Showing posts with label Entertainment. Show all posts

 


புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார். 83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். 




பிரபல கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிர்ஜூ மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் 'உன்னைக் காணாத நான்' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பலரின் பாரட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

 ஏழைகளின் Red heartஇதயதெய்வம் ,புரட்சித்தலைவர் தமிழகமுன்னாள் முதலமைச்சர்,நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் M.G.R அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று. Birthday cakeVictory handSeedling

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.



எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் நிறுவன தலைவராகவும்,பாெதுச்செயலாளாராகவும் ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.


இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்


“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.”Victory hand

 




இன்று (டிசம்பர் 12) தமிழ்த்திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள்.


 பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ரஜினி விரும்பி நடித்த கதாப்பாத்திரம் முதல் அவர் கடைசி என அறிவித்த படம் முதல் அவரது சினிமா வாழ்க்கை குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.


தனது முதல் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில்தான் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் தொடங்கி 'சுதா சங்கமா', 'காயத்ரி', 'மூன்று முடிச்சு', '16 வயதினிலே', 'எந்திரன்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் முத்திரை பதித்துள்ளார்.

நடிகராக மட்டுமே அறியப்பட்ட ரஜினிகாந்த்தின் அதிகம் அறியப்படாத இன்னொரு முகம் பாடகர் முகம். 1993 ஆம் ஆண்டு வெளியான 'மன்னன்' படத்தில் 'அடிக்குது குளிரு', 2013-ல் வெளியான 'கோச்சடையான்'-ல் 'எதிரிகள் இல்லை' ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் 'பைரவி' திரைப்படத்தில்தான் கிடைத்தது. இந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு. 'நான் போட்ட சவால்' என்ற திரைப்படத்தில் இருந்துதான் இந்த பட்டம் அடுத்தடுத்த படங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல, நியான் சிவப்பு புள்ளிகளோடு 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் பயன்படுத்த ஆரம்பித்தது 'அண்ணாமலை' படத்தில்தான்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இந்தியன்'. முதலில் இந்த கதையில் நஜினி நடிப்பதாகதான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போக பின்பு கதையில் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமானார். இதில் 'இந்தியன்' தாத்தாவின் தலை கோதும் விதம் எல்லாம் ரஜினியை மனதில் வைத்தே உருவாக்கியதாகவும் அதையே கமல் செய்து காட்டிய போது அது வேறு விதமான ஸ்டைல் ஆக வந்ததாகவும் இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

'இந்தியன்' போலவே, கமலுக்காக எழுதி அதில் ரஜினி நடிக்க நேரிட்ட திரைப்படம் 'எந்திரன்'. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து ஹீரோ, வில்லன், 'ரோபோ' கதாப்பாத்திரம் என மூன்று விதமான கதாப்பாத்திரங்களை இந்த படத்தில் கையாண்டிருப்பார் ரஜினி.


பட மூலாதாரம்,GETTY IMAGES

நடிகர் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்த படங்கள் என்றால் அதில் 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'குசேலன்' படங்களை குறிப்பிடலாம். இதில் ரஜினிகாந்த் பெயரிலேயே 'அன்புள்ள ரஜினிகாந்த்' வெளியானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் திரைக்கதை எழுதிய திரைப்படம் 'வள்ளி'. அதில் முதலில் அவர் நடிப்பதாகவே இல்லை. ஆனால், அந்த படத்தை இயக்கிய நட்ராஜ், படத்தின் பங்குதாரர்கள் என அனைவருமே ரஜினியின் ஆரம்ப கால நெருங்கிய நண்பர்கள். அவர்களது வேண்டுகோளுக்கேற்ப அந்த படத்தில் நடித்தார் ரஜினி.

அண்ணாத்த - ரஜினிகாந்த் படத்தின் சினிமா விமர்சனம்


"ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கப்பட்டது": மருத்துவமனை அறிக்கை


ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என விரும்பி ஏற்ற கதாப்பாத்திரம் ஸ்ரீராகவேந்தருடையது. தீவிர ராகவேந்தர் பக்தரான ரஜினிகாந்த், 25வது படம் நடிக்கும்போதே தன்னுடைய 100வது படமாக 'ஸ்ரீராகவேந்திரா' இருக்க வேண்டும் என விரும்பி கவிதாலயா தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் அதில் நடித்தார். ஆனால், மகேந்திரன் கணித்தது போலவே படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறாமல் போக ரஜினிக்கு அதில் வருத்தம். இதனால் சிறிது காலம் ராகவேந்திரா கோவிலுக்கு செல்லாமல் இருந்தவர், இது குறித்து தனது நெருங்கிய நண்பரான நடிகர் ராஜ் பகதூரிடம் பகிர்ந்து கொள்ள ஆறுதல் சொன்னவர், தனக்கும் இதுபோல நேர்ந்ததாகவும் சில காலம் கழித்து படம் வரவேற்பை பெற்றத்தை சொன்னதுமே பின்பு சமாதானம் அடைந்தார்.

