Showing posts with label Entertainment. Show all posts

 


திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பூ பார்வதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான திரைப்படங்கள் குறித்து பேசினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையை அடுத்த வெள்ளலூரில் "குமுக‌‌ழ அழககம்" என்ற பெயரில் குடும்ப அழகு நிலையம் ஒன்றைத் திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை "பூ" பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, "கௌசல்யா மற்றும் அவரைப் போன்ற பெண்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன், 


காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள். அதையும் தாண்டி அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்த கௌசல்யா, நிஜ வாழ்க்கை ஹீரோவாக திகழ்கிறார். அவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கத்தக்கன.மரியான் திரைப்படத்திற்குப் பிறகு ஏன் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, காதல் சார்ந்த திரைக்கதைகள் மட்டுமே எனக்கு தமிழில் வந்தது. அவை மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும், அதனால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றார்.


சென்னை: 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியலின் நடிகருக்கு தற்போது எளிமையான முறையில் திருமணம் முடிவந்திருக்கிறது. 

சத்யா சீரியலில் சசி கேரக்டரில் நடிக்கும் இந்திரன்க்கு திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. 

இந்திரனுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

. வி ஜே அஞ்சனாவின் சிறப்பான பதில் ஜீ தமிழ் சத்யா சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விஷ்ணு நடிக்கிறார். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் பலர் ரசித்து வருகிறார்கள். ரசிகர்களில் ஆதரவினால் தற்போது இந்த சீரியல் டிஆர்பி யில் முதன்மையான இடத்தில் தான் இருந்து வருகிறதாம். குள்ள பூதம் சத்யா கேரக்டரில் கதாநாயகனை விடவும் ஹீரோயினியாக நடிக்கும் ஆயிஷாவுக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆயிஷா கதாநாயகர்களுக்கு டஃப் கொடுக்கிற வகையில் பல சாகசங்களை இந்த சீரியலில் செய்து வருகிறார். ஆண் கெட்டப்பில் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கும் ஆயிஷா அவருடைய ஏரியா பசங்களால் செல்லமாக சத்யா என்று அழைக்கப்படுகிறார். 


சத்யாவின் நண்பர்களின் ஒருவராக குள்ள பூதம் கேரக்டரில் நடிப்பவர்தான் இந்திரன். இவர் சத்யா சீரியலில் மட்டுமல்லாமல் செம்பருத்தி, இரட்டை ரோஜா, என்றென்றும் புன்னகை என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் கதாநாயகர்களின் நண்பனாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இந்திரன். சத்யா சீரியலில் தான் கதாநாயகியின் நண்பனாக நடித்திருக்கிறார். அதுவும் குள்ள பூதம் கேரக்டரில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்த வகையில் உள்ளது என்று கூறி வருகிறார்கள். சீரியலில் மட்டுமல்லாமல் பல ரீல்ஸ் வீடியோக்களிலும் இந்திரன் சமூக வலைத்தளத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். Ads by திடீர் திருமணம் சின்னத்திரை நடிகர்கள் பலர் திடீர் திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நானும் ஒருவர் என்று இந்திரன் நிரூபித்துள்ளார். இவருடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அதே நிலையில் இவருக்கு திருமணம் எப்போது முடிந்தது என்று இவருடைய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திருமணத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இப்படி எளிமையாக முடித்து விட்டாரே என்று பலர் கூறி வருகிறார்கள். இவருடைய திருமணத்திற்கு சத்யா சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல், பல சின்னத்திரை நடிகர்களும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள்.


 


மூத்த மலையாள நடிகரை சந்தித்தது பெருமையாக இருந்தது @மம்முக்கா

 . சார் நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி. அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் நம் நாட்டை ரசிக்க #VisitSriLanka க்கு அழைக்க விரும்புகிறேன்




2020 ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று திரைப்படம்.

நெகிழ்ச்சியான இந்த தருணம் குறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு சுதா கொங்கரா பிபிசி தமிழுக்காக ஹேமாராக்கேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

5 தேசிய விருதுகள் "சூரரை போற்று " திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது? எப்படி இருக்கிறது இந்த தருணம்?

