Showing posts with label India. Show all posts

அண்ணா பல்கலையில் பி.ஹெச்டி படிப்பிலும் ஊழல்...

அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பேராசிரியை உமா, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
அங்கு, பிரதமர் ரணில் விகரமசிங்கவை ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் சுஜயா கிருஷ்ணரங்காராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். இரவு கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க மனைவியுடன் தங்கினார்.
இதைதொடர்ந்து இன்று காலை 8.45 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை, பிரதமர் அவருடைய மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர். பிறகு, ரங்கநாயகர் மண்டபத்தில் பிரதமர் ரணனில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவியை அமர வைத்து லட்டு பிரசாதம், தீர்த்தம் மற்றும் ஏழுமலையானின் படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலை பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இரண்டாவது மற்றும் கடைசி வரைவுப்பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. இந்தப் பட்டியலில் 2.89 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 40 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட வழியேற்பட்டுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுப்பதே இந்தப் பட்டியல். சட்டவிரதோக் குடியேறிகளை களையெடுப்பதே இந்தப் பட்டியலின் நோக்கம்.
என்.ஆர்.சி.யின் முதல் வரைவுப் பட்டியல் கடந்த டிசம்பர் 31-ஜனவரி 1க்கு இடைப்பட்ட இரவில் வெளியானது. அதில் 1.9 கோடி பெயர்களே இருந்தன.
அசாம் முதல்வரும் இந்திய உள்துறை அமைச்சரும்படத்தின் காப்புரிமைPTI
Image captionஅசாம் முதல்வர் சரபானந்த் சோனாவாலும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும்.
குவஹாத்தியில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்தியப் பதிவுத் துறைத் தலைவர் சைலேஷ் சதுர்வேதி இந்தத் தகவல்களை தெரிவித்தார்.
"இந்தியாவுக்கும், அசாமுக்கும் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நடவடிக்கையின் அளவு முன்னெப்போதும் இல்லாதது. இது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்த சட்ட நடவடிக்கை" என்று அவர் குறிப்பிட்டார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் அனைவருமே தங்கள் குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்களோடு இந்தப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டது.
மாநிலத்தில் வசிக்கும் பெங்காலி முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், அவர்களை முடியுமானால், நாடு கடத்தவும் இந்தப் பட்டியலை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்.படத்தின் காப்புரிமைPTI
ஆனால், பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தெரிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும், உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏதும் இருக்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #Court
வயிற்றில் உள்ள கட்டியை கர்ப்பம் எனக் கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்களுக்கு எதிராக ஒரு பெண் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"எனக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறி தெரிந்ததால், அதே ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் நான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். எனக்கு நவம்பர் 18-ந்தேதி பிரசவம் நடைபெற வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள். தொடர்ந்து கஸ்தூரிபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன்.சீமந்தம் செய்து மகிழ்ந்தனர். 
குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரும் எனக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி என்னை பரிசோதித்த கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நான் கர்ப்பம் அடையவில்லை. அடிவயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக கூறினார்கள். இதைக் கேட்டு எனது குடும்பமே அதிர்ச்சியடைந்தது.கர்ப்பம் அடைந்ததாக கூறியதால், டாக்டர்கள் பரிந்துரை செய்த மாத்திரை, மருந்துகளை 8 மாதங்களாக சாப்பிட்டு வந்தேன்.தவறான பரிசோதனையால், எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என்று சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த அசினா பேகம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

கடந்த சில நாட்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி (94), வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் உடல் நிலை சீரடைந்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் அதையே தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையும் அதையே கூறியது.
கருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு
இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அருகே தொண்டர்கள் வர தொடங்கியுள்ளனர்.
கருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு
கருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு
நள்ளிரவு திடீர் சிக்கல்
கடந்த சில நாள்களாக அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், நோய்த் தொற்று குறைந்து வருவதாகவும் திமுக செயல் தலைவரும் அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தார். ஆ.ராசா, துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர். உறவினர்கள், தலைவர்கள் குவியத் தொடங்கினர். சில டாக்டர்களும் வந்தனர்.
இதையடுத்து சுமார் 12.15 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது.
தொண்டர்கள் கூட்டம் அதற்குள் வீட்டின் முன்பு அதிகமானது.
சுமார் 12.20க்கு கருணாநிதியை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனை நோக்கிப் புறப்பட்டது. உடன் ஸ்டாலின் சென்றார்.
கருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு
கருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு
மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்திருந்தனர். நள்ளிரவு அளவில் கருணாநிதி உடல் நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டதாக செய்தி வெளியானதும் வெளியிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் பலரும் மீண்டும் கோபாலபுரம் வந்தனர்.
"ரத்த அழுத்தம் சீரானது"
20 நிமிட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரடைந்துள்ளதாக மருத்துவமனை முன்பு செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
மருத்துவமனை அறிக்கை.
Image captionதீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதி ரத்த அழுத்தம் சீர்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான மருத்துவ அறிக்கையில், "கருணாநிதியின் ரத்த அழுத்தம் திடீரென குறைந்ததை அடுத்து காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1.30க்கு அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவ மேலாண்மை மூலமாக அவரது ரத்த அழுத்தம் சீர்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழுவினால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 முதல்...
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார் கருணாநிதி. அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று
கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும்வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது.