1999-ல் 'படையப்பா' படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து ரஜினி நடித்த படம் 'பாபா'. அது ஆன்மிகத்தில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம். தனது கடைசி படமாகவும் அப்போது 'பாபா'வை அறிவித்து இருந்தார். ஆனால், படம் பல அரசியல் பிரச்சனைகளை தாண்டி வெளியாகியும் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ரஜினி படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்படும்போது அங்கு ரஜினியின் குரலாக பெரும்பாலும் இருந்தவர் பாடகர் எஸ்.பி.பிதான். அதேபோல அவரது அறிமுக பாடல்களில் அந்த உற்சாகத்தை தக்க வைப்பது எஸ்.பி.பிதான். ரஜினி ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் இந்த இணை இடையில் சில காலங்களில் விடுபட்டு மீண்டும் 'தர்பார்' படத்தில் இணைந்தது. இதில் எஸ்.பி.பி. தன்னுடைய கடைசி பாடலை ரஜினியின் அறிமுக பாடலாக 'அண்ணாத்த' படத்திற்குதான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 168-வது படமாக 'அண்ணாத்த' இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பார், பாண்டிராஜ், தேசிங்கு பெரியசாமி என பல இயக்குனர்களது பெயர்கள் அடிபட்டாலும் இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இது குறித்தும், ரஜினியின் பிறந்தநாள் திட்டம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம், " ரஜினி அவரது பிறந்தநாளை இந்த ஆண்டும் வழக்கம் போலதான் கொண்டாட திட்டம். மற்றபடி பட அறிவிப்புகள் எதும் உண்டா என்பது பிறகுதான் தெரிய வரும். அதேபோல, ரசிகர்கள் சென்னையின் ஆல்பர்ட், கிருஷ்ணவேணி போன்ற திரையரங்குகளில் 'பாட்ஷா' உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டு கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள்" என்கிறார்.

 


தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம். சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைச் சொல்லும் இந்தியத் திரைப்படங்களில் இது சமீபத்தியது என்று எழுதுகிறார் திரைப்படப் பத்திரிகையாளர் அசீம் சாப்ரா.


ஞானவேல் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் சாதீயப் பாகுபாட்டை மையமாகக் கொண்டது. வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.


ஜெய் பீம் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வரப்பட்டவர்கள் சாதியின் அடிப்படையில் பிரிப்பதாகக் காட்டப்படுகிறது.


ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களை அங்கேயே இருக்குமாறு கூறி, அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.


ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்

ஜெய் பீம்: சந்தானத்துக்கு எதிராக டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இது மனதை சங்கடப்படுத்தும் காட்சி. அந்தக் குழுவில் அச்சத்தில் நடுங்கியவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவின் விளிம்புநிலை, குறிப்பாக தலித்துகளின் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டும் வகையில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.


இந்தியாவின் மக்கள்தொகையில் 20% பேர் தலித்துகள். அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதிலும் அவர்கள் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


ஜெய்பீம்

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

ஜெய் பீம் என்றால், பீம் வாழ்க என்று பொருள். புறக்கணிக்கப்பட்ட மக்களின் தலைவரான, இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பியான பி.ஆர். அம்பேத்கரின் ஆதரவாளர்களால் பிரபலப்படுத்தப்பட்டது இது.


ஜெய் பீம் திரைப்படம் தமிழ் சினிமா பயணிக்கும் புதிய போக்கின் ஒரு அங்கமாகவே கவனிக்கப்படுகிறது. பல இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சாதிய அடக்குமுறைகளைப் பின்புலமாகக் கொண்ட கதைகளைக் கையில் எடுத்திருக்கின்றனர்.


1991ஆம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டு விழா அனுசரிக்கப்பட்டது முதல் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் இயக்கம் வளர்ந்து வருகிறது என்று திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ் தியோடர் பாஸ்கரன் கூறுகிறார்.


"20 ஆம் நூற்றாண்டின் மறக்கப்பட்ட தலித் சித்தாந்தங்கள் வரலாற்றில் இருந்து மீட்கப்பட்டன. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவியிருந்தன. கடந்த பத்தாண்டுகளில், சில எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று திரைப்படங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் வழக்கமான பாடல்கள், சண்டைகள், மெலோட்ராமா பாணியைப் பயன்படுத்தினர்"


இப்போது, ​​தலித் சீக்கியர்களின் வாழ்க்கையைக் கூறும் அன்ஹே கோர்ஹே டா டான் (பஞ்சாபி), தகனம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனுக்கும் உயர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதலைக் கூறும் மசான் (ஹிந்தி), ஃபேன்ட்ரி மற்றும் சைரட் (இரண்டும் மராத்தி) உட்பட பிற இந்திய மொழி சுயாதீனத் திரைப்படங்களிலும் தலித் கதைகள் இடம் பெற்றுள்ளன.

2020 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், முந்தைய தமிழ்ப் படங்களில் தலித் பாத்திரப் படைப்பு பற்றி "தி வயரிடம்" பா ரஞ்சித் பேசியிருந்தார். "ஒன்று தலித் பாத்திரங்கள் காட்டப்படவில்லை, அல்லது கதையில் அவை சேர்க்கப்படுவது 'புரட்சிகரமாக' கருதப்பட்டது."


"இத்தகைய சூழலில், எனது கதைகள் என்ன சொல்ல முடியும் என்பதை நான் சிந்திக்க வேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.


"எனது கலாச்சாரமே பாகுபாடு மற்றும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நான் காட்ட விரும்பினேன்...இன்று, இயக்குநர்கள் தலித் கதாபாத்திரங்களை எழுதும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்." என்றார் அவர்.


இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பெரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தவர் ரஞ்சித். "சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது" என்ற எழுத்துக்களுடன் படம் தொடங்கும். படத்தின் நாயகன் அம்பேத்கரைப் போல் வழக்கறிஞராக வரும் ஆசை கொண்டவன.


பெரியேறும் பெருமாள் படத்தில், "போராடடா" என்ற பாடலுக்கு நடனமாடும் குழுவில் இருக்கிறார் மாரி செல்வராஜ். 1983-இல் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலில் "நந்தன் இனமே பெறும் அரியாசனமே, எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை, பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்" போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.


2021-ஆம் ஆண்டில் வெளியான மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்திலும் இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இப்போது அது தலித் கீதமாகக் குறிப்பிடப்படுகிறது.