"சூரரை போற்று " திரைப்படத்தில் மாறா என்ன நினைத்தாரோ அதையே தான் இப்போது நான் நினைக்கிறேன். திரைப்படத்தில் அத்தனை கஷ்டங்களுக்கு பிறகு மாறாவின் முதல் பிளைட்டில் மக்கள் அனைவரும் வந்து இறங்கும் போது " ஜெயிச்சிட்டே மாறா " என்ற வார்த்தைகளின் பெருமிதம் இன்றைக்கு எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதேப் போல் 5 தேசிய விருதுகள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

இந்த படத்தை இயக்கும் போது தேசிய விருது பெறுவோம் என்று நினைத்தீர்களா?

நிச்சயமாக இல்லை. படம் இயக்குகிறோம். அது மக்களுக்கு போய் சேர வேண்டும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும். அதை அவர்கள் உணர வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தொகுப்பின் போது பார்க்கையில் சூர்யா எத்தனை உழைப்பை கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் எத்தனை அழகாய் இசையமைத்திருக்கிறார். இவர்களுக்கு விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதோரத்தில் ஒரு சிறிய ஆசை இருந்தது.

சூரரை போற்று படம் இயக்கும் போது, இந்த படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால் யாருக்கு முதலில் விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

நிச்சமாக சூர்யாவுக்கு தான். ஒரு நல்ல கதை நம்மிடம் இருக்கும் போது, முதலில் அதை ஸ்டார் நடிகர் நடிக்க ஒப்புக் கொள் வேண்டும். பின்னர் நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையுமே சூர்யா எனக்கு மிகச்சிறப்பாக கொடுத்தார். சூர்யா என் மீது நம்பிக்கை வைத்தார். என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் 100 மடங்கு சூர்யாவிடம் உழைப்பை எதிர்ப்பார்த்தால் அவர் 1000 மடங்கு உழைப்பை கொடுப்பார். அதற்காக அங்கீகாரம் இன்று அவருக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

காணொளிக் குறிப்பு

YouTube பதிவின் முடிவு, 1

இந்த படத்திற்காக கதை எழுத ஏன் 3 வருடங்கள் எடுத்துக்கொண்டீர்கள்?

ஏனென்றால் கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருந்தன. காந்திய வழியை பின்பற்றும் அவரின் குடும்பம், அவருடைய பள்ளி வாழ்க்கை , பர்சனல் வாழ்க்கை என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது? எவற்றை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என பல கேள்விகள் எனக்கு இருந்தது. படத்தில் கூட ஒரு காட்சியில் பிளைட் லேண்ட் ஆக வேண்டும், அதே சமயத்தில் அதை தீப்பிடித்தது போல் காட்ட வேண்டும். அது அவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்தது. இதை எப்படி ஒரே சமயத்தில் காண்பிப்பது என பயங்கர குழப்பமாக இருந்தது. அதனால் திரைக்கதை வடிவமைப்பு மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் இத்தனை காலம் எடுத்துக் கொண்டேன்.

கேப்டன் கோபிநாத் அவர்களின் கதையை திரைப்படமாக எடுக்க அவர் உடனடியாக ஒப்புக் கொண்டாரா அல்லது உங்களுக்கு அதிக நேரம் எடுத்ததா?

2010 ஆம் ஆண்டு தான் இவருடைய வாழ்க்கைய நாம் படமாக எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய எந்த படமும் வெளிவரவில்லை. அடுத்து வந்த என்னுடைய முதல் படமும் சரியாக போகவில்லை. அதனால் கேப்டன் நிச்சயம் என்னுடைய கதையை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் நினைத்தேன். 2016 ஜனவரி மாதம் இறுதி சுற்று படம் வெளியானது. பல தரப்பில் அது வரவேற்பை பெற்றதும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேப்டன் கோபிநாத் அவர்களை சந்தித்து, உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறி கதையை சொல்ல தொடங்கினேன். அடுத்த 5 வது நிமிடம், ஓகே சுதா, இதை படமாக பண்ணலாம் என ஒப்புக் கொண்டார். இது தான் நடந்தது.

சுதா கொங்கரா

பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER

சிறந்த நடிகைக்கான விருது அபர்ணாவிற்கு கிடைத்த தருணம் எப்படி இருந்தது?