வாட்ஸ்ஆப் குழுபில் அட்மினா? சர்வ அதிகாரமும் உங்கள் கையில் என நினைத்துவிட வேண்டாம். மாறாக, நீங்கள் சிறைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வாட்ஸ் ஏப்படத்தின் காப்புரிமைSHURAIH NIYAZI

அதே நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.
நம்பமுடியவில்லையா?
ராஜ்கார் மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் (நிர்வாகி) ஒருவருக்கு நடந்த உண்மைச் சம்பவம் இது.
வாட்ஸ் ஆப் குழு ஒன்றின் அட்மின் ஜுனைத்கான் ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
பகிரப்பட்ட செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அந்த செய்தியை அவர் பகிரவும் இல்லை.
ஆட்சேபத்திற்குரிய செய்தியை பகிர்ந்த 21 வயது ஜுனைத்கான் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமைSHURAIH NIYAZI

அட்மினின் சட்டரீதியான பொறுப்புகள்

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டபோது, ஜுனைத் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக இருந்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.
உண்மையில் அந்த வாட்ஸ் ஆப் குழுவை ஜுனைத் உருவாக்கவோ, அட்மினாகவோ இருந்ததோ இல்லை. குழுவை உருவாக்கியவர் குழுவில் இருந்து வெளியேறியதால், குழுவிற்கு ஒரு அட்மின் தேவை என்பதால் தானாகவே அவர் அட்மினாக்கப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தினால், வாட்ஸ்ஆப் நிர்வாகிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகள் மற்றும் இந்த செயலியில் அட்மினின் பங்கு குறித்த விவாதங்கள் புதிய கோணத்தில் எழுந்துள்ளது. முறைகேடான நடவடிக்கைகளில் யாரோ சிலர் இறங்கும்போது, தொடர்பே இல்லாத ஒருவர், அட்மினாக இருப்பதாலேயே தண்டிக்கப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விராக் குப்தாவிடம் கருத்து கேட்டறிந்தோம். "பயங்கரவாத செயல்கள் அதிகமாக நடைபெறும் ஜம்மு காஷ்மீரின் ஒரு மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வாட்ஸ்ஆப் தளத்தின் சட்டப் பொறுப்பு குறித்து அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன."
இந்த சூழ்நிலையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாமல், வாட்ஸ் ஆப் குழு ஒன்றின் அட்மின் ஒருவரை ஐந்து மாதங்களாக சிறையில் வைத்திருப்பது சட்டப்பூர்வமானதல்ல என்று அவர் கூறுகிறார்.
இந்த நிலையில், வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்; ஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகளும் எழுகின்றன

வாட்ஸ் ஏப்படத்தின் காப்புரிமைAFP

வழக்கு என்ன?

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தின் தாலேன் என்ற ஊரில் வசிக்கும் ஜுனைத் கான் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்துவருகிறார்.
2018, பிப்ரவரி 15ஆம் தேதியன்று ஆட்சேபத்திற்குரிய செய்தி அனுப்பியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
"பிரச்சனைக்குரிய அந்த செய்தியை மைனரான ஒருவர் பகிர்ந்திருந்தார். ஆனால் புகார் எழுந்தவுடனே குழுவின் நிர்வாகி வெளியேறிவிட்டார், அதன்பிறகு வேறு இருவரும் குழுவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இதனால்தான் ஜுனைத் எதுவும் செய்யாமலேயே அந்த வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக மாறினார்" என்று ஜுனைதின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
"இந்த நிகழ்வுகள் நடந்த சமயத்தில் ஜுனைத் ஊரிலேயே (தாலேன்) இல்லை. உறவினர் குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு அழைப்பு கொடுப்பதற்காக ரத்லாமிற்கு சென்றிருந்தார்."
"ஊருக்கு ஜுனைத் திரும்பி வந்த பிறகு, அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பாய்ந்தது; அதோடு தேசத்துரோக குற்றச்சாட்டும் பதியப்பட்டது. சிறையில் இருப்பதால் ஜுனைத், பி.எஸ்சி தேர்வு எழுத முடியவில்லை. வேறொரு தேர்வை சிறையில் இருந்தபடியே எழுதினார்."