சார்பட்டா பரம்பரை

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

படக்குறிப்பு,

முகமது அலியால் ஈர்க்கப்பட்ட குத்துச் சண்டைக் கதை சார்பட்டா பரம்பரை


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் படத்தால் ரஞ்சித்தின் படங்கள் கூடுதல் கவனம் பெற்றன. தனக்கு சொல்லப்பட்ட கதைகளால் நெகிழ்ந்துபோன ரஜினிகாந்த், கபாலி (மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் நிழல் உலக கதை) மற்றும் காலா (மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நடக்கும் கதை) கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.


அவரது சமீபத்திய படமான, சார்பட்டா பரம்பரையில், முகமது அலியால் ஈர்க்கப்பட்ட சென்னை தலித்துகளின் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், வியட்நாம் போர், இனவெறி போன்றவற்றுக்கு எதிரான அவரது போர்க் குரல்களையும் விவரிக்கிறார்.


மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் தற்போதைய தலித் பிரதிநிதித்துவம் இத்தகைய பாராட்டுகளுக்கு தகுதியற்றது என்று சிலர் நினைக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு வெளியான மாடத்தி திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை, நவீன சினிமா போதுமான அளவுக்கு மாறிவிடவில்லை என்கிறார்.


" ஹீரோ, அதீத ஆண்மை, எங்கும் நிறைந்திருக்கிற, மாவீர மீட்பர் கொண்ட அதே கதைகளே திணிக்கப்படுகின்றன" என்று லீனா மணிமேகலை கூறினார்.


பரியேறும் பெருமாள்

பட மூலாதாரம்,NEELAM PRODUCTIONS

"இப்போதைய படங்களில் பெண் பாத்திரங்கள் தங்கள் கணவன் அல்லது காதலர்களுக்கு வெறும் முட்டுக்கட்டைகளாக இருப்பார்கள், அல்லது சியர்லீடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாகுபாடுகளில் இருந்து கோடாரிகள், துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்களைக் கொண்டு தங்களது ஹீரோக்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என புறக்கணிக்கப்படும் சமூகங்கள் காத்திருக்கின்றன"


ஆயினும் இத்தகைய நவீன சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெய் பீம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் IMDb ஆன்லைன் தளத்தில் 9.6 பயனர் மதிப்பீட்டைப் பெற்று முதலிடத்துக்குச் உயர்ந்திருக்கிறது ஜெய் பீம்.


சுதா ஜி திலக்கின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது. அசீம் சாப்ரா ஒரு சுயாதீன திரைப்பட எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர். இர்ஃபான் கான்: தி மேன், தி ட்ரீமர், தி ஸ்டார் என்ற புத்தகத்தை அண்மையில் எழுதினார்.

 


2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.


சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது.


அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


மிகவும் நெருங்கியவர்களின் திருமண மற்றும் துக்க நிகழ்வுகளில்கூட சில சமயங்களில் ஜெயலலிதா கலந்துகொள்வதில்லை என்ற நிலையில், உடல் நலம் குன்றியிருந்த சமயத்திலும் ஜெயலலிதா வந்தது மனோரமா ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.


மூன்று முறை உயிர்த்தெழுந்த உன்னத கலைஞன் - நாகேஷ் நினைவலைகள்

"அன்பு அனாதை இல்லை முகேன்" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை

''நம்மளை போலவே காலமெல்லாம் தன்னந்தனியா போராடுனவங்கனுதான் மனோரமாவை அம்மாவுக்குப் பிடிக்கும். அதனால்தான் அவங்களுக்கு அம்மா அஞ்சலி செலுத்த வந்திருக்காங்க'' என்று ஜெயலலிதா குறித்து அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் ஒருவர் கூறியது திரண்டிருந்த கூட்டத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


உண்மைதான். பல மேடைகளில் ஜெயலலிதாவை ஆரத்தழுவி, முத்தமிடும் உரிமை மனோரமாவுக்குத்தான் இருந்தது. ஜெயலலிதா மட்டுமில்லை முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதிகா, சிவக்குமார் என பலரும் மனோரமாவின் அன்பு வளையத்திலிருந்தவர்கள்தான்.


ஒரு வருடம், இரண்டு வருடமா, 1958 முதல் அவர் இறக்கும்வரை மனோரமா நடித்து கொண்டுதான் இருந்தார்.


நாடகமோ, திரைப்படமோ, வானொலி அல்லது தொலைக்காட்சி தொடரோ. ஏதாவது ஒரு வடிவத்தில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தார். மனோரமா ஒரு 'பெண் சிவாஜி' என்று அவரின் நடிப்பை புகழ்ந்து ஒருமுறை நடிகரும், எழுத்தாளருமான சோ குறிப்பிட்டார்.


50க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடிப்பைச் சுவாசித்து வாழ்ந்த மனோரமா மறைந்த நாளில், அவர் சார்ந்த கலையுலகமும் துக்கத்தில் ஆழ்ந்தது.


யார் இந்த மனோரமா?

குடும்ப பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியுமில்லை - ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே.





தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் 'ஆச்சி' என அழைக்கப்பட்ட மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த நடிகை ஆவார்.


மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. சிறுவயதில் அவரது குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.


குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது.


மாலையிட்ட மங்கையில் தொடங்கிய பயணம்

ஆரம்பத்தில் நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் ஆண்டு வெளியான "மாலையிட்ட மங்கை" திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.


மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.


ரசிகர்களின் மனதில் குடியிருக்கும் மனோரமாவின் கதாபாத்திரங்கள்

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் மனோரமா (கோப்புப்படம்)

1960களாக இருந்தாலும், 2000த்துக்கு பிறகான காலம் ஆனாலும் மனோரமா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் கதாபாத்திரங்கள்.


குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி மற்றும் பத்மினி இணைக்குச் சற்றும் குறைவில்லாத கதாபாத்திரமாக 'ஜில் ஜில் ரமாமணி' என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டைப் பெற்றார் மனோரமா.


ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.


கண்ணத்தாவாக சிரிக்கவைத்த பாட்டி சொல்லை தட்டாதே, கங்காபாய் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் மதனகாமராஜன், தாயம்மாவாக கிச்சுகிச்சு மூட்டிய சிங்காரவேலன், அனுஷ்காவின் பாட்டியாக தோன்றிய சிங்கம், சிங்கம் 2 என எண்ணற்ற திரைப்படங்களில் மனோரமாவின் கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகின்றன.


5 முதல்வர்களுடன் நடித்துள்ள மனோரமா

தமிழகத்தில் கடந்த 1967 முதல் 2016 வரையுள்ள காலகட்டத்தில் பெரும்பாலும் முதல்வராக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நால்வருடனும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மனோரமா நடித்துள்ளார். இவர்கள் நால்வருடன் மட்டுமல்ல முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர் என்டிஆர் உடனும் மனோரமா நடித்துள்ளார்.


தமிழ் தவிரத் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து மனோரமா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை தனி.


நகைச்சுவை நடிகை என்ற அடையாளத்தைத் தமிழ் சினிமாவில் உருவாக்கிய மனோரமா

மனோரமா நடிக்கத் துவங்கிய சமயத்தில் நகைச்சுவை நடிகைகள் ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக ஓரிரு காட்சிகளில் படத்தில் தலைகாட்டிவிட்டு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தனர்.




ஆனால், அந்த நிலையை மாற்றிக் காட்டியவர் மனோரமா. மனோரமாவுக்கு பிறகு இன்று நகைச்சுவை நடிகைகளுக்கு ஒரு தனி அடையாளம் உருவானது.


கலையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் வந்த மனோரமா நாடகங்கள் , திரைப்படங்கள், தொலைக்காட்சி என பல தளங்களிலும், நடிப்பு, பாடல் என பல அம்சங்களில் நீங்காத முத்திரை படைத்தார்.


திரைப்படங்களில் ஒரு பாடல் காட்சியின் இடைவெளியில் திடீர் பணக்காரர்கள் உருவாவது போல இது மாயமந்திரம் இல்லை. திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை சந்தித்து, நாளும் போராடியே இந்த சாதனையை மனோரமா படைத்துள்ளார்.


மனோரமா ஒருமுறை தான் அளித்த பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லியிருப்பார், ''கடைசி வரை நடிச்சிகிட்டே இருக்கணும்; சினிமா இல்லைனா நாடகம் அதுவும் இல்லைனா தெருக்கூத்தில் கூட நடிக்கத் தொடங்கிவிடுவேன். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்''


அதனால் தானோ என்னவோ கடைசி இரண்டு ஆண்டுகளில் உடல்நலமில்லாமல் பெரிதாக நடிக்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாத மனோரமா, 2015 அக்டோபரில் காலமானார்.


கடைசி வரை நடிக்க முடியவில்லையென்றாலும், இறுதி மூச்சு வரை அவர் சினிமா மற்றும் நடிப்பு குறித்து மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் அவரது ரசிகர்களும், அவரை அறிந்தவர்களும்.


 

35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்,யுவன் சங்கர் ராஜா 

இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரைப் பற்றிய 10 சுவாரசியமான தகவல்களை தொகுத்து அளிக்கிறோம்.
பாடல்களுக்கு உலக தர வரிசை பட்டியல் அளிக்கும் 'பில் போர்ட்ஸ்', கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த 'ரௌடி பேபி' பாடலுக்கு 4 ஆம் இடம் அளித்திருந்த்து.
கடந்த 2019 ஆம் ஆண்டு 'யூடியுப்' வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 'ரௌடி பேபி' பாடல் வீடியோவுக்கு உலக அளவில் 7வது இடமும், இந்திய அளவில் முதல் இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.
அரவிந்தன் திரைப்படத்திற்குதான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை தனது இவர் வடிவமைத்தார். அந்த படத்திற்கு ஒப்பந்தமான போது யுவன் சங்கர் ராஜாவுக்கு வயது 14.
Yuvan Shankar Raja
பட மூலாதாரம்,RAJA YUVAN/ TWITTER
இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', ' கொலையுதிர் காலம்' போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
முறையான இசை வகுப்புகளுக்கு செல்லாதவர் யுவன் சங்கர் ராஜா, 35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்.
தமிழகத்தில் கதாநாயகர்களுக்கு இணையான இளம் ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இவரது பிறந்த நாளுக்கு கட்டவுட்டுகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
தனது தந்தையை விட தாய் மீது அதிக அளவிலான பாசம் கொண்டவராகவே யுவன் தன்னை வெளிப்படுத்துபவர். தனது தாய் பிறந்த தினத்திலேயே தனது மகள் 'ஜியா' பிறந்ததை பெருமையாக நண்பர்களிடம் பேசுவார்.
நா.முத்துக்குமார் மீது அளவு கடந்த பாசமிக்கவராக இருந்த இவர், தனது அலுவலகத்தில் முத்துக்குமாருக்கேன்றே தனி அறையும் ஒதுக்கியிருந்தார்.
2006ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார் யுவன். 2004ஆம் ஆண்டில் '7ஜி ரெயின்போ காலனி' படத்திற்காக பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் யுவன்.


 கோடிக்கணக்கானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட "என்ஜாயி எஞ்சாமி" பாடலை இயற்றிய பாடலாசிரியரும் பாடகருமான அறிவு என்ற அறிவரசுவின் பெயர், பல தளங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.


