Showing posts with label Technology. Show all posts

 


இலங்கை அரசாங்கம் நான்காவது முறையாக சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளது. Netblocks நிகழ்நேர நெட்வொர்க் தரவுகளின்படி, இலங்கை நாடு தழுவிய சமூக ஊடக முடக்கத்தை விதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. சுமார் 12 சமூக ஊடக தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், ஃபேஸ்புக் மெசஞ்சர், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப், ஸ்னாப்சாட், ட்விட்டர் பெரிஸ்கோப், கூகுள் வீடியோ, டிக்டோக், வைபர், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை பிளாக் ஆகும். திகன - கண்டி கலவரம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை மோதல்களின் போது முன்னர் அறிவிக்கப்பட்ட தடுப்பு. ட்விட்டர் சீர்குலைவு நாடு தழுவிய 2வது தணிக்கை ஆகும். பெரும்பாலான போராட்டங்கள் சமூக ஊடக அரட்டைக் குழுக்கள் வழியாகத் திட்டமிடப்படுவதால், தற்காலிகத் தடை எதிர்ப்பாளர்களிடையே தகவல்களைப் பகிர்வதை நிறுத்தக்கூடும். மேலே உள்ள சமூக ஊடக தளங்களை நேரடியாக அணுக முடியாது என்று பயனர்கள் புகார் கூறுகின்றனர். பயனர்கள் VPNகள் வழியாக சமூக ஊடக தளங்களை அணுகுகின்றனர்.


 வி.சுகிர்தகுமார் 

  ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த மக்கள் வங்கியின் தன்னியக்க பணமீளப்பெறல் இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் தன்னியக்க பணவைப்பு இயந்திரத்தின் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அக்கரைப்பற்று மக்கள் வங்கிகிளையின் முகாமையாளர் எம்.பி.எம். அன்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்.பிரேமானந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை  மேயர் அதாவுல்லா அகமட் சகி ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எச்.டி.குணரெட்ண மற்றும் பிராந்திய உதவி முகாமையாளர் டபிள்யு.எம்.டி.வீரசிங்க, எஸ்.பி.சூரியகுமாரன் வைத்தியர் த.தர்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் தன்னியக்க பணவைப்பு நிலையத்தை அதிதிகள் திறந்து வைத்ததுடன் இயந்திரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.
பின்னர் கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவதுறையில் 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த வைத்தியர் த.தர்ஷிகாவிற்கு 75 ஆயிரம் ரூபா காசோலை விசேட பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் ஆலையடிவேம்பு மக்கள் வங்கி கிளையில் நிர்மாணிக்கப்பட்ட தன்னியக்க பணமீளப்பெறல் இயந்திரத்தை அதிதிகள் திறந்து வைத்து பணமீளப்பெறல் செயற்பாட்டையும் ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து வங்கியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு அக்கரைப்பற்று மக்கள் வங்கிகிளை முகாமையாளர் எம்.பி.எம். அன்வர்  நன்றி தெரிவித்தார்.

 


ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்சேனல் ஆரம்பித்து வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்து யூட்யூப் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.


2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் வீடியோவைப் பதிவிட்ட இசாக் முண்டாவுக்கு அந்த சமயத்தில் எந்த ஆதரவும் இல்லை. ஓரிசாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில், ஒரு தினக்கூலியாக பணிபுரிந்து வந்த இசாக், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்திருந்தார். வாழ்வாதரமாக இருந்த வேலையும் போனதால் கடுமையான சிரமத்தில் தவித்துக் கொண்டிருந்தார்.


ஆனால், இதெல்லாம் ஒரு புள்ளி வரைக்கும் தான்.


தனது குழந்தைகள் யூட்யூபில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அவ்வளவுதான். ஏன், நாமும் இதை முயற்சிக்கக் கூடாது என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்று தைரியமாக வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தார்.


ஆடம்பரமற்ற, எளிமையாக செய்யக் கூடிய உணவுகளை சாப்பிட்டு வீடியோக்களை பதிவிட ஆடரம்பித்தார். இவரது முதல் வீடியோ எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் பார்வையாளர்களைப் பெறவில்லை. ஏறக்குறைய ஒரு வாரம் வரை தனது முதல் வீடியோவை ஒருவர் கூட பார்க்கவில்லை. இதனால் தான் மனம் உடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பின்பு மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்க திட்டமிட்டார். அதேசமயம், பிரபல யூடியூபர்கள் தங்களது வீடியோக்களை எவ்வாறு பகிர்ந்துள்ளனர் என்று கவனித்துள்ளார்.


பின்னர், முகநூலில் தனக்கு ஒரு கணக்கு தொடங்கி தனது யூடியூப் வீடியோவை அதில் பகிர்ந்து உள்ளார். இம்முறை அவருக்கு 10 முதல் 12 பார்வையாளர்கள் கிடைத்தனர்.


வேலையிழந்த கூலித் தொழிலாளி

இப்படியே நகர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு வீடியோ வைரலாகி அதிக பார்வைகளைப் பெற்றது.


இதன் மூலம் சில நாட்களிலேயே சுமார் 20,000 பேர் அவரது சேனலை பின்தொடர்ந்தாகவும் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா, போன்ற நாடுகளில் இருந்தும் கூட பார்வையாளர்களைப் பெற்றதாகவும் கூறுகிறார் ஐசக்.


இதுதான், தொடர்ந்து வீடீயோக்களைப் பதிவிட அவரை ஊக்குவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவரது யூடியூப் சேனலான 'இசாக் முண்டா ஈட்டிங்' 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் 10 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்து உள்ளது.


தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்

உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?

இப்பொழுது இவரால் கேமராவின் முன்பு தயக்கம் இன்றி பேசவும் இயல்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் முடிகிறது என்பதை இவராலேயே உணர முடிகிறது என்கிறார்.


கடந்த ஆண்டு நடந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் - மன் கி பாத் - வானொலி உரையாடலின்போது, கலாசாரம் மற்றும் உணவு முறைகளின் கலப்பு குறித்து பேசுகையில் பிரதமர் இவரைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.


தற்போது இவரது வீடியோக்கள் யூட்யூபில் `முக்பேங்` என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முக்பேங் பிரிவு என்பது வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டபடியே மக்களிடம் பேசும் வகையிலான வீடியோக்களுக்கான பிரிவு. இவ்வாறு உணவு வகைகளை சாப்பிட்டு வீடியோ வெளியிடும் வழக்கம் 2010 இல் ஜப்பானில் தொடங்கியது. பின்னர், நாளடைவில் இந்த மாதிரியான வீடியோக்கள் இந்தியாவிலும் பிரபலமாயின. இது போன்ற முக்பேங் வீடியோக்களுக்கு தற்போது பெருமளவு பார்வையாளர்கள் உலகளவில் உள்ளனர்.


இந்த விடியோக்களின் ரசிகர்கள், தாங்கள் உணவு உண்ணும் வேளையில் இந்த வீடியோக்களை பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக தனியாக உணவு உட்கொள்ளும் வேளைகளில் தங்கள் தனிமை உணர்வைப் போக்கவும், இது தங்களுடன் இன்னொருவரும் உணவு உட்கொள்வது போன்ற மனநிலையைப் பெறவும் இந்த வகை வீடியோக்கள் உதவுவதாகவும் கூறுகின்றனர்.


ஆனால் இதுகுறித்தெல்லாம் அப்பொழுது இசாக் முண்டாவிற்கு எதுவும் தெரியாது.


உணவு வீடியோக்களை வெளியிடுவதற்கு முன்பு பல விதமான வீடியோக்களை வெளியிட முயன்றதாகவும் கடைசியில் உணவு மூலமாக தங்களின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது என்பதை மக்களுக்கு காட்டினால் அது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார்.


யூடியூப் தனக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியதாகவும் யூடியூப் வழிகாட்டி வீடியோக்கள் மூலம் எந்த வகையான கேமரா வாங்குவது எப்படி வீடியோக்களை பதிவு செய்வது, பதிவு செய்த வீடியோக்களை எப்படி எடிட் செய்வது? புதுப்புது உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை எல்லாம் யூட்யூப் வீடியோக்கள் மூலமே கற்றுள்ளார்.


முதன் முதலில் வீடியோவிற்காக தனது சேமிப்பில் இருந்து 3000 ரூபாயை ஒதுக்கி, அதன் மூலம் தவணை முறையில் ஒரு நவீன ஆண்ட்ராய்டு கைபேசியை வாங்கியுள்ளார்.



இவரால் தனது பள்ளி படிப்பை முடிக்க இயலவில்லை. இருப்பினும் ஓரளவு தனக்கு தெரிந்த ஆங்கில அறிவைப் பயன்படுத்தி தனது சேனலின் உயர்விற்காக தானாகவே மின்அஞ்சல் அனுப்புவது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது, கூகுள் மொழிபெயர்ப்பை பயன்படுத்துவது போன்றவற்றை தெரிந்து கொண்டுள்ளார்.


