமண்வெளியில்  வழங்கி வைத்தார்.

 இதேவேளை, மண்டூர் தம்பலவத்தை பகுதியில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவருக்கு சக்கர நாற்காலியையும் வழங்கி வைத்தார்.
அச்சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)  


தேசிய ரீதியில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது  இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் கௌரவிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர்  டாக்டர்.இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜே. மதன் , வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதியபரிபாலகர்கள் திருமதி சுஜேந்திரன், திரு சசிதரன் ,நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


பாறுக் ஷிஹான்


அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும்  பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (29) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய கலந்து கொண்டதுடன் மத அனுஸ்டானம், மறைந்த அங்கத்தினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் வரவேற்புரை உப தலைவர் ஏ.எம்.அமீர் ஜேபி நிகழ்த்தினார்.

கடந்த வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் மேற்கொண்டு வருடாந்த அறிக்கை மற்றும் தீர்மானங்களை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் ரீ.குணநாதன் சமர்ப்பித்து உரையாற்றினார்.அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஆர்.கே.ஜாகொட தமிழ் பாடல் ஒன்றினை பாடினார்.பொதுச்செயலாளரின் உரை இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எஸ்.எம். பைஸர் ஜேபி காதல் கவிதை ஒன்றினை வாசித்தார்.சிலோன் மீடியா போரம் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீட்  அஞ்சல் சேவையின் முக்கியத்துவம் தொடர்பில் உரையாற்றினார்.,அங்கத்தவர்களுக்கான நேரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து முன்னாள் பிரதி அஞ்சல் மா அதிபதியும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான ஜெயானந்தி திருச்செல்வம் பொன்னாடை மற்றும் நினைவு சின்னம்  கடந்த கால சேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர்   நடப்பு வருடங்களுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தின்  UPDO NEWS எனும் செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் பாடல்கள் கௌரவிப்பு நன்றியுரை என நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் வைபவத்தில்  தபால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஏற்பாட்டாளர் தலைவர் சிந்தக பண்டார உள்ளிட்ட   கிழக்கு மாகாண  அக்கரைப்பற்று  மட்டக்களப்பு அம்பாறை  அஞ்சல் அத்தியட்சகர்  பிரிவிலுள்ள தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும்  அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான  திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.


 முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான  திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்  ஊழியர்கள் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார்கள். எனது சேவை காலத்திலும்   தபால் திணைக்களத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை  யாராலும் மறுக்க முடியாது.

தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால் தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள் வெறுமனே போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.


அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்திற்கு இத் தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.

தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு அதன் உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும். என்றார்.

 


மாளிகைக்காடு நிருபர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.ரிஸ்பின் அவர்களினால் தாய் சிசு போசாக்கு திட்டத்தின் கீழ் தாய்மார்களின் குருதிச் சோகை நோயை குறைப்பதற்காகவும் முகாமைத்துவம் செய்வதற்காகவும் திருக்கோவில் தங்க வேலாயுதபுரம் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் போசனை மிகுந்த பயிர் இனங்களை நடும் நிகழ்வு நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 கல்முனை சுகாதார பிராந்தியத்தில் தாய்மார்களின் குருதிச் சோகையின் அளவு 28 வீதமாக காணப்படுகின்றது அதேபோன்று பொத்துவில் மற்றும் இறக்காமல் பிரதேசங்களில் 40% காணப்படுகின்றது இதனை குறைத்து தாய்மார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களின் கீழ் ஒரு பகுதியாக போசனைக் கன்றுகளை நடும் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த நிகழ்வில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச வைத்திய வைத்திய அதிகாரி பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களும்  பங்குபற்றினார்கள். குறித்த திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட செயலகம், திருக்கோவில் பிரதேச செயலகம், விவசாயத் திணைக்களம், Assets Based Community Development organization என்பன  ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

 


(மாளிகைக்காடு நிருபர்)


நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக அனைவருக்குமான உரிமைகளும் சேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுதல் வேண்டும். என்ற அடிப்படையில் ACTED நிறுவனத்தின் அணுசரனையில்  இறக்காமம் ஹிக்மா சகவாழ்வு மன்றம் இணைந்து செயற்படுத்தும் "சகவாழ்வை கட்டியெழுப்புவதில்  இளைஞர்களின் பங்களிப்பு" எனும் செயலமர்வு அம்மன்றத்தின் தலைவர் எம்.ஐ. பாயிஸ் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி. அஹமட் நஸீல் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் இந்திரசிறி யசரட்ன பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற இனவெறுப்பு செயற்பாடுகளின் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை.  நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத் திட்டம் முதலில் மக்களின் நேரடி பங்கேற்பின் ஊடாகவே சகவாழ்வை உறுதிப்படுத்க முடியும். இந்நிகழ்விற்கு, வடக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் ஏ.அமீர் சிறப்பு வளவாளராக கலந்து கொண்டார். மேலும், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.சாமிலா, எம்.எல். கிஷோர் ஜஹான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம். சபானா உட்பட சகவாழ்வு மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்


 ( எம்.என்.எம்.அப்ராஸ்)


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா உத்தியோகத்தர்களாக சேவையாற்றி கடந்த (31.12.2022 )ஆந் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் அங்கத்தவர்களுக்கான பிரியாவிடை மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்சங்கத்தின் நலன்புரி நிதியத்தினால் வழங்கப்படும் நலன்புரி நிதி  வழங்கும் நிகழ்வானது அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது.

 
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் நலன்புரி நிதியத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்குறித்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர்,செயலாளர். எம்.ரீ.ஹசீர் அஹமத்,பொருளாளர் எம்.ஜி. றோசான்,நலன்புரி செயலாளர் எம்.எம்.எம்.
காமில் மற்றும் ஊழியர் சங்கத்தின் நிருவாக செயற்குழு உருப்பினர்களுடன் ஊழியர் நலன்புரி நிதியத்தின் செயலாளர். எம்.எம்.ரம்சீன்,பொருளாளர் எம்.எச்.எம். நசார் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் ஓய்வு பெறும் ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான ரூபா.1,253.000.00 பெறுமதிமிக்க ஊழியர் சங்க நலன்புரி நிதியத்தின் நிதிக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா உத்தியோகத்தர்களாக கடமையாற்றி சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அங்கத்தவர்களானஏ.ஆர். ஹாப்தீன்,ரீ.எம். பாரூக்,
யூ. கே.எம். ஹுசைன்,எஸ்.எல்.எம். ஹைதர்,கே. கணேஷ்,பீ.ரீ. ராசிக்,எம்.பி. முகம்மத் தம்பி,
எம். வை.  அஷ்ரப்,ஏ.அசனார்,மற்றும் கடமை நேரத்தில் சுகவீனமடைந்து மரணமெய்திய உத்தியோகத்தர் மர்ஹூம் ஏ. சரூக்,ஆய்வுகூட உதவியாளர் அவர்களின் மகன் மற்றும் உறவினர் ஒருவரும் கலந்து சிறப்பித்ததுடன் தங்களுக்கு உரிய நலன்புரி நிதியத்தின் காசோலைகளை பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


பாறுக் ஷிஹான்


மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை  ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

தமிழரசுக்கட்சி வடகிழக்கு 8 மாவட்டங்களில் வீட்டு சின்னத்தில் தனித்து   போட்டியிடுகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பங்காளிக்கட்சிகள் பிரிந்து கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமையே அதற்கான காரணமாகும்.குறிப்பாக இந்த தேர்தல் முறைமையினால் இவ்வாறான பிரிவு நிலை ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 7 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுகின்றது.இதில் அழிவின் விழிம்பு வரை காரைதீவு நாவிதன்வெளி பிரதேச சபைகள் இருந்து வருகின்றன.இரு சமூகங்களும் வாழுகின்ற சபைகளாக இவ்விரு சபைகளும் இருக்கின்றன.

தற்போது காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ஒரு மைதானத்தில் விளையாடுவது போன்று இறக்கப்பட்டுள்ளார்கள்.12 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் 11 ஆசனங்களுக்காக 196 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் வேட்பாளர்கள் ஏன் களமிறங்கியுள்ளார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் இத்தேர்தலில் மேற்கூறியவர்கள் இறங்கியுள்ளனர்.எனவே  எமது இருப்பை தக்கவைக்க வாக்களியுங்கள்.போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற கட்சிகள் சுயேட்சைக்குழுக்களின் செயற்பாட்டிற்கு மக்கள் துணை போக கூடாது.எமது ஆட்சிக்காலத்தில் பல விடயங்களை இச்சபையில் இருந்து மேற்கொண்டுள்ளோம்.எமது செயல்களையும் நாங்கள் செய்த செயற்பாடுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம்.