பாடலாசிரியரும் பாடகருமான 'அறிவு' எனப்படும் அறிவரசு கலைநேசன், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தானே எழுதி, பாடிய பாடல்கள் மூலம் அறியப்பட்டவர்.


'காலா' திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான அறிவு, சுயாதீனமான பாடல்கள் மூலமும் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தார். பாடகி 'தீ'யுடன் இணைந்து இவர் உருவாக்கிய "என்ஜாயி எஞ்சாமி" பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. யூட்யூபில் இந்த வீடியோ சுமார் 32 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.


அதேபோல, சந்தோஷ் நாராயணன் இசையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'நீயே ஒளி' என்ற பாடலை சான் வின்சென்ட் து பால் என்ற பாடகருடன் இணைந்து எழுதி, பாடியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடலும் ரீ - மேக் செய்யப்பட்டு யூட்யூபில் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சான் வின்சென்ட் து பால் தற்போது கனடாவில் வசித்துவருகிறார்.


இந்த இரு பாடல்களையும் மாஜா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. சுயாதீன இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் துணையுடன் இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில், சுயாதீன இசைக்கென நடத்தப்படும் Rolling Stone India என்ற இதழின் ஆகஸ்ட் மாத பதிப்பில் தமிழ் இசைக் கலைஞர்கள் எப்படி எல்லை வரையறைகளைத் தாண்டிச் செல்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அந்த இதழின் அட்டைப் படத்தில், பாடகி தீயும் சான் வின்சென்ட் து பாலும் இடம்பெற்றிருந்தனர்.


"என்ஜாயி எஞ்சாமி" பாடலையும் 'நீயே ஒளி' பாடலையும் அடிப்படையாக வைத்தே ரோலிங் ஸ்டோன் கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல்களை எழுதிய அறிவு, அட்டைப் படத்தில் இடம்பெறாதது பலரது புருவங்களை உயர்த்தியது. தவிர, அந்தக் கட்டுரைக்குள்ளும் அறிவின் பெயர் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றது. அவர் கூறியதாக ஓரிரு வரிகள் மட்டுமே அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.


இப்படி அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் முதலில் கேள்வி எழுப்பினார். ரோலிங் ஸ்டோன் இதழ் வெளியிட்டிருந்த ட்வீட்டை முன்வைத்து கேள்வி எழுப்பிய ரஞ்சித், "'நீயே ஒளி' பாடலை எழுதியவர், 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை எழுதிப் பாடியவரான தெருக்குரல் அறிவு மீண்டும் ஒரு முறை காணாமலாக்கப்பட்டுள்ளார். பொதுவெளியில் ஒருவருக்கான அங்கீகாரத்தை அழிப்பது குறித்துத்தான் இந்த இரு பாடல்களும் பேசுகின்றன என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமா?" என கூறியிருந்தார்.

இயக்குநர் சி.எஸ். அமுதனும் இதற்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். "அறிவின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்படவில்லையென்றால், தீ, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இது குறித்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால், இது வரலாற்று அநீதியாகிவிடும். யுத்தத்தின் சரியான பக்கத்தில் இவர்கள் நிற்கிறார்கள் என நாம் நம்புகிறோம். அவர்கள் சரியான விஷயத்தைச் செய்வார்கள் என்று நம்புவோம்" என தனது ட்வீட்டில் குறிப்பிட்டார் சி.எஸ். அமுதன்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் 'தீ'யின் தந்தை என்பதாலும் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கிய மாஜா நிறுவனத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆதரித்து வருகிறார் என்பதாலும் இருவரையும் தனது ட்வீட்டில் இணைத்திருந்தார் சி.எஸ். அமுதன்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னியரசுவும் இது குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார். "எஞ்ஜாயி எஞ்சாமி' பாடல் உலகம் முழுக்க பல கோடி பேரை ஈர்த்துள்ளது. இசை அமைத்து தயாரித்துள்ள இசை அமைப்பாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்பாடலை எழுதிய கவிஞர் தெருக்குரல் அறிவின் பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இது அறிவுச் சுரண்டல். இதற்கான காரணத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் விளக்குவாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.



அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்திருப்பது முதல்முறையில்லை என்பதுதான் இத்தனை கண்டனக் குரல்களுக்கும் காரணம். மாஜா நிறுவனம் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை பிரெஞ்சு இசைக் கலைஞான டிஜே ஸ்னேக்குடன் இணைந்து ரீ - மேக் செய்தபோது, அதில் பாடகி தீ மட்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். அறிவு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்தப் பாடலுக்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டபோது, அதில் பாடகி தீ மற்றும் டிஜே ஸ்னேக் ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.


இந்தக் கண்டனக் குரல்களுக்குப் பிறகு ரோலிங்ஸ்டோன் இந்தியா வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், இந்தப் பாடல்களோடு சம்பந்தப்பட்ட அனைவரது பெயரும் இடம்பெற்றதோடு படங்களும் இடம்பெற்றிருந்தன.


இந்த ட்வீட்டின் மூலம் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தது ரோலிங்ஸ்டோன். ஆனால், அறிவின் பெயர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.


இந்தப் பாடல்களோடு சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்கள் மீது இதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை.

 




வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொகையை 2 வாரத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவு.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட Zero Chance குறுந்திரைப்பட போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு படகில் செல்வதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதனை வழக்கமான பாணியில் இல்லாமல் சற்று வித்தியாசமாக முயற்சித்துநூற்றுக்கணக்கான படங்களில் இறுதி சுற்றுக்கு தெரிவாகிய சிதடு குறுந்திரைப்படம் இன்று(11) வெளியீடு செய்யப்பட்டது.