அவரது முதல் வீடியோவில் அவர்மட்டும் சாதாரணமாக உணவு உட்கொள்வதை ஒரே ஷாட்டில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லித் தொடங்கிவிட்டு (அவரது மொழியில்) நான் இப்பொழுது சாப்பிடப்போகிறேன் என்று கூறுகிறார். பின்பு தனது தட்டில் என்னென்ன உள்ளது என விவரிக்கிறார். பின்பு சாப்பிட்டு முடிக்கிறார்.


ஆனால் பிப்ரவரி 2022 இல் இருந்து சாதாரணமாக அணைத்து வேளைகளிலும் உணவு உண்ணும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்த்துவிட்டு, விழாக்கால உணவுகள் , கிராமப்புற விருந்து போன்ற வீடியோக்களை மட்டும் பதிவேற்றத் தொடங்கினார்.


விளைவு, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் இவரது வீடியோவிற்கு கீழ் தங்கள் உணவு முறைகளையும் ஒப்பிட்டுதங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதிவிடுகின்றனர்.


பெரும்பாலான மக்கள் இவருடைய வெளிப்படையான சித்தரிப்பில்லாத இயல்பான மொழிநடையிலான வீடியோக்களை விரும்புகின்றனர்.


குற்றங்கள் குறித்து பேசும் யூட்யூபர் - யார் இந்த T5T சரவணன்?

ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இவரது பார்வையாளர் ஒருவர் இவருக்கு உணவின் அருமை தெரிந்து உள்ளதாகவும் அதற்கு தகுந்த முறையில் மரியாதை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.


பின்பு தனது சப்ஸ்கிரைபர் ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க பல்வேறு உணவு வகைகளை சமைத்து சாப்பிடும் வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்து உள்ளார். உதாரணமாக வட இந்திய உணவு வகைகளான `ஆலூ பராத்தா` போன்றவை.


அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் உணவு உண்ணும் போட்டி நடத்தி அந்த வீடியோக்களையும் வெளியிடுவது உண்டு.


தினமும் இறைச்சி உணவு உண்ணும் அளவு பொருளாதார வசதி வந்துவிட்டாலும் கூட, தற்பொழுதும் பெருமளவு சாதாரண உணவு வகைகளையே சாப்பிடுவதாகவும் அதையே விரும்புவதாகவும் கூறுகிறார்.


குழந்தைகளின் எதிர்காலம் :

முண்டா கூலி தொழிலாளியாக இருந்த பொழுது அவருடைய ஒரு நாள் வருமானம் 250 ரூபாய் மட்டுமே. "மாதத்தில் 18 முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஆறு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருவாய் போதுமானதாக இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் , அவரது வீடியோகளுக்கான வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க, மாத வருமானம் சுமார் 3 லட்சத்தை எட்டியது.


பார்வையாளர்கள் குறைந்த பொழுது அவரது வருமானமும் குறைந்து உள்ளது. இவர் தற்பொழுது மாதம் அறுபது ஆயிரம் முதல் - எழுபது ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.


அவர் இவ்வளவு காலமாக ஈட்டிய வருவாயில் தனது குடிசை இருந்த இடத்தில் ஒரு இரண்டடுக்கு மாடிவீட்டைக் கட்டியுள்ளார். இதற்காக சுமார் 20 லட்சம் ரூபாயை செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.


மேலும், "தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கிறார். ஒரு பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அத்துடன் தன் எடிட்டிங் தேவைகளுக்காக மடிக்கணினி ஒன்றையும் வாங்கியுள்ளார்.


அத்துடன் "தனது கிராமத்தில் தான் ஒரு பிரபலமாக மாறியுள்ளதாகவும் அவ்வப்பொழுது அப்பகுதி மக்களுக்கு கோழிக்கறியுடன் கூடிய பிரமாண்டமான விருந்து அளிக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்..


முண்டாவின் அடுத்த குறிக்கோள், "தனக்கு அருகில் உள்ள நகர்புறத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் தன்னுடைய குழந்தைகளை படிக்க வைப்பதுதான்."


என்னுடைய குறைந்தபட்ச கல்வியைப் பயன்படுத்தியே என்னால் இவளவு செய்ய முடியும் என்றால், அவர்களுக்கு நல்ல கல்வியை மட்டும் அளித்துவிட்டால் அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்ய முடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஐசக் முண்டோ.

 


பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்கான 'ஜனனி' திட்டத்தினை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குமான மக்கள் இயக்கம் (கபேஅமைப்பு ) தேர்ந்தெடுக்கப்பட்ட  சில மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.


இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திற்கான  முதலாம் கட்ட நிகழ்வு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தேசிய  நிறைவேற்று பணிப்பாளர்  அஹமட் மனாஸ் மக்கீன் அவர்களின்  நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் அவர்களின்  இணைப்பில் கல்முனையில்  சனிக்கிழமை(26) மாலைஇடம்பெற்றது .

இந் நிகழ்வில்  டிஜிட்டல்  கல்வியறிவினை  மேம்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஊடக கோட்பாடுகள், ஊடக  சந்திப்புக்களில் உரையாற்றுகின்ற விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம்,இணையவழி வன்முறைகளை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும், இணையவழி வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்ற போது, அவற்றுக்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் வளவாளர்களினால்  நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் போது வளவாலராக அம்பாரை மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்  எம்.பி.எம் சுபியான், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெ.யோகராஜ் , விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ரிப்தி அலி ஆகியோர் கலந்து  கொண்டனர்.
--



அதுதான் இலக்கு என்கிறார் அச்செயலியின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா. இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரின் 2.5 கோடி எனும் வலுவான பயனர் தளத்தை விஞ்சும் என்று 'கூ' செயலி எதிர்பார்க்கிறது என்று அவர் கூறுகிறார்.


இது 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 2 கோடி பதிவிறக்கங்களைத் தொட்டுள்ளது.


"நாங்கள் இப்போது ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் செயல்படுகிறோம். இந்த ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வமான 22 மொழிகளும் செயல்பட விரும்புகிறோம்," என்று பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து அவர் பிபிசியிடம் கூறுகிறார்.


இந்திய அரசுக்கும் அமெரிக்காவின் மைக்ரோ பிளாக்கிங் (micro-blogging) தளமான ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், ட்விட்டருக்கு மாறாக 'கூ' செயலி, கடந்த ஆண்டு கவனத்தை ஈர்த்தது.


இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி?

யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?

அரசுக்கு எதிரான கலகத்தைத் தூண்டும் கணக்குகள் என்று இந்திய அரசு கூறும் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் பிரதமர் நரேந்திர மோதியின் அரசு வலியுறுத்தியது. இதற்கு தொடக்கத்தில், ட்விட்டர் இணங்கி பின்னர் "போதுமான ஆதாரம் இல்லை" என்று கூறி, அக்கணக்குகளை மீட்டெடுத்தது.


இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அச்சுறுத்தியதால், இந்த பிரச்னை தொடர்ந்தது.


பேச்சு சுதந்திரம் மற்றும் தனியுரிமை பற்றிய கவலைகளைத் தூண்டிய புதிய டிஜிட்டல் விதிமுறைகள் தொடர்பான சர்ச்சைக்கு கூடுதலாக இந்த விவகாரம் இருந்தது. விதிகள் தனியுரிமை பாதுகாப்பை மீறுவதற்கு விதிமுறைகள் கட்டாயப்படுத்தும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அரசு மீது வழக்கு தொடர்ந்தது.


ட்விட்டரின் விதிமீறல் மற்றும் டிஜிட்டல் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால், எரிச்சலடைந்த மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே இரவில் கூ செயலிக்கு மாறிவிட்டனர். ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் பின்தொடர்பவர்களைக் கொண்ட நரேந்திர மோதி ட்விட்டரில் நீடிக்கிறார்.


இந்தியாவில் ஆங்கிலம் மொழி பேசுபவர்கள் அல்லாத பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'கூ' செயலி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இது 2021ஆம் ஆண்டில் நைஜீரியாவில் ட்விட்டரை தடை செய்தபோது, அங்கும் விரிவடைந்தது. இப்போது 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் பயனர்களை அடைய விரும்புகிறது.


அபர்மேயா ராதாகிருஷ்ணா என்ற 'ஏஞ்சல்' முதலீட்டாளர் (ஸ்டார்ட்-அப் நிறுவங்களில் பங்கு வாங்கிக்கொண்டு முதலீடு செய்பவர்) மற்றும் தொழில்முனைவோருடன் இணைந்து பிடாவட்கா, கூ செயலியை நிறுவினார்.


அபர்மேயாவின் சவாரி-பகிர்வு வணிகமான TaxiForSure ஐ 2015ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான ஓலா (Ola) $200 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இருவரும் இணைந்து, இந்தியா மொழிகளில் அறிவுப் பகிர்வு தளமான Vokal என்ற செயலியையும் நடத்தி வருகின்றனர்.


கடந்த ஆண்டு முதல், கிரிக்கெட் வீரர்களையும் பாலிவுட் நட்சத்திரங்களையும் கூ செயலி ஈர்த்துள்ளது. மேலும் தற்போது 5,000 ஆக இருக்கும் "சிறப்பு கணக்குகளின்" எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதியில் மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கிறது.