நிச்சயமாக இம்முறையும்  வீட்டுச்சின்னத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இந்த மக்களைசில சுயேட்சைக்குழுக்களும் கட்சிகளும்  மூளைச்சலவை செய்ய முற்படுகின்றன.எனவே போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என குறிப்பிட்டார்.

 


பாறுக் ஷிஹான்


தேர்தலுக்காகவே நாம் தற்காலிகமாக பிரிந்து நிற்கின்றோம். அம்பாறை மாவட்டத்திலே தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு சபைகளில் போட்டியிடுகின்றோம்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.


அம்பாறை கச்சேரியில் நேற்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வரும் போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொட்டும் மழையில்
அவருடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் கருத்து தெரிவித்தார்.

கலையரசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்..

நாம் திருக்கோவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை பொத்துவில் நாவிதன்வெளி சம்மாந்துறை ஆகிய ஏழு சபைகளிலே நாங்கள் போட்டியிடுகின்றோம். மக்களின் தெரிவின்படி பெற்ற வேட்பாளர்களை வைத்து இந்த போட்டியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம்.

நிச்சயமாக ஜனநாயகம் முறைப்படி மக்கள் எமக்குரிய ஆணையை தருவார்கள் என்பதிலே 100 வீத நம்பிக்கை இருக்கின்றது . தமிழ் தேசியக் கூட்டமைப்பான எமது பிரிவு தற்காலிகமானது. தேர்தலிலுக்காகவே நாங்கள் பிரிந்தோம். பிற்பாடு அனைவரும் இணைந்து செயல்படுவதற்கு நூறு வீதம் தயாராக இருக்கின்றோம். என்றார்.


 

( எம்.என்.எம்.அப்ராஸ்)

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப் (GCERF) நிறுவனத்தின் நிதியுதவியுடன்  ஹெல்விடாஸ் (HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின் கீழ் உள்ள பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து சிரமதான பணி
காரைதீவு பிரதேச செயலக பிரிவில்,மாவடிப்பள்ளி கிழக்கு கிராம சேவகர் காரியாலத்தில் காரைதீவு பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் இணைப்பாளர் இசட்.எம்.நஸ்கான் தலைமையில்,அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக்அலி,
மாவடிப்பள்ளி கிழக்கு கிராம சேவகர் ஏ.எம்.எம்.
அலியார்,காரைதீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்.பரீட்,மாவடிப்பள்ளி கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஹினாயா,அந்-நூர் பாலர் பாடசாலையின்ஆசிரியர் எச்.எம்.ரிக்சானா
ஆகியோரின் ஒத்துழைப்புடன் இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.

இதில் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள் கே.டி.ரோகிணி,இளைஞர்கள், யுவதிகள்,
சமாதான தொண்டர்களான பேபிசாலினி எம்.எம்.எம். அஹ்னாப்,நிந்தவூர் பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் ஏ.டப்ளியு.எம்.இம்தாத்,
கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ்,இளைஞர்கள்,
யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 (சர்ஜுன் லாபீர்)


புதிய ஆண்டின்(2023) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(02)காலை 8.58 மணிக்கு கல்முனை  பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  நடைபெற்றது.

மலரும் 2023ஆம் ஆண்டில் சமூக , பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

வரலாற்றில் முன்னொருபோதும் அனுபவித்திராத பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் வாழ்க்கை மிகவும் கஷ்ட நிலைக்கு முகங்கொடுத்துள்ள இக்காலப் பகுதியில் , உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரச சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும் . அரச செலவுகளைக் குறைத்து அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும் நீங்கள் அனைவரும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல் வேண்டும்.

மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்
ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீlல், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் ஜனூபா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) எம்.மயாஸ்,,நிதி உதவியாளர் எம்.ஜலீல் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.