கல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஷின் தயாரிப்பில் டிலோஜனின் இயக்கத்தில் உருவான இக்குறுந்திரைப்படத்தில் Trishanthan Jasomitha Shajith  Nuwan  Sayanujan Pavathakar Dilan Baby Dhiya Visvalingam ஆகியோர் நடித்திருப்பதோடு பின்னணி இசையை சஜய் வழங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி எடுக்கப்பட்ட இக்குறுந்திரைப்படம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் கல்முனை ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் பு.கேதீஸ் ஆகியோரால் சுகாதார நடைமுறைகளுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது

 


நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா பரவல் காரணமாக சில பரிசோதனைகளை ரஜினியால் மேற்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

ரத்த அழுத்தத்தில் மாறுதல்

அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2016ஆம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதன்பின்னர், படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். தற்போது `சன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் `அண்ணாத்த' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாதில் படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மருத்துவ பரிசோதனையில் `கோவிட் நெகட்டிவ்' என வந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அச்சப்படும்படியாக எதுவும் இல்லாததால் சென்னை திரும்பினார். இதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் வருகைக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட ரஜினி, ` மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி `அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது எனத் தெரிய வந்தது. எனக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாக பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க நேரிட்டது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தடைபட்ட அமெரிக்க பயணம்

ரஜினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

``தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் வேகம் சற்று தணிந்து வருகிறது. அதேநேரம், தனது உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா செல்வது தொடர்பான திட்டமிடுதலில் இருந்தார். ஆனால், அவ்வாறு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது அவரது பயணத் திட்டம் உறுதியாகி விட்டது" என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் சிலர்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில தகவல்களை அவர்கள் விவரித்தனர். ``சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் சில பரிசோதனைகளை ரஜினி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டே உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. காரணம், கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஊரடங்கை பிறப்பித்துவிட்டனர். இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றுவந்தார். அங்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகே சென்னை வருவது அவரது வழக்கமாக இருந்தது

    நினைவூட்டிய மருத்துவர்கள்

    ரஜினி

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் காணொளி காட்சி மூலமாக தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்று வந்தார் ரஜினி. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் ரஜினியின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

    அமெரிக்காவில் இருந்தும் சில மருந்துகள் வர வேண்டியிருந்ததால், அதனையும் தருவித்தனர். தவிர, ரஜினியின் உடல்நிலையை பொருத்தவரையில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். இது தொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அமெரிக்க மருத்துவமனை அனுப்பியுள்ளது. கொரோனா காரணமாக அவரது அமெரிக்கப் பயணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டேயிருந்தது. இந்தமுறை முன்கூட்டியே சென்று வருவது என அவர் முடிவெடுத்தார். அவர் மட்டும் தனியாகச் செல்வதாகத்தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    காரணம், `தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்துக்காக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் உள்ளனர். ரஜினி அங்கே செல்லும்போது அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையை ஐஸ்வர்யா உடனிருந்து பார்த்துக் கொள்ள இருக்கிறார். அமெரிக்காவில் தனுஷின் படப்பிடிப்பு கடந்த 15 ஆம் தேதியே முடிவடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அங்கே அவர்களும் ரஜினியின் வருகைக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 21 ஆம் தேதி ரஜினி அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது" என்கின்றனர்.

    ரஜினியின் பயணத் திட்டம் என்ன?

    ரஜினி

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து, அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கொரோனா காரணமாக பெரிதாக எந்தப் போக்குவரத்துகளும் இல்லாததால்தான் அவரது பயணம் தடைபட்டது. தற்போது அவர் அமெரிக்கா செல்வது உண்மைதான். ஆனால், எப்போது செல்வார் என்கின்ற தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை. ஒவ்வொரு வருடமும் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்கச் சொல்வது வழக்கம். இதையடுத்து, சில பரிசோதனைகளை இங்கேயே முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு அதனை அனுப்புவது வழக்கம்.

    இதன் தொடர்ச்சியாக, `இங்கேயே சிகிச்சையை தொடரலாமா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டுமா?' என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வர். அவர் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறாரா அல்லது குடும்பத்துடன் செல்வாரா எனவும் தெரியவில்லை. அமெரிக்காவில் ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடித்து வருகிறார். அவர் 3 மாதங்களாக அங்கேதான் இருக்கிறார். இதுதொடர்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை" என்கிறார்.

     


    பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் 75ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 04). ஐம்பது ஆண்டுகால இசைப்பயணம், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள், இசை, நடிப்பு, டப்பிங் என தான் கால்பதித்த துறைகள் அனைத்திலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் எஸ்.பி.பி. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் வலம் வந்தவர்.

    அவருடன் திரையுலகில் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடிய பின்னணி பாடகிகளில் சித்ராவும் ஒருவர். சித்ரா அவர்கள் எஸ்.பி.பி. உடனான நினைவுகளை பகிர்ந்து கொள்ள பிபிசி தமிழுடன் கலந்துரையாடினார். அதில் இருந்து,

    கே: எஸ்.பி.பி. அவர்களை முதல் முறை சந்தித்த தருணம் நினைவுகூர முடியுமா?

    பாடகி சித்ரா

    பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

    "எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள திரையரங்கில் அதிகம் தமிழ்ப்படங்கள் தான் திரையிடுவார்கள். அதனால், சாருடைய பாடல்கள் எனக்கு பரிச்சயம்தான். முதல் முறை அவரை பார்த்தது 'புன்னகை மன்னன்' படத்தில் 'காலங்காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' பாடல் பதிவின் போது தான்.