இந்த விருதுகளில் மிக பெரிய விருதாக நான் அதைத்தான் பார்க்கிறேன். ஒரு மிகப்பெரிய ஹீரோ உள்ள படத்தில், 150 படக்காட்சிகளில் வெறும் 25 காட்சிகளில் மட்டுமே வந்த அவரின் கதாபாத்திரம், அதற்காக அபர்ணவின் உழைப்பு இந்த விருதை பெற்றுத்தந்துள்ளது. அதேப்போல் நாங்கள் பெண்கள் 2 பேரும் இந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் எடுத்து திரைக்கதை எழுதினோம். எந்த இடத்திலும் பெண்களுக்குரிய கதாபாத்திரத்தை தவறாக திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

அதேப்போல் கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி, அவர்களின் நிஜவாழ்க்கையில்,10 வருடங்கள் அவருக்கு எந்த வருமானமும் இல்லாத போது, அவருடைய பேக்கரியில் இருந்து வந்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தியிருக்கிறார். அதனால் வரலாற்றில் என்ன நடந்ததோ அதை காட்சியாக வைத்தேன். அபர்ணாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

சூரரைப்போற்று படத்தில் கணவன் மனைவி இருவருமே ஜெயிப்பது போன்ற காட்சிகள் வரும் ? இதற்கு தூண்டுகோலாக இருந்தது எது?

நிச்சயமாக பார்கவி தான். அவரிடம் பலமுறை பேசிய போது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கேப்டன் கோபிநாத்தின் வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக இருந்தது அவரின் மனைவி பார்கவி தான். அதைத்தான் படத்தில் வைத்தேன்.

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருது கிடைத்ததை கொண்டாடிய சுதா கொங்கரா

பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER

படக்குறிப்பு,

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருது கிடைத்ததை கொண்டாடிய சுதா கொங்கரா

மாறா பொம்மியிடம் கடன் கேட்கும் காட்சி பலதரப்பை ஈர்த்தது? இதை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்த காட்சியை முதலில் வைக்கும் போது ஆண் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் பதறினார்கள். ஒரு பெரிய ஹீரோ இதை எப்படி செய்வார் ? இதை மாற்றிவிடலாம் என்று சொன்னார்கள். நிறைய குடும்பங்களில் ஆண்கள் மனைவியிடம் கடன் வாங்குவது நடந்து கொண்டு தானே இருக்கிறது ? அதை ஏன் காட்டக்கூடாது என்று சொன்னேன். சூர்யா ஒரு உண்மையான பெண்ணியவாதி. கதைக்கு தேவை என்றால் எந்த காட்சியிலும் நடிக்க தயார் என்று சொன்னதால் இயல்பாக நடக்கும் எந்த விஷயத்தையும் நான் அகற்றவில்லை.

ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நுழையும் போது என்ன தடைகளை எதிர்கொண்டீர்கள்?

நான் சினிமா துறைக்கு செல்வதில் முதல் எதிர்ப்பை தெரிவித்தது என் குடும்பத்தினர்.எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவரிடம் என்னுடைய ஆசையை சொன்ன போது அவர், உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று ஊக்கப்படுத்தினார்.

சுதா கொங்கரா

நான் முதன்முதலில் நடிகை ரேவதி அவர்களிடம் பணிபுரிந்தேன். எனக்கு 2 சிறிய குழந்தைகள் உள்ளனர் அதனால் இத்தனை மணி நேரம் தான் என்னால் வரமுடியும் என்று தயக்கத்துடன் கூறியதற்கு Quantity of Time ஐ விட Quality of Time மிகவும் முக்கியம் என்று சொன்னார். நான் அவரிடம் வேலைபார்த்த வரை பெண் என்பதில் எந்த சலுகையையும் அவரிடம் நான் பெறவில்லை. பிறகு மணிரத்தினம் அவர்களிடம் பணிபுரிந்தது எனக்கு வேறொரு அனுபவமாக இருந்தது. பல கடினமான கட்டங்களை தாண்டி தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.

உங்கள் முதல் படம் சரியாக வெற்றியடைவில்லை என்ற போதிலும் முதல் வெற்றிக்காக நீங்கள் 6 வருடங்கள் காத்திருந்தீர்கள். அந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

இறுதிச்சுற்று படத்தின் போது முதலில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. முதன்முதலில் நடிகர் மாதவன் அவர்களிடம் தான் கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்து போகவும் தான் அதில் நடிப்பதாக சொன்னார். அது மட்டும் தான் எனக்கு எளிதாக நடந்தது. மற்றது அனைத்தும் எனக்கு சிரமமாக தான் நடந்தது.

நீங்கள் கடந்து வந்த பாதை மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களாகிய நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலுக்குள் வரும் போதே தங்களுக்கான தடைகளை உடைத்து பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம். ஆண்கள் தங்களுடைய வேலையை நிருபிக்க 50 சதவீத உழைப்பை கொடுக்கும் ஒரு இடத்தில் பெண்கள் தங்களை நிருபிக்க 100 சதவீதத்தை உழைப்பை கொடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது. யார் என்ன சொன்னாலும் அது மறுக்க முடியாத உண்மை.