ஆனால், இந்த செயலி அரசு பிரசாரத்தை அதிகப்படுத்துவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கூர்மையாக ஒருமுனையாக்கப்பட்ட இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றொரு போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் இந்து தேசியவாத பா.ஜ.கவின் ஆதரவாளர்கள் மோதியை விமர்சிப்பவர்களாகவோ அல்லது எதிர்ப்பவர்களாகவோ பார்க்கப்படுபவர்களை இடைவிடாமல் ட்ரோல் செய்வதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.


koo

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதிக்கு ட்விட்டரில் ஏராளமான பின்தொடர்ப்பாளர்கள் உள்ளனர்.


'கூ' செயலியின் வழிகாட்டுதல்கள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பாரபட்சமான அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடைசெய்கின்றன. ஆனால், ஒவ்வொரு நொடியும் "கூஸ்" (அதாவது, டீவிட் என்பதற்கு இணையான அச்செயலியின் சொல்) உருவாக்கப்படுவதால், ட்விட்டர் உட்பட மற்ற சமூக ஊடகங்களில் உள்ளதைப் போலவே, சரிபாக்கும் வேலை மிகவும் கடினமாக உள்ளது.


இதனை மனிதர்கள் சரிபார்ப்பதை காட்டிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றும், கலகம் வாய்ந்ததாகக் கருதும் தகவல்களைக் பயனர் சமூகம் சுட்டிக்காட்டதன் மூலம் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றும் பிடாவட்கா கூறுகிறார்.


'கூ' செயலியில் "பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும்" இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், அது வலதுசாரியின் சார்ப்பாகவும், தாராளமயத்திற்கு எதிர்ப்பு குரல்களின் எதிரொலியாக இருக்கிறது என்பதை அவர் ஏற்கவில்லை.


பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர்கள் உட்பட 19 பிற கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்களை இந்த செயலி உள்ளனர் என்று அவர் மேலும் கூறுகிறார்.


இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? சாதாரண பாஸ்போர்ட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பட்ஜெட் 2022: நிதியமைச்சர் அறிவித்த டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் சாத்தியமா?

"எப்போதும் சில தொடக்ககால துணை ஏற்பாடுகள் (adoptors) இருக்கும். ஆனால், நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள், தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பது உங்கள் முழுப் பயணத்தையும் வரையறுக்கக் கூடாது", என்று பிடாவட்கா கூறுகிறார். "தொழில்முனைவோராக, மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றை உருவாக்க எங்களுக்கு எந்த காரணமும் இல்லை." என்கிறார்.


ஆனால், ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' செயலியை உள்நாட்டு, 'தேசியவாதி' என்று விளம்பரப்படுத்துவதற்கு, மோதியின் அரசுக்கு ஒரு தெளிவான காரணம் உள்ளது என்று டிஜிட்டல் உரிமை ஆர்வலரான நிகில் பஹ்வா கூறுகிறார். என் ட்விட்டரை தடை செய்ய வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் ஏற்பட்டால், அந்த செயலி அதற்கு மாற்றாக இருக்கும்.


சைபர்ஸ்பேஸை அரசு கட்டுப்படுத்தும் சீனாவின் "ஸ்ப்ளின்டர்நெட்" (splinternet) போலவே, இந்தியா பல ஆண்டுகளாக, அதிக டிஜிட்டல் தலைமையுரிமையையும், இணையத்தின் கட்டுப்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று பஹ்வா கூறுகிறார்.


இந்த பரவலான டிரண்ட்கள் "இந்தியருக்குச் சொந்தமான இயங்குதளங்களுக்கு (கூ செயலி போன்றவை) மேலும் பின்னடைவை வழங்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.


தரவு மற்றும் பாதுகாப்பைச் சுற்றியுள்ள கொள்கைகளால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய பெரிய தொழில்நுட்பம் "இந்தியாவில் வளர கடினமாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


பயனர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கும் அதே வேளையில், உள்ளடக்கத்தை எவ்வாறு சிறந்த முறையில் கட்டுப்படுத்துவது என்ற சிக்கலைத் தீர்க்க முடிந்தால், கூ செயலிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். இதற்கு ட்விட்டர் நீண்டகாலமாகப் போராடி வருகிறது.


Koo

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சுமார் 25 மில்லியன் இந்தியர்கள் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர்.


ஆனால், இந்த செயலி பல்வேறு அரசியல் பார்வைகளைக் கொண்ட பயனர்களை ஈர்க்க இன்னும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்போதைக்கு, தாராளமயம் அல்லது சட்டத்திற்கு எதிரான குரல்கள் ட்விட்டரை விட்டு வெளியேறவோ அல்லது இரு தளங்களிலும் கணக்கு வைத்திருக்கவோ விரும்பாமல் இருக்கலாம்.


பதிவு செய்வதற்கு அலைபேசி எண் மூலம் அங்கீகாரத்திற்கான பயன்பாட்டின் தேவையும் ஒரு சவாலாக இருக்கும் என்று பஹ்வா கூறுகிறார். ஏனெனில் இது உள்ளடக்கத்தை சிறப்பாக நிர்வகிக்க கூ செயலிஅனுமதிக்கும் அதே வேளையில், ட்விட்டர் அதன் பயனர்களுக்கு வழங்கும் "பெயர் அல்லது சுயவிவரம் மறைக்கும் வசதியை நீக்குகிறது"., என்று அவர் கூறுகிறார்.


இருப்பினும், ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுபவர்களுக்கு ஒரு தயாரிப்பை உருவாக்குவதில் கூ செயலியின் தனித்துவமான கவனம் அதை ஒரு கட்டாய தயாரிப்பாக ஆக்குகிறது.


கடந்த சில மாதங்களாக, ஒரே நேரத்தில் பல மொழிகளிலும், ஒரே திரையிலும் 'கூ' பயன்படுத்த செய்யும் வசதியை மக்களுக்கு வழங்குவது போன்ற பல சோதனைகளை இந்த நிறுவனம் செய்துள்ளது.


பொதுவாக சமூக ஊடகங்களில் தங்கள் ரசிகர்களுடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் பாலிவுட் நடிகர்கள், பல மொழிகளில் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிடாவட்கா கூறுகிறார்.


தற்போது இந்தியாவில் 'ஷேர்சாட்'டுடன் கூ செயலி போட்டியிடுகிறது. அதன் பயனர் தளத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனம் மிகப் பெரிய போட்டியாளர். இது இந்திய மொழிகளில் விரிவடையும் போது, அதன் பயனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.


நைஜீரியாவில் அதன் தளத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பிடவட்கா, ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தாத வெளிநாடுகளுக்கு செயலியை விரிவாக்க செய்ய திட்டமிட்டுள்ளார்.


"பெரிய மக்கள்தொகை மற்றும் தற்போதுள்ள சமூக ஊடக தளங்களில் ஊடுருவல் குறைவாக இருப்பதால் தென்கிழக்கு ஆசியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. அது நிச்சயமாக எங்கள் பட்டியலில் உள்ளது" என்று பிடவட்கா கூறுகிறார்.


"உலகில் 20% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகின்றனர். உலகில் 80% பேர் ஆங்கிலம் பேச மாட்டார்கள். அந்த முழு சந்தையும் எங்களுக்கு திறந்திருக்கும்." என்கிறார்.


 மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) தனது பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெஸ்சேன்ஜ்ர் (Messenger) மெசேஜ்ஜிங் தளத்தில் ஒரு முக்கிய புதிய அம்சத்தை அறிவித்திருக்கிறார்.


இந்த புதிய அம்சம் மெஸ்சேன்ஜ்ர் மேடையில் உள்ள பயனர்களின் தனியுரிமையைக் கணிசமாக மேம்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.


இனி மெஸ்சேன்ஜ்ர் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் இரகசிய உரையாடலில் யாரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், உடனே அது அந்த பயனருக்குத் தெரிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


டிஸப்பியரிங் மெசேஜ் இன்னும் அதிக பாதுகாப்புடன் பலப்படுகிறதா?

அதாவது, நீங்கள் மெஸ்சேன்ஜ்ர் மூலம் மேற்கொள்ளும் இரகசிய உரையாடலில், டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, எதிர் முனையில் உள்ள பயனர் உங்களின் டிஸப்பியரிங் மெசேஜ்களை பதிவு செய்வதற்காக ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இனி அந்த பயனருக்கு ஸ்கிரீன்ஷாட் தொடர்பான அறிவிப்பு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதன் மூலம் இனி மெஸ்சேன்ஜ்ர் பயனர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஜனவரி 27, 2022 அன்று மார்க் ஜுக்கர்பெர்க் எழுதியது, “எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசஞ்சர் அரட்டைகளுக்கான புதிய புதுப்பிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இனி யாராவது மறைந்திருக்கும் செய்தியை ஸ்கிரீன்ஷாட் செய்தால் உடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் அறிவிப்பை மெஸ்சேன்ஜ்ர் அனுப்பும். ” என்று அவர் கூறியுள்ளார்.


பேஸ்புக் முதன்முதலில் நவம்பர் 2020 இல் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் காணாமல் போகும் செய்திகளை அறிமுகப்படுத்தியது. அதாவது, டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது.

