Showing posts with label Sri lanka. Show all posts

 


நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை 05, 06, 07ம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிளை புனரமைப்புக் கூட்டம் இன்று 18.05.2024 தொழிலதிபர் பீ.ரீ.அப்துல் மஜீத் (கபீர்) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை கிறீன்பீல்ட் பள்ளிவாசல் நிருவாகிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்முனை கிறீன் பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித் புனர் நிர்மானப்பணிகள் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்பட்டு புனரமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறந்து வைக்கப் பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு வருகை தந்திருந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு பட்லி ஹிஷாம் ஆதம் அவர்களினால் பள்ளிவாசல் நேற்று(18)திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அவர்களின் பாரியார்,கொழும்பு YWMA தலைவி பவாஸா தாஹா உட்பட அதன் நிருவாகிகள், மனித உரிமைகள் அமைப்பு லங்கா நிருவாகப் பணிப்பாளர் எம்.என்.எம்.அஸீம்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் பிரதிநிதிகள்,உலமாக்கள்,முஹ்யித்தீன் மஸ்ஜித் நிருவாகிகள்,ஏனைய பள்ளிவாசல் நிருவாகிகள்,நலன் விரும்பிகள்,மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.



நூருல் ஹுதா உமர்
பெண்களுக்கு மார்க்க கல்வியை புகட்டி வரும் நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை கையளிக்கும் நிகழ்வும், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக்கல்லூரி வளர்ச்சி தொடர்பிலான கலந்துரையாடலும் இன்று (18) நடைபெற்றது.
நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட கிளை செயலாளருமான விரிவுரையாளர் மௌலவி ஏ.எல். நாஸர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதரஸாவில் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.

இதன்போது நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நலன் கருதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை மதரஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது பிரின்ஸ் காலேஜ் இற்கான நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் நிர்வாக இயக்குனர் எம்.எம். றியாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.எம். சாலிதீன் (ஹாமி), செயலாளர் ஐ. பாயிஸ், பொருளாளர் எம்.ஐ. யாகூப், இயக்குனர் சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜௌபர், உதவி செயலாளர் எம்.ஐ. நிரோஷ், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், மாணவிகள், அவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகரத்தை 4ஆக அல்லது 48 ஆக பிரியுங்கள்.
ஆனால் 
கல்முனை நகரத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது.கல்முனை என்பது தமிழர்களின் தாயகம் .

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கவிந்திரன் கோடீஸ்வரன் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

குறித்த ஊடகச் சந்திப்பு அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்றது. அச்சமயம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் க.சிவலிங்கம், தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச தலைவர் கே.ஜெகநாதன்( குமார்) ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கு கோடீஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்... நேற்று சமூக வலைத்தளங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்களின் கருத்தினை அவதானித்தேன்.

 அவரது கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக 56வது நாளாக மழையிலும் வெயிலிலும் கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றது .அந்த எதிர்வினையான கருத்துக்கு பதிலடி கொடுக்க எனக்கு கடமை இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தின் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாக கூறுகின்றார் .இது அப்பட்டமான பொய். உணர்வுள்ள அனைத்து மக்களும் இணைந்து  நிர்வாக அதிகார பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தை நடத்துகின்றனர் . 1993 இல் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான பூரண அதிகாரங்களை அவர்கள் கேட்கிறார்கள்.
56 நாட்களாக இந்தப் போராட்டம் நடக்கிறது. அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர் அரசாங்க அதிபர் ஆவார். அவர் இன்னும் அங்கு வந்து அந்த மக்களின் உணர்வலைகளை கருத்தைப் பெற முயற்சிக்கவில்லை. இது மிகவும் கவலையான விடயம். ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக இந்த விடயத்தை கூறி இருக்கிறோம் .ஓர் அரசாங்க அதிபர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும்.அவர் அரச நிருவாகி. ஓரினத்திற்கு மாத்திரம் கடமை செய்ய அவரை ஜனாதிபதி நியமிக்கவில்லை.

ஒரு இனத்துக்கு பாரபட்சம் காட்டி இன்னொரு இனத்தை அரவணைத்து செல்வது உலகத்தில் எங்கும் நடக்காத விடயம். அது இங்கு நடக்கிறது.
 கல்முனையை நகரை நான்காக பிரிக்க போவதாக ஹரிஷ் கூறுகின்றார் .அது அவரது சொந்த கருத்து.அவர்  நான்காக அல்ல 48 ஆக பிரிக்கட்டும் . எத்தனை பிரிப்பு வந்தாலும் எமது கல்முனை தமிழ் பிரதேசங்களில்உள்ள 29 கிராம சேவை பிரிவுகளிலே எந்த ஒரு இஞ்சி நிலத்தை கூட விட்டுக் கொடுக்க முடியாது .
கல்முனை என்பது தமிழர்களின் தாயகம். 