 


நடிகர் அஜித் குமார்

'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'வலிமை' வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

* சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார்.

•நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை 'தல' என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 'தீனா' படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான 'மகாநதி' சங்கர் தான் அஜித்தை 'தல' என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு 'அந்த அடைமொழி' பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.

•'படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியம். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். பின்னாளில் படிக்காமல் போய் விட்டேன் என பல முறை வருத்தப்பட்டது உண்டு. தன்மானம் மிக முக்கியம். நீங்கள் விரும்பிய வேலையை முழு மூச்சாக செய்யுங்கள்' என்பது தான் தன் ரசிகர்களுக்கு அஜித் கொடுக்கும் 'ஆல்டைம் அட்வைஸ்'.

•'வாழு, வாழ விடு' என்பதை எப்போதும் கடைப்பிடிப்பார் அஜித். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். பட வேலைகள், அது குறித்த அறிவிப்பு ஆகியவற்றை நல்ல நேரம் பார்த்தே தொடங்குவார். பெரும்பாலும் அவரது படங்கள் குறித்த எந்த விதமான அறிவிப்பும் வியாழக்கிழமை வெளிவருவது வழக்கம்.

    •காதலில் எதையும் பேசும் சுதந்திரமும், நேர்மையும் மிக முக்கியமானது என்பார் அஜித்.

    அஜித் பிறந்த நாள்

    பட மூலாதாரம்,AJITH

    •தமிழில் 'அமராவதி' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அஜித்திற்கு பரவலான அறிமுகம் கொடுத்தது 'ஆசை' திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் இயக்குநர் வசந்த்திடம் அஜித்தை தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய போது, 'அமராவதி' படத்திற்கு முதலில் நடிகர் அஜித் என் தேர்வு கிடையாது. அந்த கதைக்கு அரவிந்த்சாமியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால், அந்த சமயத்தில் அவரது தேதிகள் கிடைக்காததால் பெண்களுக்கு பிடித்தமான அழகான ஒரு கதாநாயகனை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்தேன். பார்த்ததும் அவரைப் பிடித்து விட்டது. நேரில் கதை சொன்னதும் அவருக்கும் பிடித்து விட்டது. அப்போதெல்லாம் அதிகம் பைக்கில் தான் வந்து போவார். படம் வெளியாகி இன்று வரைக்கும் அவருடைய சினிமா பயணத்தில் முக்கிய படமாக 'ஆசை' இருப்பதில் மகிழ்ச்சி" என்கிறார்.

    •'ஆசை' நாயகனாக இருந்தவரை 'காதல் மன்னன்' ஆக அறிமுகப்படுத்தியது இயக்குநர் சரண் தான். 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'அசல்' என நடிகர் அஜித்தின் ஆரம்ப காலம் தொட்டே அவருடன் பயணித்து வருபவர். 'காதல் மன்னன்' படம் வெளியான பிறகு அஜித்திற்கு முதுகுத்தண்டில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது என்னிடம், 'அடுத்து ஒரு ஆக்ஷன் கதை சொன்னீர்களே, அதை தயார் செய்யுங்கள். விரைவில் நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்றார். அந்தக் கதை தான் 'அமர்க்களம்'. அஜித் எப்போதும் தன்னிடம் நெருக்கமாக பழகுபவர்களிடம் உண்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பார். அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் அவரது தன்னம்பிக்கையும் ஒன்று என்கிறார் சரண்.

    •நடிகர் அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை இவற்றில் எல்லாம் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.

    அஜித் பிறந்த நாள்

    பட மூலாதாரம்,AJITH

    •'ஆசை', 'காதல் மன்னன்' என சினிமாவின் ஆரம்ப காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த அஜித்தை கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் பொருந்தி போக செய்தது 'உல்லாசம்' திரைப்படம் தான். இயக்குநர் ஜேடி இந்த படம் குறித்து பகிர்ந்த போது, "முதலில் இந்த கதை கேட்ட அனைவரும் அஜித்திற்கு இந்த கதாபாத்திரம் பொருந்தாது என்று தான் சொன்னார்கள். ஆனால், அவர் இதில் நடிக்க முழு ஈடுபாடு காட்டினார். இந்த படத்தினால் தான் பின்னாளில் 'அமர்க்களம்', 'ரெட்' போன்ற படங்களில் அவரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

    இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் பிரியாணி செய்து தருவார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த சமயத்தில் எங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுத்திருக்கிறார். 'உல்லாசம்' படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றிருந்த போது முதன் முறையாக அவரது அம்மா அப்பாவையும் அழைத்து வந்திருந்தார் அஜித். படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார்"

    •'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஹெச். வினோத்துடன் தனது 61வது படத்தில் இணைந்திருக்கிறார் அஜித். அஜித்தின் கதாபாத்திரம் எதிர்மறையாக இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என முன்பு பிபிசி தமிழுடனான பேட்டியில் பகிர்ந்திருந்தார் வினோத். மேலும், அவரிடம் பேசிய போது, 'அஜித் எப்போதும இயக்குநர்களை தன்னை ஒப்படைத்தது விடுவார். கதையில் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார். அந்த நம்பிக்கை தான் அவரை வைத்து திரைக்கதையை என் விருப்பபடி அவருக்கு ஏற்றாற் போல செய்ய முடிந்தது" என புன்னகைக்கிறார் வினோத். அஜித்துடனான இவரது அடுத்த படத்திற்கு படப்பிடிப்பு தீவிரமாக ஹைதராபாதில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

     


    சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது.

    உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.

    ஜடா பிங்கெட்டின் குட்டையான முடி குறித்து கருத்து தெரிவித்து மேடையில் பேசினார்.

    ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

    அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடாவின் கண்கள் திடீரென மாற்றம் அடைந்தது. அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பது போல உணர்த்தியது.

    இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.

    ஆஸ்கர்

     


    #BA.Kaiyoom.

    எமது Pirai-FM வானொலி புதிய இடத்தில் புதுப்பொலிவோடு இன்று முதல் தனது சேவையினை மீண்டும் வழங்குகிறது.

    அக்கரைப்பற்று மத்தியகல்லூரி தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு அருகில் அமைந்துள்ள பொதுநூலகக் கட்டிடத்தின் மேல்மாடியில்  இன்று முதல் (07-2-2022) எமது சேவை இடம்பெறும்.எமது O.I.C.- M.B.M.Fazeel,

    புதிய கலையகத்தை வடிவமைப்பதில் முழுமூச்சாய் செயற்பட்ட அன்பு தம்பி Siyahul Haq J  அவர்களுக்கும் அவரோடு சேர்ந்து பூரண ஒத்துழைப்பு வழங்கிய அறிவிப்பாளர் M.L.Sarifdeen, Mr.Chandana OIC - VHF(SLBC) இவர்களோடு,புதியஇடத்தை தந்துதவிய அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாவுல்லா அகமட்ஷகி,மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனுசரணையாளர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

     


    பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கோவிட் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் லதா மங்கேஷ்கர்.

    28 நாட்களாக கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 8:12 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக ஜனவரி 27ஆம் தேதி கூறிய மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் வழங்கிய சிகிச்சையை நிறுத்தினர்.

    1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 1

    Twitter பதிவின் முடிவு, 1

    இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.

    லதா மங்கேஷ்கர் மரணம்

    பட மூலாதாரம்,NIYOGI BOOKS

    இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.

    சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.

    1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.

    அதன்பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார் லதா மங்கேஷ்கர்.

    இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

    எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.

    முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

    லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

     


    நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.

    அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

    இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

    தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.

    இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, "உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் "கடவுளின் வேகம்" என்று தெரிவித்துள்ளார்.

    இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

    இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

    அதுவும் தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தபோது, ​​அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சமூகத்தில் ஒரு பிரிவினர் உணர்ந்தனர்.

    தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர், ஆனால் அது இருவருக்கும் இடையில் எப்போதும் குறிகேகே வந்ததில்லை என இருவரும் தெரிவித்தனர்

    இந்தஇருவரும் எப்படி காதலித்தனர் என்பதை அறிய வேண்டுமா? அது...

    தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

    அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வவர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார். ஆனால் அந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் அதற்கு மேல் எதுவும் இல்லை.

    இந்த காலக்கட்டத்தில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்க்கிறார்கள் என்று ஊடக செய்திகள் தலைப்புச் செய்திகளாயின. சினிமா சிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

    இதைத்தொடர்ந்து விரைவில், இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

    "எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, ​​நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.

    இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, த்ரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்



    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.