 


இந்தியாவின் ஹிந்தித் திரைப்படத் துறையான பாலிவுட், வெற்றி- தோல்வி, மகிழ்ச்சி-துக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, அலட்சியம் என்ற அனைத்தையும் பார்த்துள்ளது. அதற்குப் பழக்கமில்லாத சில விஷயங்களும் உள்ளன.


அவற்றில் ஒன்று, ஆன்லைனில் லட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ள சில செல்வாக்கு மிக்கவர்கள் பரப்பும் அவதூறுகள், பொய்கள் கலந்த விஷமப் பிரச்சாரமாகும்.


மேலும் இவர்கள் இத்தகைய பொய்களைப் பரப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.


இதைப் புரிந்து கொள்ள, கூகுளுக்குச் சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூ-ட்யூபைப் பார்க்கலாம். தவறான தகவல்களைப் பரப்பும் தளங்களுக்குத் தாயகமாக இது விளங்குகிறது. இது குறித்து யூ-ட்யூபின் எதிர்வினை உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கலாம்.


இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்களை வாரக்கணக்கில் பார்த்துவிட்டு, பிபிசியின் தவறான தகவல் தடுப்புப் பிரிவு இந்த நெட்வொர்க்கைக் கண்டுபிடித்துள்ளது.


ஹிந்தித் திரையுலகிற்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பும் இந்த செல்வாக்கு மிக்கவர்களில் பலர் வலதுசாரி ஆதரவாளர்கள் என்பதையும் பிபிசி உணர்ந்தது. பிஜேபி உறுப்பினர்களுடன் அவர்கள் உரையாடும் வீடியோக்களை நாங்கள் கண்டோம் - உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான மெய்ந்நிகர்ச் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஒருவரும் இதில் அடக்கம்.


இதன் தாக்கத்தை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டனர்.


'ஒரு பொய்யான வீடியோ'

சந்தீப் வர்மா என்ற ஒரு நபரை எடுத்துக் கொள்வோம்.


இந்தச் செல்வாக்கு மிக்கவர்களில் நாங்கள் அடையாளம் கண்ட வர்மா, தன்னை ஒரு பத்திரிக்கையாளர் என்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொள்கிறார்.


அவரது சேனலில் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) திரைப்படத் துறையைப் பற்றிய பல வீடியோக்களைப் பார்த்தோம். அவற்றில் ஒன்றில் அவர் இந்தப் பெண்ணை எய்ம்சில் பணி புரியும் கூக்குரல் எழுப்புநர் ('விசில் ப்ளோயர்') என்று குறிப்பிட்டுள்ளார் (உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்). பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணையில், முறைகேடுகள் இருப்பதைப் பார்த்ததாக இந்தப் பெண் கூறுகிறார். எய்ம்சில் சீர்கேடு என்பதற்கு 'மிகப்பெரிய ஆதாரம்' என்று வீடியோவின் தலைப்பு இருந்தது.


இது குறித்து விவரமறிய, பிபிசி எய்ம்சை அணுகியபோது, அந்தப் பெண், சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்ததேயில்லை என்று எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். அவர், இந்த வீடியோவை 'போலி வீடியோ' என்று குறிப்பிடுகிறார்.


பிபிசிக்கு அளித்த பேட்டியில், வர்மா, 'விசில்ப்ளோயரின்' உண்மைத் தன்மையை நிரூபிக்கத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவர் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எதிர்க் கேள்வி கேட்கப்பட்ட போது, பின்வாங்கிய வர்மா, எங்களுக்கு எதிராக 'மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மிரட்டினார்.


சந்தீப் வர்மா

படக்குறிப்பு,

சந்தீப் வர்மா


நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை 'தேச விரோதிகள்' மற்றும் 'இந்து விரோதிகள்' என்று தவறாக முத்திரை குத்தும் வீடியோக்களை நாங்கள் கண்டோம். போதைப்பொருள் வர்த்தகம், விபச்சாரம், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் உறுப்புத் திருட்டு போன்றவற்றில் நடிகர்கள் ஈடுபடுவதாக அவை எந்த ஆதாரமுமின்றி, அவதூறாகப் பேசுகின்றன.


இவற்றுடன் நில்லாமல், பார்வையாளர்களிடமிருந்து நிதியுதவி கோருபவையாகவும் அவை உள்ளன. இதற்கான வங்கிக் கணக்கு குறித்த தகவலும் உடன் பரப்பப்படுகின்றன.


"தயவுசெய்து (யூடியூப்) விளம்பரங்களைத் தவிர்க்காதீர்கள். நீங்கள் அவற்றைத் தவிர்க்காமல் பார்த்தால், எங்களுக்கு அந்த நிதியில் ஒரு பங்கு கிடைக்கும், அது எங்கள் பணி தொடர உதவும்" என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


பல வீடியோக்களில், பார்வையாளர்கள் இவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


'எங்கள் பிழைப்பு என்னாகும்?'

பாலிவுட் திரையுலகின் களமான மும்பையில் நடிகை ஸ்வரா பாஸ்கரை நாங்கள் சந்தித்தோம். இத்தகைய அவதூறுகளை அதிகம் எதிர்கொள்பவர்களின் இவரும் ஒருவர். இவற்றின் தாக்கம் குறித்து அவரிடம் கேட்டோம்.


ஸ்வரா பாஸ்கர்

படக்குறிப்பு,

ஸ்வரா பாஸ்கர்


தனது தொழிலை இது நேரடியாகப் பாதிப்பதாகக் கூறும் இவர், "என் செயல்களை விட, என்னைப் பற்றிய தவறான தகவல்களைத்தான் மக்கள் அதிகம் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வராவை அழைத்தால் சர்ச்சை வெடிக்கும் என்று என்னை விளம்பரங்களுக்கு அழைப்பதில்லை," என்று கூறுகிறார்.


தனிப்பட்ட கலைஞர்களைத் தாண்டி, திரைப்படத் துறையை இது பாதிக்கிறதா என்றும் அவரிடம் கேட்டோம். அதற்கு ஆம் என்று ஒப்புக்கொண்ட அவர், ஒரு அச்சம் உருவாகி வருவதாகக் கூறுகிறார்.


"2011, 2012, 2013 போல் பெட்ரோல் விலையுயர்வு குறித்து அண்மைக்காலங்களில் நடிகர்கள் ஏன் கருத்து தெரிவிப்பதில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். தாங்கள் தாக்கப்படும் போது கூட அவர்கள் எதுவும் சொல்வதில்லை என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம் அச்சம் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்குப் பின்னால் திட்டமிட்ட தாக்குதல் உத்தி உள்ளது. பாலிவுட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சி இது" என்று அவர் விளக்குகிறார்.


ஆனால், பாலிவுட் என்பது நடிகர்கள் மட்டுமல்ல. நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் உருவாக்கும் ஒரு துறை இது.


தற்போது பிபிசி அம்பலப்படுத்தியுள்ள வீடியோ அவதூறுகள் போன்றவை அவர்களையும் பாதிக்கின்றன. இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IMPPA) செயலாளர் அனில் நாக்ரத், "சிலர் இந்தத் தொழில் குறித்து பரப்பிய அவதூறுகள் தயாரிப்பாளர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர். நாங்கள் எப்படிப் பிழைப்போம்?" என்கிறார் அவர்.


வதந்திகள், சரிபார்க்கப்படாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று கூறும் முன்னாள் பத்திரிகையாளர் ஸ்ரீமி வர்மா பத்மாவத் திரைப்படத்தை உதாரணமாகக் கூறுகிறார்.


ஸ்ரீமி வர்மா

படக்குறிப்பு,

ஸ்ரீமி வர்மா


"பத்மாவத் படம் வெளியாகும் சமயத்தில், இளவரசியாக நடித்த தீபிகா படுகோனுக்கும் படையெடுத்த அரசராக நடித்த ரண்வீர் சிங்குக்கும் இடையில் முத்தக் காட்சி இருக்கலாம் என்று பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையில், சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு, இயக்குநரைத் தாக்கி, நடிகையின் மூக்கை அறுப்பதாகவும் அச்சுறுத்தினர்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.


"நான் எச்சரிக்கவில்லை, ஆனால் அஞ்சுகிறேன். இன்று ஒரு ஷோ வெளியாகும் முன்பே இதில் எது யாரைப் புண்படுத்தும், சிக்கல் ஏதும் வருமா? எப்படித் தீர்வு காண்பது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இது சரியில்லை" என்கிறார் அவர்.


இதை எப்படிச் சரி செய்வது?

"சிலர், தாங்கள் குறிப்பிட்ட திரைப்படங்களைத் தயாரிப்பதாலும் குறிப்பிட்ட சிலரைத் திருப்தி செய்வதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் வரலாறு என்று அவர்கள் அறிய வேண்டும். பாலிவுட் ஒன்று பட்டால்தான் பாதுகாப்பு. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். சட்டமியற்றுபவர்களிடம் பேசி, சட்டங்களைத் திருத்த வேண்டும். இது பேச்சு சுதந்திரத்தைத் தடுப்பதாகாது. பொய்ச் செய்தியைத் தடுப்பது" என்று அவர் கூறினார்.