    எஸ்.பி.பி. சார்தான் இந்த பாடலை பாடப்போகிறார் என என்னிடம் யாரும் சொல்லவில்லை. நான் மனோ பாட வருவார் என எதிர்ப்பார்த்து பாடலை எழுதி, காத்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென, கதவை திறந்து கொண்டு எஸ்.பி.பி. சார் உள்ளே வந்தார். பதற்றமாகி எழுந்து நின்றுவிட்டேன். என்னிடம் நலம் விசாரித்து விட்டு, அங்குள்ள இசைக்கலைஞர்களிடம் அன்போடு சகஜமாக பேசினார். அதைப் பார்த்து தான் பதற்றம் நீங்கி, பாடலை பாடி முடித்தேன்".

    கே: பல இசை மேடைகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் உங்களை அவர் ஜாலியாக வம்பிழுப்பாரே. அதுபோன்ற மறக்கமுடியாத சம்பவங்கள்?

    "இசைக் கச்சேரிகளிலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, ரசிகர்களை மகிழ்விக்க என்னை கிண்டல் செய்வார். பிறகு தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து, 'உன்னை கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை. மக்கள் அதை ரசிப்பார்கள்' என சொல்வார்.

    அப்போது நான் சிரித்து கொண்டே, 'நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் என்னை வம்பிழுக்கிறீர்கள் என்பது போன்ற தலைப்பு வைத்து வீடியோ எல்லாம் போடறாங்க சார்' என்று சொல்வேன். 'அய்யயோ அப்படியா?' என அவரும் சேர்ந்து சிரிப்பார்.

    எஸ் பி பாலசுப்ரமணியம்

    பட மூலாதாரம்,S. P. BALASUBRAHMANYAM

    இதில் மறக்க முடியாத ஒரு விஷயம் உண்டு. ஒரு தெலுங்கு படத்திற்கான பாடல் பதிவு. எஸ்.பி.பி. அவர்களுக்கு அந்த படத்தில் ஐந்தாறு பாடல் பாட வேண்டியிருந்தது. எனக்கு அதில் இரண்டு பாடல்கள். அவர் எப்போதுமே சீக்கிரம் கற்றுக்கொண்டு பாடி முடித்து விடுவார். என்னை 11 மணிக்கு ஸ்டுடியோவிற்கு வர சொல்லியிருந்தார்.

    அப்போது அவரே எனக்கு பாடல் சொல்லி கொடுத்தார். நான் தாமதமாக வந்ததால், பாடல் வரிகளின் அர்த்தம் கேட்காமல் வேலை சீக்கிரம் முடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன். எஸ்.பி.பி. சாருடைய பல்லவி முடித்த பின்பு என்னுடைய பல்லவி நான் பாடியபோது அங்கு டாக் பேக் (Talk Back)-ல் எல்லாரும் சிரிக்கும் சத்தம் கேட்டது. 'தப்பாக பாடிவிட்டேனா?' என்ற பதட்டத்தில் நான் பாடல் வரிகளை சரி பார்த்து கொண்டிருந்தேன்.

    அப்போது எனக்கு தெலுங்கு சரியாக தெரியாது. எஸ்.பி.பி. அவரிடம் கேட்கலாம் என திரும்பிய போது அவர் வேறு ஒரு பக்கம் உட்கார்ந்து சிரித்து கொண்டு இருந்தார். நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது உதவி இயக்குநர் உள்ளே வந்து சிரித்து கொண்டே, 'என்ன எழுதியிருக்கிறீர்கள்?' என கேட்டார். அப்போதுதான் எஸ்பிபி, 'நான்தான் அவளை கிண்டல் செய்ய திட்டும்படியான வார்த்தைகளை சங்கதிகேற்ப எழுதி கொடுத்தேன்' என சிரித்தார். இதை நான் மறக்கவே மாட்டேன்.

    இன்னொரு சம்பவமும் உண்டு. ஒருமுறை நான், ஷைலஜா, சரண், பாடகர் கிருஷ்ணா நாங்கள் நால்வரும் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது கோரஸ் பாட யாரும் இல்லை. நாங்களே அதற்கான பயிற்சியும் எடுத்து பாடினோம். அப்போதெல்லாம், விருப்பப்பட்ட பாடலை பாடச்சொல்லி ரசிகர்களிடம் இருந்து துண்டு சீட்டு வரும்.

    அதில் ஹரிஹரனும், நானும் பாடிய 'உயிரே உயிரே' பாடலும் இருந்தது. ஹரிஹரன் அங்கு இல்லை என்பதால், நான் அதிக பிரசிங்கதனமாக பேசி எதுவும் செய்துவிட வேண்டாம் என நான் பாடவில்லை. அது எஸ்.பி.பி. அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். நிகழ்ச்சியின் கடைசி நாளில் என்னென்ன பாடல் பாட வேண்டும் என்ற பட்டியல் எங்களுக்கு வந்திருந்தது.

    அதில் ஒரு இடத்தில் பாடல் விடுபட்டிருந்தது. 'என்னவாக இருக்கும்?' என நானும் ஷைலஜாவும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென 'உயிரே' பாடலுக்கான இசை வாசிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் அந்த பாடலின் இரண்டாம் பாதியில் இருந்து நான் பாட வேண்டும்.

    ஆனால், என்னிடமோ அதுகுறித்து எதுவும் சொல்லவே இல்லை. எனில், 'யார் பாட இருக்கிறார்கள்? எஸ்.பி.பி. அவர்களே முழுபாடலையும் பாட இருக்கிறாரா?' என பல கேள்விகளோடு மேடையின் பின்னிருந்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எஸ்.பி.பி. சார், நான் பாட வேண்டிய இடம் வந்ததும் திரும்பி, 'சித்ரா வா' என கூப்பிட்டார்.

    எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. பாடல் முடிந்ததும், 'நிகழ்ச்சிக்காக அவர்கள் இதுவரை பாடாத விஷயங்களை கூட கற்றுக்கொண்டு பாடினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த நன்றி' என 'உயிரே' பாடல் நான் பாடாததற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதையும் சொன்னார். கண்கலங்கி விட்டேன்.