வாட்ஸ் ஏப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சட்டம் சொல்வது என்ன?

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, மத அல்லது அரசியல் ரீதியாக ஆட்சேபிக்கக்கூடிய செய்திகளை பரப்பினால் அதற்கு சட்டரீதியாக பொறுப்பேற்கவேண்டும்.
"இந்த வழக்கில் சலான் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக விசாரணை முடிவடைந்த பிறகே சலான் கொடுக்கப்படும். குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என குடும்பத்தினர் கருதினால், அவர்கள் அது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். இதற்கு பிறகு விசாரணை நடத்த வேண்டுமானால் அது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் மேற்கொள்ளப்படும்" என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 20 கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் ஆப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டுவதை தடுப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசு கூறுகிறது.
இருந்தபோதிலும், இந்த சட்டங்களை பயன்படுத்தி தனிமனிதர்களின் கருத்து சுதந்திரத்தை காவல்துறையினர் மீறுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

#India.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் இராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு இராமாயணத்தை மகி தலாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ´எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.´ என அவர் தெரிவித்தார்.

இந்தியா-உத்தர காண்ட் மாநிலம், பவுரி கர்வாலா மாவட்டத்தில் உள்ள நனிதன்டா பகுதியில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 47 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டன.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த பாரதிய ஜனதா கட்சி, அந்த அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பதவி விலகியுள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோதி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கும் முடிவை எடுத்ததாக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி அரசில் உள்ள பாஜக அமைச்சர்கள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக, துணை முதல்வர் பதவியில் இருந்த பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் கூறியுள்ளார்.
நியமன உறுப்பினர்கள் இருவர் உள்பட 89 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காஷ்மீர் சட்டமன்றத்துக்கு 2014இல் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 இடங்களும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும் கிடைத்தன.
இந்த கூட்டணி அமைக்கும்போதே செயல்திட்டம் முடிவு செய்யப்பட்டதாகவும், அமைதியை நிலைநாட்டுவதே அதில் முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
"ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அகண்ட பாரதத்தின் ஒரு முக்கிய அங்கம். அங்கு உண்டாகும் பிரச்சனைகளால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பு உண்டாகக்கூடாது," என்று கூறிய ராம் மாதவ், "அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீருக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார்," என்று தெரிவித்தார்.
படத்தின் காப்புரிமைPDP PRO
ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், தற்போது மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளது.
ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் காஷ்மீரில் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை நன்றாக இல்லையென்றும், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், சமீபத்தில் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி ராம் மாதவ் கூறியுள்ளார்.
சமீபத்தில் தீவிரவாத நடவடிக்கைகளும், இளைஞர்களை மூளைச் சலவை செய்வதும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமைVEDANTA
புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமல் அந்த ஆலை இயங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், மே 18-19ஆம் தேதிகளில் அந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடப்பது தெரியவந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதையடுத்து, அந்த ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கும்படியும் ஆலையை மூடும்படியும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனக் கோரி நடந்த போராட்டத்தில் இதுவரை குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதியை அரசு நிறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மக்களையும், பெரிய அளவில் அப்பகுதியின் சுற்றுச் சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று துப்பாக்கிச் சூடு, மரணங்கள், கைதுகள் என்கிற நிலையை எதிர் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையை 'டைப்' செய்து கொண்டுள்ளபோது கிடைத்துள்ள செய்திகளின்படி நேற்றைய (மே 22, 2018) துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12. ஆனால் இன்னும் கூடுதலானோர் இறந்துள்ளனர் என மக்கள் சொல்கின்றனர்.