'நாங்கள் அஞ்சவில்லை'

எங்கள் விசாரணையின் போது, உத்தரபிரதேச அரசு பதிவேற்றிய 'சமூக ஊடக உரையாடல்' என்ற வீடியோவை நாங்கள் பார்த்தோம். செப்டம்பர் 9, 2021 தேதியிட்ட இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மெய்ந்நிகர் தளத்தில் 'தனது அரசாங்கத்தின் கருத்தை வலுவாக முன்வைத்த முக்கியமான செல்வாக்கு மிக்கவர்களின் குழு'-வுடன் உரையாற்றுகிறார்.


அவர்களைப் பாராட்டும் அவர், "அரசாங்கத்தால் நேரடியாகச் சொல்ல முடியாத பல விஷயங்களை நீங்கள் சொல்கிறீர்கள்" என்றார்.


'எல்விஷ் யாதவ்' என்ற 'யூ-ட்யூபர்' ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கக்கூட அழைக்கப்பட்டார்.


பாலிவுட் நடிகர்கள் மீது பலமுறை அவதூறு பரப்பும் இதே நபரின் வீடியோவை நாங்கள் கண்டோம். இதில் பாலியல் ரீதியான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான யூடியூப் கொள்கையை மீறும் இந்த வீடியோ இன்னும் யூ-ட்யூப் தளத்தில் உள்ளது.


பிபிசி இந்த நபருக்குப் பல முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை.


பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் இதுபோன்ற வீடியோக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்த்தோம். இத்தகைய வீடியோக்கள் அரசியல் இயல்புடையவை என்றாலும், தங்களுக்கு பாஜக-வுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவர்கள் கூறினாலும், கட்சித் தலைவர்களுடன் தொடர்புடையவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.


மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்வேதா ஷாலினியும் வர்மாவின் யூடியூப் சேனலில் இரண்டு முறை தோன்றினார். பிபிசி அவரை அணுகியபோது, "இந்தச் செல்வாக்குள்ள நபருக்கும் எனது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இந்த நிகழ்ச்சியைத் தனிப்பட்ட ஒன்றாகவும் ஒரு இளைஞர் தலைவராக இளைஞர்களுடனான ஒரு பரிமாற்றமாகவுமே பார்க்கிறேன்" என்று கூறினார்.


'ஜெய்பீம்' ஆஸ்கர் தளத்தில் இடம்பெற காரணம் இதுதான் - இயக்குநர் ஞானவேல்

பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்

தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் பூனாவாலா பதிலளிக்கவில்லை.


பல செல்வாக்கு மிகுந்த யூ-ட்யூபர்களைத் தொடர்பு கொண்டதில் ஒரு சிலரே பதிலளித்தனர்.


பலவார முயற்சிக்குப் பிறகு தில்லியில் சந்திக்க வர்மா ஒப்புக்கொண்டார். "நான் என் இருப்பிடத்தை வெளியிடுவதில்லை. என் போன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. ஒரு விடுதி அறையில் சந்திக்கலாம்' என்று வாட்ஸ் ஆப்பில் கூறினார்.


பணத்துக்காகப் பரபரப்பான, அடிப்படையில்லாத விவகாரங்களை வெளியிடுகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்த அவர், "எனக்கு பாலிவுட் மீது வெறுப்பு இல்லை. அதைச் சுத்தப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.


சந்தீப் போகட் என்பவர் சாதாரண மக்களின் குரல் என்று தன்னைக் கூறிக்கொண்டு ஒரு யூட்யூப் சேனல் நடத்துகிறார்.


பாலிவுட் குறித்த அவரது தனிப்பட்ட பார்வையின் அடிப்படையில் அவர் தனது வீடியோக்களை அமைக்கிறாரா என்று கேட்டோம்.


ஒரு வீடியோ அழைப்பில் இதற்குப் பதிலளித்த அவர், "எனது அலுவலகத்தில், தீபாவளி கொண்டாடும்போது பாலிவுட் ஐட்டம் பாடல்கள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து இரண்டு வருடங்களாக நான் பங்கேற்கவில்லை. பங்கேற்கும் சிலரிடம் நான் பேசியதில் அவர்களும் இப்போது பங்கேற்பதில்லை" என்றார்.


அவரது வீடியோக்களில் சில ஆதாரமற்ற கூற்றுகள் இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "2 மணிநேர வீடியோக்களை எடுக்கும்போது சில விஷயங்கள் தவறவிடப்படலாம்" என்றார்.


இவர்களது சேனல்கள் முடக்கப்படுவது குறித்து அச்சம் இருக்கிறதா என்று இவர்களிடம் கேட்டபோது, இருவருமே இல்லை என்று மறுத்தனர்.


"என் சேனல் முடக்கப்பட்டால், இது போல பத்து சேனல்களைத் தொடங்கி இது பற்றி மீண்டும் மீண்டும் பேசுவேன்" என்கிறார் போகட்.


இவர்களிருவரும் பரஸ்பரம் அடுத்தவர் சேனல்களிலும் பங்கேற்கிறார்கள். நிபுணர்களையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.


யூ-ட்யூபின் பங்களிப்பு

இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி பயனர்களுடன் (உலகளவில் 2 பில்லியன்), யூடியூப் தனித்துவமான ஒரு தளமாக விளங்குகிறது. யூடியூப்பின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் உள்ளது.


பெருமளவு மக்களைச் சென்று அடைவதுதான் வருவாய்க்கும் வழிவகுக்கும்.


விளம்பர வருவாய், பணம் செலுத்தும் உறுப்பினர்கள், உரையாடல் தளம் மற்றும் நிதியுதவி கோரல் மூலமாக யூ-யூபர்களுக்கு வருவாய் பெருக இத்தளம் வகை செய்கிறது.


தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் ஓடிடி தளங்கள் - யாருக்கு லாபம்?

பெரிய திரைப்படங்கள் வெளியாகாத பொங்கல்: திரையரங்குகளின் நிலை என்ன?

கேடு விளைவிக்கும் தவறான தகவல் மூலமாகத் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதும் இதில் ஒன்று.


இந்தச் செல்வாக்கு மிக்க யூ-ட்யூபர்களுக்கு 'சரிபார்க்கப்பட்ட சேனல்' என்ற ஒரு பேட்ஜ் வழங்கி இவர்களது நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது யூடியூப்.


பரபரப்பான தலைப்புச் செய்திகள், தவறான கருத்தை வெளியிடும் காட்சிப் படங்கள், பாலிவுட், அதன் நடிகர்கள் குறித்த தவறான தகவல்கள், அவதூறுகள் - இவை அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து யூ-ட்யூபுக்கும் வர்த்தகத்தைப் பெருக்குகின்றன.


நாங்கள் கண்டறிந்தவற்றை நாங்கள் யூ-ட்யூப் நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டோம்.


அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "யூ-ட்யூப் சமூகத்தைப் பாதுகாக்க, பெரும் முதலீட்டில் கொள்கைகள், வளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம். தகவல்கள் அதிகாரபூர்வமாகவும் தலைப்புகள் வெளிப்படையாகவும் இருப்பதை உறுதி செய்ய எங்கள் அல்காரிதம்களை மாற்றியமைத்துள்ளோம். தவறான தகவல்களைக் கண்காணிக்கும் சிறப்பான குழுக்களை அமைத்துள்ளோம்." என்றார்.


கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனத்திடம், தவறான தகவல்களைப் பரப்பும் செல்வாக்குள்ள யூ-ட்யூபர்களின் கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டு வருவாய் ஈட்ட அனுமதிக்கப்படுவது ஏன் என்று கேட்டோம்.


இந்தக் கேள்விகளுக்கு யூ-ட்யூப் பதிலளிக்கவில்லை.


"யூ-ட்யூப் தங்கள் கொள்கைகளுக்கு விரோதமான வீடியோக்களையும் பரிந்துரைத்துப் பரப்புவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்," என்கிறது மோசில்லா அறக்கட்டளையின் ரிக்ரெட்ஸ் ரிப்போர்டர் நிகழ்ச்சி. இது மக்களிடம் பணம் திரட்டி நடத்தப்படும் புலனாய்வு நிகழ்ச்சி என்கிறது மோசில்லா.


இந்தியா போன்ற ஆங்கிலம் அல்லாத மொழிச் சந்தைகளில் இதுபோன்ற பிரச்சினை இன்னும் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக மோசில்லா புலனாய்வுச் செய்தியின் இணை ஆசிரியரான பிராண்டி க்யெர்கிங்க் கூறினார்.


"ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொள்ளாத நாடுகளில், ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்ட நாடுகளில் இருந்ததைவிட, வருத்தக் குறிப்பு 60 சதவீதம் அதிகமாக உள்ளது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.


அப்படியானால், யூ-ட்யூப் போன்ற ஒரு தளத்தில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது எப்படி?