    அவர் நினைத்திருந்தால் இதெல்லாம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. தான் சீனியர் என்றெல்லாம் நினைக்காமல் எதையும் இறங்கி வந்து செய்யக்கூடியவர். அதுதான் எஸ்.பி.பி.".

    கே: அவர் வம்பிழுக்கிறார் என எப்போதாவது உங்களுக்கு வருத்தம் இருந்திருக்கிறதா?

    பாடகி சித்ரா

    பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

    "நிச்சயமாக இல்லை. ஒருமுறை வெளிநாட்டில் இசைக்கச்சேரிக்காக சென்றிருந்தோம். அப்போது ஒரு தெலுங்கு பாடல் பாடிவிட்டு அடுத்து மலையாள பாடல் பாட இருந்தோம். பாடல் மட்டுமே பாடிக்கொண்டிருக்காமல், ரசிகர்களுக்காக இடையிடையே மேடையில் உரையாடலும் நடத்துவோம். அப்படி எஸ்.பி.பி. அவர்கள் அடுத்து நாங்கள் பாடவிருக்கும் மலையாள பாடலுக்கான அர்த்தத்தை ஆங்கிலத்தில் என்னை சொல்ல சொன்னார். நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.

    அந்த பதற்றத்தில் பல மலையாள வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் என்னவென்று எனக்கு உடனே நினைவுக்கு வரவில்லை. என்னுடைய பதற்றத்தை பார்த்த ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பாட்டெல்லாம் பாடிமுடித்து, மேடைக்கு பின்னால், 'சித்ரா, இதற்கெல்லாம் வருத்தப்படாதே. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்ததான்' என சொல்வார். அது எனக்கு புரியும். அதனால் வருத்தமில்லை".

    கே: எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடியதில் உங்களுக்கு மிகவும் சவாலான பாடல்?

    "நிறைய பாடல்களை சொல்லலாம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'அஞ்சலி அஞ்சலி' பாடல். இருவரும் தனித்தனியாகதான் இந்த பாடலை பாடினோம். பெரும்பாலும் ரஹ்மான் அவர்களுடைய இசையமைப்பில் பாடிய பாடல்கள் தனித்தனியாகதான் பதிவு செய்தோம்".

      கே: பாடகர், இசையமைப்பாளர், நடிகர், வாய்ஸ் ஆர்டிஸ்ட் என எஸ்.பி.பி. அவர்களுக்கு நிறைய முகங்கள் உண்டு. உங்களுக்கு பிடித்த எஸ்.பி.பி. இதில் எது?

      "பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அவரை அதிகம் பார்த்துள்ளேன். அவருடைய இசையிலும் சில பாடல்கள் பாடியுள்ளேன். கோவிட் காலத்தில் கடினமாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என இந்த சமயத்தில் கடினமாக உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தெலுங்கில் ஒரு பாடலை அவர் இசையமைத்து உருவாக்கினார்.

      மலையாளத்திலும் இந்த பாடல் இருக்க வேண்டும் என உச்சரிப்பிற்காக பதிவு செய்து என்னை அனுப்ப சொல்லியிருந்தார். பிறகு நானே அந்த பாடலை வீட்டில் இருந்து பதிவு செய்து அனுப்பினேன். அவர் போவதற்கு முன்னால் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த பாடல் அமைந்துவிட்டது".

      கே: எஸ்.பி.பி. அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம்?

      எஸ்பிபி & சித்ரா

      பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

      "தொழில் மேல் அவருக்கு உள்ள பக்தி, ஈடுபாடு. பாடகராக மட்டுமில்லை, ஒரு மனிதராகவும் அனைவர் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டவர். தொழில்ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், நான் முன்பெல்லாம் பாடல் பதிவின் போது இசையமைப்பாளர், பாடல் என எனக்கு தேவையான விஷயங்களை மட்டுமே குறித்து வைப்பேன். ஆனால், எஸ்.பி.பி. அவர்கள் இசையமைப்பாளர், பாடல், பாடகர், தேதி, ஸ்டுடியோ என அனைத்து விஷயங்களையும் குறித்து வைப்பார். அதை நானும் பின்தொடர்ந்தேன்"

      கே: கடைசியாக எப்போது அவரை சந்தித்தீர்கள்?

      "கொரோனா காலத்திற்கு முன்பு நடந்த ஒரு இசைக்கச்சேரியில்தான். "எல்லாருடனும் அன்பாகவும், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க கூடிய ஒருவர் எஸ்.பி.பி. எந்தவொரு இசைக்கச்சேரி, நிகழ்ச்சி என்றாலும் அவரை தவிர்த்துவிட்டு நடத்த முடியுமா என யோசிக்க வைக்கும் அளவிற்கு மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை எடுத்து செல்வார்.

      தெலுங்கில் சில நிகழ்ச்சிகளில் அவருடன் பணியாற்றியுள்ளேன். இப்போது அவர் இல்லாமல் எப்படி அந்த நிகழ்ச்சி நடக்கும் என நினைக்க வைக்கும் அளவிற்கு அங்கு அனைவரிடமும் அன்பாக இருந்திருக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து பாடல் பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றினோம். இப்போது அதை நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

      கடந்த வருடம் அவர் பிறந்தநாளின் போது பேசும்போது கூட, கேரளாவில் இருந்து பலரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தொலைபேசியில் அழைத்திருந்தார்கள். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக மலையாளத்தில் எழுதி கொடு என என்னிடம் கேட்டிருந்தார். ஆனால், இந்த வருடம் அவர் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போதும் அவர் பாடல்களால் நம்மோடு இருப்பார்".

      இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

      Powered by Blogger.