65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். எராளமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தினை கொடூரமாக எதிர்கொண்ட பின்னும், நேற்று இரவு முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுள் வெனிஸ்டா என்கிற பள்ளி மாணவி (17), புரட்சிகர இளைஞர் முன்னணி எனும் அமைப்பைச் சேர்ந்த தமிழரசன் (45) முதலானோர் அடக்கம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து தீவைத்தனர் அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்தது என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் கேள்விப்படும் தகவல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. போராட்டக் குழுவினர் போராட்டத்திற்கு முதல் நாள் கூடியபோது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். அதை ஒட்டி ஊர்வலமாகச் சென்று, எந்த இடத்தில் காவல்துறையினர் தங்களை மறிக்கிறார்களோ அங்கேயே உட்கார்ந்து கைதாவது என்றுதான் முடிவெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் என்பதை ஒட்டி மிகப் பெரிய அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளன. இந்நிலையில் மக்கள் எவ்வாறு உள்ளே நுழைந்து தீ வைத்திருக்க முடியும் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. காவல்துறையினரே தீ வைத்தனர் என்பதைப்போல சில காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் ஓடிக் கொண்டுள்ளன.
துத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் இதுவரை எதுவும் கருத்துக்கள் கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டின்போது அவர் அலுவலத்தின் உள்ளே இருந்தாரா, துப்பாக்கிச் சூட்டிற்கு அவர் உத்தரவு அளித்தாரா, இல்லை காவல்துறை தன்னிச்சையாகச் சுட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. அதேபோல திரேஸ்புரம் மீனவ மக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக மக்கள் திரண்டு வந்த இடங்கள் அல்லது அவர்கள் கல்லெறிந்ததாகச் சொல்லப்படுகிற இடங்கள் தவிர மீனவர்கள் அதிகமாக வசிக்கும் திரேஸ்புரம் போன்ற பகுதிகளில் கூடிப் பேசிக் கொண்டிருந்த மக்களையும் அங்கு போய் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்றிரவும் பெரிய அளவில் அப்பகுதியில் வீடு புகுந்து மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமை இப்படி ஆனது பற்றிக் கேட்கும்போது வருவாய்த் துறையினர் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படியெல்லாம் நடக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்ய உளவுத்துறை தவறிவிட்டது என்கின்றனர். உளவுத் துறையினரோ உள்ளூர்க்காரர்களைக் காட்டிலும் வெளியூரிலிருந்து வந்தவர்களே (outsiders) எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறியுள்ள செய்தி இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்துள்ளது. யார் இந்த வெளி ஆட்கள்? ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் மற்றும் கூடங்குளம் முதலான போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்ட முகங்கள் பல இந்தப் போராட்டத்திலும் இருந்தன என அவர் பதில் சொல்லியுள்ளார்.
தூத்துக்குடி
அவர் அத்தோடு நிறுத்தவில்லை. அடுத்தகட்டமாக அப்படியான வெளியார்கள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சொல்லியுள்ளார். ஆக "தீவிரவாதிகள் ஊடுருவல்" எனச் சொல்லி, சுட்டுக் கொல்வது உட்பட நேற்று மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை நியாயப்படுத்துவது என்கிற நிலைக்கு இன்று தமிழக அரசும் அதன் காவல்துறையும் சென்றுள்ளன.
அது மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடல் என்பது எல்லா மக்களையும் பாதிப்பதுதான். ஜல்லிக்கட்டு முதலானவையும் பொதுவான தமிழ்ப் பண்பாடு என்கிற அடிப்படையில் எல்லாத் தமிழர்களும் நடத்தும் போராட்டம்தான். கல்பாக்கத்தில் அணு உலை வெடித்தால் சென்னை நகரமே அழியும். இது போன்ற பிரச்சினைகளில் மக்களை "உள்ளூர் X வெளியூர்" (Outsiders X Insiders) என்றெல்லாம் பிரித்து வெளியார்கள் = தீவிரவாதிகள் (Outsiders = Outlaws) என மேற்கொள்ளப்படும் மொழி விளையாட்டு மிகக் கொடூரமான ஒன்று.