"கூகிள் யூ-ட்யூபில் உங்கள் தரவு அமைப்புகளைப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, யூ-ட்யூபில் உங்கள் வாட்ச் ஹிஸ்டரி மற்றும் சர்ச் ஹிஸ்டரி நீங்கள் பாதிக்காத விஷயங்களைத் தேர்வு செய்து கொள்ள வழி செய்கிறது. 'இந்த சேனலை பரிந்துரைக்க வேண்டாம்', 'இந்த வீடியோவில் எனக்கு ஆர்வம் இல்லை' போன்ற ரிப்போர்ட்களை அளிக்கலாம்.


பிரைவேட் பிரவுசிங் விண்டோக்கள் நீங்கள் அவசியமாக உள் நுழைந்திருக்கவில்லை என்பதை உறுதிசெய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். அதனால் நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்கள் சுயவிவரத்தில் சேர்க்கப்படாது, மேலும் இது எதிர்காலத்தில் நீங்கள் YouTube இல் செய்யப்போகும் அனைத்து விஷயங்களையும் பாதிக்காது" என்றார் அவர்.


அடுத்து என்ன?


யூடியூப் உட்பட ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுத்து வரும் ஒரு கால கட்டத்தில், பிபிசி விசாரணையின் வெளிப்பாடுகள் வந்துள்ளது ஒரு தற்செயலான நிகழ்வு.


Bollywood 5

பட மூலாதாரம்,BBC

இந்தியாவின் 'தகவல் சூழலை' பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், 'இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும்' கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மேற்கோள் காட்டி, கடந்த இரண்டு மாதங்களில், இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) கிட்டத்தட்ட 55 யூடியூப் சேனல்கள் மற்றும் பிற தளங்களில் உள்ள கணக்குகளை முடக்கியுள்ளது.


ஜனவரி 21 அன்று, எம்ஐபியின் செயலர் அபூர்வ சந்திரா, குடிமக்கள் மற்றும் ஊடகங்களை 'விஷமத் தனமான சேனல்கள் குறித்த தகவல்களை எங்களிடம் தெரிவியுங்கள்' என்று கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மேலும், "யூ-ட்யூப் போன்ற நிறுவனங்கள், இவை விஷமத் தனமான தகவல், போலியான செய்திகள் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மேலும் தங்கள் அமைப்புகளுக்குள்ளும் இவை எந்த ஊடக அறத்துக்கும் பொருந்தவில்லை என்று அடையாளப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.


பிபிசி தனது விசாரணையைப் பற்றி MIB மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) க்கு தெரிவித்து பதிலைக் கோரியுள்ளது. ஆனால், பலமுறை நினைவூட்டியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

 


அம்மாவும், "நல்ல யோசனையாக உள்ளது. தாராளமாகச் செய், இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் பார்ப்பார்கள்," என்று ஊக்கமளித்தார். அந்த ஊக்கத்தை உறுதுணையாகக் கொண்டு தமிழ் டெக் யூடியூப் சேனலைத் தொடங்கினார் தமிழ்செல்வன்.


பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் கிடையாது

"தமிழில் இந்த யூடியூப் சேனலைத் தொடங்கும்போது என்னுடைய நோக்கம் ஒன்று மட்டும்தான். 10 பேர், 100 பேர் என்று பார்த்தாலும்கூடப் போதும். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகம் எழுபவர்களுக்கு, இதெல்லாம் தேவைப்படுபவர்களுக்கு இந்தத் தகவல்கள் கிடைக்கவேண்டும்.


ஆனால், தேவையான தகவலைச் சரியாகக் கொடுக்கும்போது மக்கள் எந்தளவுக்கு வரவேற்பார்கள், என்பதை தமிழ் டெக்கிற்குக் கிடைத்த வீச்சு உணர வைத்தது."


இப்படியாக ஆங்கிலம், தமிழ் என்று தொடங்கியவர், ஆரம்பக்கட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், என்று ஒவ்வொரு சாதனத்தையும் புதிதாக வாங்க முடியாது. அதற்கான நிதி அவரிடம் கிடையாது. ஆகவே, நண்பர்களுக்கு அவர் இணைய வர்த்தகத்தில் வாங்கித் தரும் பொருட்களை 2 அல்லது 3 நாட்களுக்கு வைத்து, காணொளி எடுத்துவிட்டுக் கொடுப்பார்.


"பல நண்பர்கள் ஆரம்பக்காலத்தில் உதவினார்கள். அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் என் நண்பருக்கு நான் கிருஷ்ணகிரியில் ஆர்டர் போட்டு பொருளை வாங்குவேன். அந்தப் பொருளை வைத்து, மதிப்பாய்வு, அலசல், பயன்பாடு என்று அனைத்து காணொளிகளையும் அதை வைத்து எடுத்துவிட்டு, அவருக்கு அனுப்பி வைப்பேன்.


உள்ளூர் நண்பர்களுக்கு என் முகவரியிலேயே பொருளை வர வைப்பேன். அதில் வரும் புதிதாக வெளியான தொழில்நுட்ப சாதனஙக்ளை, அவர்களின் அனுமதியோடு சில நாட்கள் வைத்து, காணொளியாகப் பதிவு செய்துவிட்டு அவர்களுக்கு அனுப்புவேன். அதுபோக, பெங்களூரு, சென்னை என்று வெளியூர்களில் இருக்கும் சில நண்பர்களிடம், நேராகச் சென்று அவர்களுடைய தொழில்நுட்பச் சாதனங்களை வாங்கி வந்து, வேலையை முடித்துவிட்டுத் திரும்பச் சென்று கொடுப்பேன்," என்கிறார் தமிழ்செல்வன்.


இவ்வளவு தூரம் முயன்று அவர் அப்போது இந்த காணொளிகளைச் செய்தாலும், அதை சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலுமே செய்ததாகச் சொல்கிறார். அதோடு, கருத்துப் பெட்டிகளில் பார்வையாளர்கள் தெரிவிக்கும் சந்தேகங்களுக்கும் அதனாலேயே மதிப்பளித்து, அவற்றை விளக்குவதாகவும் சொல்கிறார்.


அவருடைய முயற்சியின் விளைவாக 8 மாதங்களுக்குப் பிறகு 1,000 சப்ஸ்கிரைபர்கள் தமிழ் டெக் சேனலுக்குக் கிடைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்களில் 5,000 பேர் வந்தார்கள். அதற்கடுத்த சில மாதங்களில் 10,000 பேர், 50,000 பேர், ஒரு லட்சம் பேர் என்று வளர்ந்த தமிழ் டெக் சேனல் இன்று முப்பது லட்சம் சப்ஸ்கிரைபர்களோடு யூடியூபின் முன்னணி டெக் சேனலாக வளர்ந்து நிற்கிறது.


வெற்றிக்காக பணத்தின் பின்னால் ஓடவில்லை

தமிழ் டெக் இதுவரை கடந்து வந்த பாதையில், இருபது லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வரும்வரை தமிழ்செல்வன் தனி ஒருவராக அதை நிர்வகித்து வந்தார். 2020-ம் ஆண்டு முதல் அவருக்குக் கீழே இரண்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.


தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம்,TAMIL TECH

"நான் தொடங்கிய நேரத்தில், தமிழில் வெளியிடும் ஒரு காணொளியை 1000 பேர் பார்த்தாலே வெற்றியடைந்துவிட்டதாக நினைப்பேன். ஏனெனில், அப்போதெல்லாம் 50, 100 என்றே பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும். அன்று எதிர்கொண்ட போராட்டங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், விழுந்த அடிகள் என்று கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.


நேர்மறையாக, பலருக்கும் பயனுள்ள, நன்மைபயக்கூடிய ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறேன் என்று திருப்தியாக இருக்கிறது. தொழில்ரீதியிலான பார்வையோடு சேனலை அணுகவேண்டிய தவிர்க்கமுடியாத சூழலில்தான் இன்று இருக்கிறோம். ஆனாலும்கூட, கொடுக்கக்கூடிய தகவல்களில் அதிகக் கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கம்.


இன்று வரை ரம்மி போன்ற விஷயங்களை விளம்பரப் படுத்துவதைத் தவிர்த்து வருகிறேன். அதை மறுத்ததால் பல வருமானங்களை இழந்துள்ளோம். ஆனால், அதற்காக வருந்தவில்லை. ஏனெனில், தமிழ் டெக் தொடங்கிய காலத்தில் நான் எதிர்கொண்ட தடைகளுக்கு நடுவேகூட தகவல்களை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இருந்தேன். இனியும் அந்தப் பொறுப்பை உணர்ந்து அப்படித்தான் இருப்பேன்.


மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை, அவர்களுக்கு விரும்பிய வகையில், புதுமையாகக் கொடுக்கவேண்டும். பல்வேறு டிரெண்டுகளுக்கு நடுவே அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது ஆரம்பத்தில் கடினம் தான். ஆனால், அதையே புதுமையாகச் செய்யும்போது அவர்களுடைய வரவேற்பைப் பெறலாம்," என்கிறார்.


"என்னுடைய வெற்றிக்காக நான் பணத்தின் பின்னால் ஓடவில்லை. ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய முயலும்போது, அதன்மூலம் நமக்குக் கிடைக்கும் வளர்ச்சி தொடக்கத்தில் குறைவாகவே இருக்கும். ஆனால், மக்களிடம் அது சென்று சேரத் தொடங்கும்போது, நீங்கள் எதிர்பார்க்காத உயரத்தை அடைவீர்கள்."