அவர் கல்முனைக்கு பிதா, தான் என்று கூறுகிறார் .
அவர் கல்முனைக்கு பிதாவாக ஒருபோதும் இருக்க முடியாது.
 தேவையானால் அவர் பிறந்த கல்முனைக் குடிக்கு  பிதாவாக இருக்கட்டும் . அல்லது சாய்ந்தமருதுக்கு மருதமுனைக்கு இருக்கட்டும்.


ஆனால் எங்களுக்கு இருக்க முடியாது. கல்முனை நகரம் தொண்ணூறு வீதம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற தமிழர் தாயகம் .அதை துண்டாடி பிரித்து கையாள்வதற்கான சதித் திட்டமே இதுவாகும்.
 இதே செயல்பாட்டில் முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஈடுபட்டிருந்தார். இப்பொழுது இவர் ஈடுபடுகின்றார் .

இந்த துண்டாடும் கோஷத்தை முன்வைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கின்றார்.

 தமிழ் மக்களின் நியாயமானதும் உரிமைகளை குழப்ப முனைகிறார்.ஒரு போதும் முடியாது.அது பகல் கனவு.

 இந்த பிரிவுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து வளங்களையும் மக்களையும் உள்ளடக்கிய தனியான பூரண அதிகாரம் மிக்க பிரதேச செயலகம் ஒன்றே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றியே தீருவோம் என்று சூளுரைத்தார்.


 வி.சுகிர்தகுமார் 0777113659   

 அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.
சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள் திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல்அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (18) இரவு 8.00 மணி முதல் நாளை (19) காலை 6.00 மணி வரை மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று (18) சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை  பிறப்பித்திருந்நது.

அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  மற்றும் காரைதீவு வினாயகம் விமலநாதன் ஆகியோர் 
நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தன் பேரில் நீதிமன்றம் அத் தடையுத்தரவு நேற்று  வெள்ளிக்கிழமை விலக்கி கொள்ளப் பட்டது.

அதன் பயனாக பாண்டிருப்பு  திரௌபதி அம்மன் ஆலயம் முன்றளில் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளர்  துஷாந்தன் ஏற்பாட்டில் சுடரேற்றி கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதான பிரமுகராக கலந்து கருத்துரைத்தார்.

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம் பொ.செல்வநாயகம் திருமதி சுமித்ரா சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலய வளாகத்தில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

 உறவுகளை நினைவு கூர்ந்து கஞ்சி வழங்கப்பட்டது.

 


யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.


இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.


இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.


அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.


அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.







(கனகராசா சரவணன்;)
வாழைச்சேனையில் ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்கள்  உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்பு ஒருவர் காணாமல் போயுள்ளார்--

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதிலிருந்த் தப்பி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை (17)  மாலையில் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர்  மீட்டகப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர்; 9 ம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள்  வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 12 ம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதன் போது கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினார் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த  3  மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டனர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர்  ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர்  கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனா


 சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கடமைகளை பொறுப்பேற்றார். 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். 


சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார். 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதி2024.5.16 இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது

 


கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக ஏ.எஸ்.எம்.பாயிஸ் நியமனம்.


இலங்கை திட்டமிடல் சேவையைச் (1)சேர்ந்த ஏ.எஸ்.எம்.பாயிஸ் கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (15) நியமிக்கப்பட்டார்.


மூதூரைச் சேர்ந்த இவர் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில் திட்டமிடல் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

அத்துடன் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அதிகாரசபை போன்றவற்றில் பொது முகாமையாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


ஏறாவூர் மாணவர்களின் அழகிய முன்மாதிரி

 

நேற்று (15) கல்விப் பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். 


அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.   


Photo credit to it's respective owner


 நூருல் ஹுதா உமர் 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டாலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது. 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தலைமையில் காரைதீவு, நிந்தவூர், இறக்காமம் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகளும், அந்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார அதிகாரிகளும், பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து நடாத்திய உணவு நிலைய பரிசோதனைகளில் 67 நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த 13 நிறுவனங்களில் இருந்து பெருமளவான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டது. இதன் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 நிறுவனங்களுக்கு எதிராகவும் 105,000/- தண்டம் அறவிடப்பட்டது.

இந் நிகழ்வில் பங்கு கொண்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். ரயீஸ், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கும் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.


சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு மற்றும் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த இருவருக்கும் ரூபா முன்று இலட்சம் அபராதம் இன்றைய தினம் விதிக்கப்பட்டது.

இன்றைய தினம் குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்,அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு வைத்திருந்த குற்றவாளி ஒவ்வொருக்கும்  தலா ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வீதமும், அதனைக் காய்ச்சும் உபகரணங்களை வைத்திருந்தமைக்காக ருபா இருபத்தையாயிரமும் விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளிக்கு ரூபா 150 000.00 தண்டப்பணம் விதிக்கப்ட்டது. இருவருக்கும் ரூபா மூன்று இலட்சம் தண்டப்  பணமானது அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களினால் விதிக்ககப்பட்டது.

 


*நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது  வழக்குப்பதிவு இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது*


இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.