சென்ற ஆண்டில் தெலங்கானாவிலிருந்து சட்டிஸ்கர் சென்ற ஒரு உண்மை அறியும் குழுவினர் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் ஆறு மாதங்கள் வரை சிறையிலிருந்தனர். கூடங்குளம் போராட்டத்தில் அப்படி வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒரு உண்மை அறியும் குழுவினர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
தூத்துக்குடி
இன்னும் கொஞ்ச நாள் போனால் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குப் போவதற்கே 'விசா' வாங்க வேண்டும் எனச் சொல்வார்கள் போல. அதெல்லாம் மேகாலயா போன்ற மாநிலங்களில் இன்று நடைமுறையில் இருப்பதுதானே. ஏதாவது போராட்டம் நடக்கிறதென்றால் அந்த மாவட்டத்துக்குள்ளேயே போகக் கூடாது எனச் சொல்லவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.
போராட்டங்களை இப்படி ஒடுக்குவது என்பதைத் தமிழக அரசு சமீப காலமாக ஒரு வழக்கமாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் அப்படித்தான் அவர்கள் இறுதி நாளில் கடும் தடியடிப் பிரயோகத்தின் மூலம் ஒடுக்கினார்கள். கூடங்குளம் போராட்டத்தின் இறுதியில் ஆயிரக் கணக்கானோர் மீது வழக்குத் தொடுத்தார்கள். போராட்டக்காரகளுக்குத் தொழில் ரீதியில் விளம்பரப் பலகைகள் எழுதியவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளினார்கள்.
வாய்ப்புக் கிடைத்தால் காவல்துறை மிகக் கொடூரமாக நடந்துகொள்வது என்பது தமிழகத்தில் வழக்கமாகி விட்டது. 1999 ல் தாமிரபரணி ஆற்றில் 17 பேர்களைச் சுட்டுக் கொன்றனர். 2011 ல் பரமக்குடியில் ஆறு பேர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இன்று தூத்துக்குடியில் அவர்களின் வெறியைக் காட்டியுள்ளனர். இப்படியான எல்லா அத்துமீறல்களிலும் காவல்துறையைக் காப்பாற்றியே தீருவது என்பதை அரசுகள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும்வரை இப்படியான துப்பாக்கிச் சூடும் படுகொலைகளும் தொடரத்தான் செய்யும். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த சில வாரங்களில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா காவல்துறையினருக்குப் புதிய சலுகைகளை அறிவித்தது நினைவுக்குரியது.
வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்களின் எதிர்ப்புகளை மீறி 1996 முதல் இயங்கி வருகிறது. தூத்துக்குடி 'சிப்காட்' டில் இயங்கி வரும் அது ஆண்டுக்கு 4 இலட்சம் டன் தாமிரத்தையும், அதோடு பாஸ்பாரிக் மற்றும் கந்தக அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த ஆலையிலிருந்து வரும் கழிவுகள் புற்று நோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக உள்ளன. இதை மூடவேண்டும் என மக்கள் கோரிக் கொண்டுள்ள நிலையில் மேலும் 4 இலட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவில் அது விரிவாக்கம் செய்ய இருப்பதை மக்கள் அச்சத்தோடு எதிர்கொண்டு தீவிரமாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி
இன்று முதலமைச்சர் எடப்பாடி அரசு இது குறித்துச் சட்ட ரீதியாகப் போராடி வருவதாகச் சொல்லியுள்ளார். கழிவுத் தொட்டி சரியாக இல்லை என்பதுபோல காரணங்களைக் காட்டித்தான் அரசு அந்த ஆலையை மூட வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்துள்ளது. அப்படியான கோரிக்கைகளையும் கூட நிறைவேற்ற முடியாதென்றுதான் வேதாந்தா நிறுவனம் வழக்கை இழுத்தடிக்கிறது. இந்நிலையில் சட்டபூர்வமாகப் போராடுவோம் என எடப்பாடி சொல்லி வருவது மக்கள் காதில் பூ சுற்றுகிற வேலை.
கமலஹாசன் போன்ற 'புதிய அரசியல்' செய்யக் களம் புகுந்துள்ள நடிகர்கள் இப்படிக் கொடூரமாக மக்கள் போராட்டங்களை அரசு எதிர்கொள்வதைக் கண்டிக்காமல் "இரத்தம் சிந்துகிற மாதிரியான போராட்டம் நடத்துவது தவறு" என மக்களுக்கு அறிவுரைகள் சொல்வது அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது..
கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆளுக்குப் பத்துலட்சம் தருவதாக அறிவித்துப் புன்னகைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. "இப்படியான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூடு தவிர்க்க இயலாது" என மீசையை முறுக்குகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
தூத்துக்குடி நகர் முழுவதும் கடைகள் மூடிக் கிடக்கின்றன. திரை அரங்குகளில் இரண்டு நாட்களாகப் படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. 2500 காவல்துறையினர் சூழ நின்று நகரமே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போலக் காட்சி அளிக்கிறது. ஒரு துக்கவீடாக இன்று சோகம் கப்பிக் கிடக்கிறது அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற கடலோர நகரம்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.