 


ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய தலைமை நிர்வாகியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜேக் டோர்சி தமது பதவி விலகல் குறித்தும், பராக் அகர்வால் தமது கருத்து குறித்தும் தத்தமது ட்விட்டர் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

2006இல் ட்விட்டரை இணைந்து நிறுவிய டோர்சி, அந்நிறுவனத்திலும் கட்டண நிறுவனமான ஸ்கொயர் என இரண்டிலும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த நிலையில், தமது பதவி விலகலை உறுதிப்படுத்தும் கடிதத்தில் "இறுதியாக நான் வெளியேற வேண்டிய நேரம் இது" என்று அவர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஜேக் டோர்சி தனக்கு மாற்றாக நியமிக்கப்படும் பராக் அகர்வால் மீது தனக்கு "ஆழ்ந்த" நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பராக், ப்ரெட் அணியுடன் சுமூகமாக தலைமை மாற்றல் பணிகள் நடக்க ஏதுவாக அவர்களுடன் இணைந்து வாரியக்குழுவில் பணியாற்றுவேன் என்றும் ஜேக் டோர்சி கூறியிருக்கிறார்.

இதேவேளை பராக் அகர்வால், தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய பொறுப்புக்காக ஜேக் டோர்சிக்கு இதயம் கனிந்த நன்றியதைத் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

பராக் அகர்வால் 2011இல் ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார், 2017ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார்.

    'எனக்கு ட்விட்டர் பிடிக்கும்'

    இதேவேளை ஜேக் டோர்சி பதவி விலகுவதாக காலையில் வதந்திகள் பரவியபோது அந்நிறுவன பங்குகளின் மதிப்பு சந்தையில் உயர்ந்தது.

    இதன் விளைவாக பங்குச் சந்தையில் பங்குகளின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.டோர்சி வெளியேறுவது குறித்த செய்தி முதலில் சிஎன்பிசி ஆங்கில தொலைக்காட்சியில் திங்களன்று தெரிவிக்கப்பட்டது,

    இந்த விஷயத்தை நன்கு அறிந்த அநாமதேய ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டது.

    முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விஷயங்கள் எதையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் "நான் ட்விட்டரை நேசிக்கிறேன்," என்ற ஒற்றை வரி இடுகையை ஜேக் டோர்சி பதிவிட்டிருந்தார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 3

    Twitter பதிவின் முடிவு, 3

    1px transparent line

    கடைசியில் தமது பதவி விலகலை உறுதிப்படுத்தி அதிகாரபூர்வமாக அவரது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "யாரும் இதை கேட்டீர்களா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் நான் ட்விட்டரில் இருந்து விலகி விட்டேன்."

    "ஒரு நிறுவனம் 'நிறுவனர் தலைமையில்' இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நிறைய பேசப்படுகிறது. ஆனால் அது கடுமையாக வரம்புக்குட்பட்டது மற்றும் தோல்வியின் ஒரு புள்ளி என்றே நான் நம்புகிறேன்," என்று அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.

    தனது பதவிக்காலம் முடிவடையும்வரை அவர் வாரியத்தில் தொடருவதாகவும் கூறியுள்ளார்.

    "நிறுவனத்தின் தலைமை பதவியை வகிப்பதற்கான இடத்தை பராகுக்கு கொடுப்பது உண்மையில் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்," என்றும் ஜேக் டோர்சி கூறியுள்ளார்.

    Presentational grey line

    ட்விட்டர் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் குறித்து வட அமெரிக்காவுக்கான பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் விரிவாக அலசுகிறார்.

    ஒரு வகையில், ஜேக் டோர்சி தொழில்நுட்ப உலகின் முகமையாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி போல கருதப்பட்டார்

    அவர் பெரும் பணக்காரர் மற்றும் கோடீஸ்வரர். இரண்டு பெரிய வெற்றிகரமான நிறுவனங்களான ட்விட்டர் மற்றும் ஸ்கொயரை நிறுவியவர்.

    உதாரணமாக, "உலக அமைதியை" உருவாக்கும் திறன் பிட்காயினுக்கு உண்டு என்று அவர் உண்மையாக நம்புகிறார். ட்விட்டர் மூலம், அவர் நிச்சயமாக உலகை மாற்றியுள்ளார்.

    குறிப்பாக அரசியல்வாதிகள் வாக்காளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் - மற்றும் பொதுமக்களுடன் செய்திகள் வடிவில் தொடர்பு கொள்ளும் முறையில் புரட்சியை ஏற்படுத்தியது ட்விட்டர்.

    ட்விட்டரின் சிறந்த முன்னாள் பயனர் டொனால்ட் டிரம்ப் ஆவார். ஜனரஞ்சகமான அதிபராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் பாரம்பரிய வெகுஜன ஊடகங்களைத் தவிர்ப்பதற்கான ட்விட்டரை ஒரு முக்கிய தளமாக தனது பதவிக்காலத்தில் பயன்படுத்தினார்.

    ஆனால், கேப்பிடல் ஹில் கலவரத்திற்குப் பிறகு அவரை ட்விட்டர் தளத்தில் இருந்தே நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமின்றி ஜேக் டோர்சி தலைமை அல்லது பதவிக்காலம் முக்கிய பங்கு வகித்தது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜெஸ் பெசோஸ் விலகினார். அதன் பிறகு அவர் வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆனால், ஜேக் டோர்சி தமது பதவி விலகலை அறிவித்திருந்தாலும், மறைமுகமாக பல பில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்த ட்விட்டர் நிறுவனத்தில், திரைக்குப் பின்னால் அதிகமாக பணியாற்றுவார் என்றே தோன்றுகிறது.

    வயதில் 40-களின் மத்தியில் இருக்கும் ஜேக் டோர்சி, இன்னும் உலகை மாற்றுவதற்கான உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கிறார். அதனால் மீண்டும் அவ்வாறு புதிய முயற்சியில் ஈடுபடக்கூடும் என்கிறார் ஜேம்ஸ் கிளேட்டன்.

    யார் இந்த பராக் அகர்வால்? 5 முக்கிய தகவல்கள்

    பராக் அகர்வால்

    பட மூலாதாரம்,PARAG AGARWAL

    • இந்தியரான பராக் அகர்வால் ஐஐடி-பாம்பேயில் பி.டெக் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். அத்துடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
    • 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். விரைவில் அந்நிறுவனத்தின் 'சிறந்த மென்பொருள் பொறியாளர்' என்ற இடத்தைப் பிடித்தார்.
    • ட்விட்டர் 2018இல் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வாலை நியமித்தது.
    • ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, அவர் AT&T, மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவற்றில் ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.
    • நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், பராக் அகர்வால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார், இந்த பட்டியலில் ஏற்கெனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

     


    டெஸ்லா நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான பங்கில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 35 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார் உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க்.


    டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அவர் தனது 10 சதவீத பங்குகளை விற்க வேண்டுமா என்று தன்னை ட்விட்டரில் பின்தொடரும் 6.3 கோடி பேரிடம் சில நாள்களுக்குமுன் கேட்டார்.


    அந்த வாக்கெடுப்பு முடிவில் அவர் பங்குகளை விற்பதற்கு ஆதரவாக அதிகமானோர் வாக்களித்ததால், இரண்டு நாட்களில் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16 சதவீதம் சரிந்தன.


    டெஸ்லா உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் பங்குச் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம். இந்திய மதிப்பில் 70 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.


    டெஸ்லா நிறுவனத்தில் இருந்து மஸ்க்கின் அறக்கட்டளை சுமார் 36 லட்சம் பங்குகளை விற்றிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 28,000 கோடி இந்திய ரூபாய். இது போக மேற்கொண்டு 9.34 லட்சம் பங்குகளையும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.


    உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் ஈலோன் மஸ்க்

    உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்

    இதைத் தொடர்ந்து சுமார் 22 லட்சம் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார் என பங்குச் சந்தையில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது.


    பங்குகளை விற்பது குறித்து ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, (ஐந்தில் ஒரு பங்கு) சுமார் 20% பங்குகளை செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன.


    இருப்பினும், ஒழுங்குமுறை தாக்கல்கள் படி, மீதமுள்ள பங்குகளின் விற்பனை இன்னும் சந்தையில் திட்டமிடப்படவில்லை என இந்த ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.


    இந்த விற்பனையானது டெஸ்லாவில் உள்ள மஸ்க்கின் மொத்தப் பங்குகளில் சுமார் மூன்று சதவீதமாகும். இருப்பினும் விற்பனையானது அவரது ட்விட்டர் வாக்கெடுப்புடன் தொடர்புடையதா அல்லது அவர் படிப்படியாக விற்பனை செய்ய விரும்புகிறாரா என்பது உறுதியாகவில்லை.


    பின்னணி என்ன?

    Twitter பதிவை கடந்து செல்ல, 1


    Twitter பதிவின் முடிவு, 1

    கடந்த வார இறுதியில் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவீதத்தை விற்க வேண்டுமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கினார் மஸ்க்.


    அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட "பில்லியனர்கள் வரி"க்கு பதில் கூறும் வகையில், ட்விட்டர் வாக்கெடுப்பின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக அவர் உறுதியளித்திருந்தார்.


    ஜனநாயகக் கட்சியினரின் மசோதாவால் அவரது பங்குகளின் மதிப்பு மேலும் உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் அவர் மிகப்பெரிய தொகையை வரியாகக் கட்ட வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.


    இந்த மசோதாவின் படி பணக்காரர்கள் தங்களது பங்குகளின் விலை உயரும்போது, அதை அவர்கள் விற்காவிட்டாலும்கூட அதற்காக அவர்கள் வரி கட்ட வேண்டியிருக்கும்.


    ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த வாக்கெடுப்பில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 58% சதவீதம் பேர் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.


    ஆனால் வாக்கெடுப்பு முடிந்த பிறகு பங்கு விற்பனை குறித்து எதுவும் பேசாமல் இருந்தார். ட்விட்டரிலும் கருத்து தெரிவிக்கவில்லை.


    "நான் எங்கிருந்தும் ரொக்கமாகச் சம்பளம் அல்லது போனஸ் பெறவில்லை. என்னிடம் பங்குகள் மட்டுமே உள்ளன. எனவே நான் தனிப்பட்ட முறையில் வரி செலுத்துவதற்கான ஒரே வழி பங்குகளை விற்பதுதான்" என்று முன்னதாக மற்றொரு ட்வீட்டில் ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.


    இந்த நிலையில் பங்குசந்தை ஆவணங்களில் அவர் பங்குகளை விற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை ஈலோன் மஸ்க் விற்பது இதுவே முதல் முறையாகும்.


    அப்போது அவர் வருமான வரியைக் கட்டுவதற்காக சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார்.


    அதிக விற்பனைக்கு வாய்ப்பிருப்பதாக எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போரை "நிச்சயமாக பயமுறுத்தக்கூடும்" என்றும் டெஸ்லாவின் பங்கு விலையை பாதிக்கலாம் என்றும் தரகு நிறுவனமான சிஎம்சி மார்க்கெட்ஸ் விற்பனை வர்த்தகர் ஓரியானோ லிசா கூறுகிறார்.


    ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "மஸ்க் தனது பங்குகளை ஓரளவிற்குப் பாதுகாக்கவே விரும்புவார். பங்குகளைத் தேடி மக்கள் அவர் வீட்டுக் கதவைத் தேடி ஓடுவதை விரும்பமாட்டார்" என்று கூறினார்.


    தனது பங்குகளில் சிலவற்றை மஸ்க் விற்றதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்தன.


    உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 280 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்.

     


    கலிஃபோர்னியா: ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் இன்க் (Facebook Inc.,) என்ற பெயரை மெட்டா (Meta) என மாற்றியுள்ளது. ஃபேஸ்புக்கின் வருடந்திர கனெக்ட் நிகழ்வு நேற்று நடந்து முடிந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய கனெக்ட் நிகழ்வில் ஃபேஸ்புக் இன்க் என்ற பெயருக்கு மாற்றாக மெட்டா (Meta) என்ற புதிய பெயரை அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்

     


    மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது மைக்ரோசாஃப்ட்.

    சில பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கேள்விகளை எழுப்பிய போது இந்த விவரங்கள் கூறப்பட்டன.

    லிங்க்ட்இன் வலைதளம், இந்த ஆண்டின் பிற்பகுதியில், இன் ஜாப்ஸ் என்கிற பெயரில் வேலை தேடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக தளத்தை தொடங்க உள்ளது.

    இதில் சமூக பதிவுகளை அல்லது கட்டுரைகளைப் பகிரவோ, பதிவிடவோ முடியாது.

    "நாங்கள் சீனாவில் மிகவும் சவாலான இயக்க சூழல் மற்றும் அதிக சட்ட திட்ட இணக்கத் தேவைகளை எதிர்கொள்கிறோம்." என லிங்க்ட் இன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மோஹக் ஷ்ராஃப் தன் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

    "இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் இருக்கும் உள்ளூர்மயமாக்கப்பட்ட லிங்க்ட் இன் பதிப்பை நாங்கள் நிறுத்தப் போகிறோம். நாங்கள் சீனாவில் தொடர்ந்து எங்கள் இருப்பை நிலைநிறுத்துவோம். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய இன் ஜாப்ஸ் சேவையைத் தொடங்க உற்சாகமாக இருக்கிறோம்." என அந்நிறுவனத்தின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    'அரசை திருப்திப்படுத்துவது'

    சீனா

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    சீனா

    சீனாவில் செயல்பட்டு வந்த ஒரே பெரிய மேற்கத்திய சமூக ஊடகமாக இருந்தது மைக்ரோசாஃப்டின் லிங்க்ட் இன்.

    2014ஆம் ஆண்டு சீனாவில் லிங்க்ட் இன் தொடங்கப்பட்ட போது, ​​சீன அரசாங்கத்தின் சட்டங்களை கடைபிடிப்பதாக ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில் அது நாட்டில் எவ்வாறு வணிகத்தை நடத்துகிறது என்பதையும் வெளிப்படையாக வைத்திருக்க உறுதியளித்தது. மேலும் அது அரசாங்கத்தின் கடுமையான தணிக்கைக்கு உடன்படவில்லை என்றும் கூறியது.

    சமீபத்தில், லிங்க்ட் இன் நிறுவனம் மெலிசா சான் மற்றும் கிரெக் ப்ரூனோ உட்பட பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதன் சீன வலைத்தளத்திலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்த்தது.


    திபெத்திய அகதிகளை சீனா நடத்தும் விதத்தைக் குறித்து ஆவணப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதிய ப்ருனோ, சீன கம்யூனிஸ்ட் கட்சி அதை விரும்பாததில் எனக்கு ஆச்சரியமில்லை, ஆனால், "ஓர்அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் வெளிநாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏமாற்றமடைந்தேன்" என 'வெர்டிக்ட்' என்கிற பத்திரிகையிடம் கூறினார்.

    அமெரிக்க செனட்டர் ரிக் ஸ்காட் லிங்க்ட் இன் தலைமை நிர்வாகி ரியான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கை "கம்யூனிஸ்ட் தேசமான சீனாவை திருப்திப்படுத்தும் மற்றும் அவர்களிடம் சரணடையும் செயல்" என குறிப்பிட்டுள்ளார்.

    தடுமாறும் சீனாவின் இணையம்

    ஷயின் ஃபெங், பிபிசி செய்திகள், வாஷிங்டன்

    இணையம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    இணையம்

    லிங்க்ட் இன் நிறுவனத்தின் இந்த முடிவு சீனாவின் அழுத்தத்தினால் எடுக்கப்பட்டதா அல்லது அமெரிக்க தரப்பிலிருந்து வந்ததா என்பதைக் குறிப்பிடுவது கடினம். இந்த இரண்டுமே கூட காரணமாக இருக்கலாம், ஏனெனில் சீன அரசாங்கம் இணையத்தில் அதன் பிடியை இறுக்கி வருகிறது. அதே நேரத்தில் பெய்ஜிங்கின் தணிக்கை விதிகளுக்கு அந்நிறுவனம் அடிபணிந்ததற்காக அமெரிக்காவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

    சீனாவின் மிகப்பெரிய சந்தையில் தன் வியாபாரத்தை நிலை நிறுத்த, லிங்க்ட்இன் 2014 ஆம் ஆண்டில் அதன் சீனப் பதிப்பை அறிமுகப்படுத்தியது.

    ஏழு ஆண்டுகளில் லிங்க்ட் இன் உள்ளூர் போட்டியாளர்களுக்கு எதிராக போராடியது, சில ஒழுங்குமுறை சார் பிரச்சனைகளிலும் சிக்கியது. மார்ச் மாதத்தில், அரசியல் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய தவறியதற்காக, லிங்க்ட் இன் சீன கட்டுப்பாட்டாளர்களால் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அதன் விளைவாக 30 நாட்களுக்கு புதிய பயனர் பதிவு நிறுத்தப்பட்டது. தணிக்கை மீதான சர்ச்சை தவிர, இத்தளத்தை சீன உளவுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு கருவியாகப் பயன்படுத்தின.

    சீனாவின் லிங்க்ட் இன் பயனர்களுக்கு சீனா டுடேவில், அந்நாட்டின் (லிங்க்ட் இன்) தலைவர் லு ஜியான் எழுதிய கடிதத்தில், இந்த தளம் "உலகளாவிய வணிக வாய்ப்புகளை இணைக்கும்" என்று உறுதியளித்தார்.

    ஆனால் சீனாவில் லிங்க்ட் இன் தன் சேவையை நிறுத்துவது எதிர் போக்கைக் காட்டுவதாக இருக்கிறது. சீன நாட்டில் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட இணையம், மேலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து விலகிச் செல்கிறது. சீனாவில் செயல்படும் உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கு இந்த ஆழமான பிளவை குறைக்க அதிகம் சிரமப்பட வேண்டி உள்ளது.

    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.