மட்டக்களப்பில் இ.போ.ச. பஸ் சாரதி, மீது தாக்குதல் - தனியார் போக்குவரத்து சாரதி தப்பி ஓட்டம் இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!
மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதல் சாரதி நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட சாரதி பஸ் வண்டியுடன் தப்பி ஓட்டம் நடுத்துனரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் சம்பவதினமான பகல் 11.10 மணியளவில் பிரயாணிகளை ஏற்றுவதற்காக தனியார் பஸ்வண்டி தரித்து நின்றுள்ளது. இதன் போது பின்னால் கல்முனையை நோக்கி பிரயாணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சாலைக்கான பஸ்வண்டி சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பஸ்வண்டி சாரதியை பஸ்வண்டியை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் பஸ்வண்டி சாரதி கோபமடைந்து பஸ்வண்டியில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி,நடத்துனர் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து தனியார் பஸ்வண்டி சாரதி பஸ்வண்டியுடன் தப்பி ஓடியதையடுத்து இதில் காயமடைநத இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் தனியார் பஸ்வண்டி நடத்துனரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குழுவினர் மேற்கொண்ட சந்திப்பின் எதிரொலியாக பல மாற்றங்கள் நிகழவுள்ளன.

அம்பாறை தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இல்மனைற் அகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள் . சுமார் ஒரு மணி நேரம் இச் சந்திப்பு இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் மன்னர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்,
சமூக செயற்பாட்டாளரும் மாணவர் மீட்பு பேரவை தலைவருமான செல்வராஜா கணேசானந்தம், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச தலைவர் கே.ஜெகநாதன்( குமார்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஜனாதிபதி தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது . விரிவான மகஜரும் சமர்ப்பிக்கப்பட்டது.


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமித்தல்  மற்றும் புதிய கணக்கு ஆரம்பித்தல் தொடர்பாக ஆரம்பத்தில் விரிவாக பேசப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கையை கோடீஸ்வரன் முன்வைத்தார்.

அப்படி அதனை செய்யும் பட்சத்தில் தங்களுக்கான ஆதரவை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முழுமையாக வழங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.

 ஜனாதிபதி அதனை பரிசீலீப்பதாகவும் நாளை பிரதம மந்திரியுடன் கலந்துரையாடிவிட்டு இதனை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதாக குழுவினரால் சுட்டிக் காட்டப்பட்டது.

 இதனால் கடல் தொழில் புரிகின்ற ஏனைய விவசாயத்துடன் தொடர்புபட்ட தமிழ் மக்கள் சுமார் 15000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

 அது மட்டுமல்ல கடல் வளம் முருகைக் கற்கள் மீன்பிடி போன்றன பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதனை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த இடத்தில் தொலைபேசி தொடர்பு கொண்டு பணிப்புரை விடுத்தார்.

மேலும் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
குறிப்பாக பொத்துவில் வடக்கை மையமாக வைத்து ஒரு பிரதேச சபையும் சம்மாந்துறை மேற்கு தமிழ் பிரதேசங்களை மையமாக வைத்து மல்வத்தை  பிரதேச சபையும் ஏற்படுந்தப்படுவதன் அவசியத்தை இடித்துரைத்தார்.

மேலும் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை உள்ளடக்கியதாக ஒரு புதிய வலயம் உருவாக்கு தொடர்பாகவும் அங்கே பேசப்பட்டது.

அடுத்து தமிழர் பிரதேசங்கள் பொதுவான  நிதிப்பங்கீட்டில் பாரிய புறக்கணிப்பை எதிர் நோக்கி வருகின்றது.  தமிழர் பிரதேசங்களில் இணைப்பு குழு தலைவர்களாக பிறர் இருப்பதால் இந்த புறக்கணிப்பு பாரபட்ச இடம் பெறுவது சுட்டிக்காட்டப்பட்டது.

 மேலும் திருக்கோவில் ஆதரவைத்தியசாலை பெயரளவில் நான்கு ஐந்து வைத்தியர்களுடன் உடன் இயங்குவதாகவும் அங்கு உண்மையில் 25க்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஆளணி தேவைப்படுவதாகவும் ஏனைய வைத்திய உபகரணங்கள் அங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச பெரிய களப்பில் கடல் நீர் கலப்பதால் ஏற்படும்  பாதிப்பு பற்றி கூறப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக இங்கு சமர்ப்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை படிப்படியாக செய்வதாக ஜனாதிபதி உறுதி அளித்தார்.


 அக்கரைப்பற்று பட்டியடிப்பட்டியில் தனது சகோதரான 5 வயதுச் சிறுவரினம் இருந்து விழுந்த குழந்தை மட்டக்களப்பு வைத்தியசாலையில், மரணித்துள்ளது.

குறித்த மரணித்தவர் 3 வயது நிரம்பிய ஹாலிக் என்பதாக தெரியவருகிறது. தனது மூத்த சகோதரனான 3 வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருந்த வேளையில், குறித்த இந்த சிறிய  குழந்தை தவறி விழுந்து அக்கரைப்பற்று கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.