Showing posts with label Uva. Show all posts

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை அட்டன் பிரதான வீதியில் சலங்கந்தை பகுதியில் 09.09.2017 அன்று இரவு 10 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மற்றும் நாவலப்பிட்டி, கண்டி ஆகிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா சலங்கந்தை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், எனினும் வேன் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதிக மழை காரணமாகவும், பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதன் காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் 02.09.2017 அன்று விடியற்காலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் இத் தொழிற்சாலையில் ஒரு சில பகுதி சேதமாகியுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பொறுத்தப்பட்டுள்ள விரகு அடுப்பின்  புகை வெளியேரும் பகுதியில் ஏற்பட்ட தீ கசிவினால் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியின் பகுதியளவும், ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.

அத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக தேயிலை தூளும், தேயிலை கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளது.

இதனையடுத்து அத் தோட்ட பொதுமக்களினதும், அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரினதும் முயற்சியினால் தீ கட்டுபாபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்புக்குள்ளாக கூடிய தொழிற்சாலையின் பெறுமளவிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக  மேபீல்ட் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வௌ்ளவாய, யௌவனகுமாரபுர பிரதேசத்தைச் சேர்ந்த, குமாரபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ருஷிர கேஷான் எனும் மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம் மாலை வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்ய முற்பட்ட போது மாணவரின் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார். 

வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்த போது, அது பிள்ளையின் கையிலே தவறுதலாக வெடித்ததன் காரணமாக பிள்ளையின் கை காயமடைந்தது என்று பிள்ளையின் தந்தை கூறினார். 

(க.கிஷாந்தன்)

அட்டன் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கழிவுகள் பிரச்சினைகளை தீர்வு காணுவது தொடர்பாக இதனுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள் அட்டன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த விஜயத்தின் போது பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், கட்டிட நிர்மாண திணைக்களத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்த மேற்பார்வை நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கென பல இடங்களை மேற்குறிப்பிட்ட அதிகாரிகளால் பார்வையிட்ட போதிலும் ஒரேயொரு இடம் மாத்திரமே அதிகாரிகளால் இணங்காணப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அட்டன் லா எடம்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் சகல உள்ளுராட்சி நிலையங்களிலும் சேர்க்கப்படும் கழிவுகள் ஓரிடத்தில் ஒன்று திரட்டி நவீன தொழிநுட்பத்துக்கு அமைய மீள்சுழற்சிக்கு உற்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விஜயத்தின் போது மத்திய மாகாண சபை உறுப்பினர்களான  சத்திவேல், சோ.ஸ்ரீதரன் உட்பட நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகரசபை செயலாளர் பிரியதர்ஷினி, அட்டன் பொலிஸார் ஆகியோர் இணைந்திருந்தனர்.

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் நடுப்பகுதியில் அமைந்துள்ள சில்லறை கடை 14.08.2017 அன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திருடன் ஒருவனால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரல் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவத்தின்போது சிகரட், கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள், காசு போன்றன திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மொத்த பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடன் பின்புறத்தில் உள்ள இரும்பு ஜன்னல், இரும்பு கதவு போன்றன உடைத்து சிவிலின் வழியாக கடைக்கு நுழைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது திருடன் உட்புகுந்து திருடும் சம்பவம் உட்பபட அனைத்தும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக அட்டன் கைரேகை அடையாளப்பிரிவு, அட்டன் மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஊவா மாகாண சுகாதார, சுதேச வைத்திய நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகார, சமூக நலன்பேணல் அமைச்சராக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்கவிடமிருந்து அவரது நியமனக் கடிதத்தை நேற்று (10) பிற்பகல் பெற்றுக்கொண்டார்.

(க.கிஷாந்தன்)

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 29.07.2017 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் தெய்வாதீனமாக இளைஞர்கள் மூவர் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த கார் நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த பாரவூர்த்திக்கு இடமளிக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காரில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.



(க.கிஷாந்தன்)

நீண்ட வரட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் 27.07.2017 அன்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது.

எனினும் கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். அண்மைகாலத்தில் பல உறுதியான தலைவர்கள் இன்மையால் நாம் பல பின்னடைவுகளை சந்திக்திருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பகுதியில்  பொகவந்தலாவ தோட்டத்திற்கு செல்லும் புனரமைக்கப்பட்ட பாதை ,டின்சின், கெம்பியன் ஆகிய  ஆலயங்களுக்கு சிலைகள், விளையாட்டு உபகரணங்கள், அறநெறி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் போன்றன வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. அதில்  கெம்பியன் பகுதியில் 23.07.2017 நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை தமிழ் கல்வி, விவசாயம், சிறு கைதொழில், மீனபிடி, இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன்,  மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ராஜதுரை, ஜெகதீஸ்வர்ன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அன்று இந்திய பிரதமர் வந்த நேரம் நாங்கள் தனியாக சந்தித்து எங்கள் மக்களுக்கு இரண்டு லட்சம் வீடுகளை அமைத்து கிராமங்களாக மாற்றி தருமாறு கேட்ட போது அதற்கு அவர் ஏன் வீடு வழங்க வேண்டும் என்றார். அதற்கு ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உங்கள் அரசாங்கம் தான் எங்களை இங்கு அனுப்பியுள்ளது இந்திய அரசாங்கத்தினால் நாங்கள் எதனையும் பெறவில்லை. டெல்லி எமது மக்களை இங்கு அனுப்பியதனால் தான் எம் மக்கள் அடிப்படை வசதி இன்றி திண்டாடுகிறார்கள்.

ஆகவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் எமது மக்கள் ஏதாவது செய்து பிழைத்து கொள்வார்கள். அத்தோடு மலையக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விசேட புலமை பரிசில் திட்டம் ஒன்றினையும் அமுல்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 10000 வீடுகள் கட்டிக்கொடுக்க சம்மதித்ததுடன் சகல வசதிகளையும் கொண்ட பல்கலைகழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்றன செய்து கொடுக்க சம்மத்தித்தார். அன்று சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் பாடசாலைக்கென்று இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டன. ஆனால் கௌரவ ஜனாதிபதி நிதி வழங்கியும் காணி இல்லாமையினால் அந்த நிதி திறை சேரிக்கு மீண்டும் சென்றுள்ளது. இது எம்மத்தியில் உள்ள அரசியல் சமூக பலத்தினையே நிரூபிக்கின்றது.

அண்மையில் ராகலையில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த இராணுவ கொமாண்டர் ஒருவர் அங்குள்ள தோட்டத்தில் இராணுவ முகாம் அமைக்க 50 ஏக்கர் காணியினை பெற்றுத்தருமாறு என்னிடம் கோரினார். நாம் எம் மக்கள் எங்கு செல்வார்கள் என்று கேட்ட போது அது மூடி கிடக்கும் தோட்டம் தானே என தெரிவித்தார். இது பெரிய வீட்டில் பேச வேண்டிய விடயம் எமது மக்களுக்கு வீடு கட்டுவதற்கு பாடசாலை கட்டுவதற்கு வீதிகள் அமைப்பதற்கு காணிகளை பெற்றுக்கொடுக்காத நிலையில் அப்படியிருக்கும் போது எமது மக்களின் குறைகளை தீர்த்து விட்டு தான் இதை எல்லாம் பேச வேண்டும்.

அதே போன்று தான் சூரியகந்த தோட்டத்தில் 1000 ஏக்கரை பெரும்பான்மை மக்களை குடியமர்த்த வழங்குமாறு ஒரு பெரும்பான்மை அமைச்சர் பாராளுமன்ற பகுதியில் தெரிவித்தார். எமது மக்கள் எங்கு போவார்கள் என்று கேட்ட போது அவர்களை இடையே சொருகி விடலாம் என்றார். இலங்கையில் தேயிலையும், இறப்பரும் மாத்திரம் தான் இருந்தன. அதனால் இந்திய வம்சாவளி மக்கள் மாத்திரம் பெரும்பான்மையாக வாழந்ததனால் சதி திட்டத்தின் கீழ் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு முக்கியதுவம் அளித்து இன்று 70 சதவீதத்திற்கும் மேல் சிறு  தேயிலை உற்பத்தி செய்கின்றனர்.

கால் ஏக்கர் அரை ஏக்கர் என ஐந்து லட்சம் பேர் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களை ஊக்குவிப்பதே தவிர எமது தோட்டங்களை விருத்தி செய்யவில்லை. அரசாங்கம் தேயிலை தோட்டங்களை விருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மக்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்திருக்கலாம். அதனையும் செய்யவில்லை. அரசாங்கம் நினைத்திருந்தால் வீடுகள் கட்டியிருக்கலாம், வீதிகள் அமைத்திருக்கலாம், ஆங்காங்கே ஓரிரு வீடுகள் கொடுப்பதன் மூலம் ஒரு சமூகம் ஒரு போதும் முன்னேறாது எனவே சரியான முறையில் திட்டங்கள் வகுத்து வீடுகளை கட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

மொணராகலை நகரில் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. 

மொணராகலை - வெல்லவாய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

எனினும், பஸ்ஸின் பின் பகுதி இதனால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

எதுஎவ்வாறு இருப்பினும், இயந்திரக் கோளாரே தீக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(க.கிஷாந்தன்)

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த போதை பொருளான 100  என்.சி டின்னுடன் ஒருவர் 20.07.2017 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

19.07.2017 அன்று 25 என். சி டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்தே இந்த 100 என்.சி டின்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ பிரதேசத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்துவருவதாக பெற்றோர்கள் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து இவ் என்.சி.டின்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 25 ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



(க.கிஷாந்தன்)

ஊவா மாகாணத்தில் நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக விவாசாயிகள் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த காலங்களில் தோட்ட மக்களும், கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் தற்போது இருக்கும் காலநிலைன் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

உமாஓயா மற்றும் ஹால்ஓயாகளில் நீர்மட்டம் குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இவ்வாறு அமைந்துள்ளது.

அந்தவகையில்….

கோவா ஒரு கிலோ விலை – 60 ரூபா தொடக்கம் 75 ரூபா வரை

கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 170 ரூபா தொடக்கம் 190 ரூபா வரை

உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 130 ரூபா

போஞ்சி ஒரு கிலோ விலை – 110 ரூபா தொடக்கம் 120 ரூபா வரை

பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 220 ரூபா தொடக்கம் 250 ரூபா வரை

சலாது இழை - 95 ரூபா

கரட் ஒரு கிலோ விலை – 120 ரூபாவிலிருந்து 160 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண சுகாதார பதில் அமைச்சராக, நேற்று (10) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.   
ஊவா மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதுடன் இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தோட்டத்திற்கு செல்வதாக இருந்தால் ஆகுரோயா ஆற்றினை கடந்தே செல்லவேண்டும். ஆற்றினை கடந்து செல்வதற்கு 75 வருடங்களுக்கு முன்பு மரத்திலான பாலத்தினை தோட்ட மக்கள் பயன்ப்படுத்தி வந்தனர்.

மழைக்காலங்களில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கும் போது பாலம் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்படும். இதன் போது இவர்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இம்மக்களின் நலன் கருதி 30 வருடங்களுக்கு முன்பு இரும்பு பாலம் அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாலம் மிகவும் சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மழைக்காலங்களில் இப்பாலமும் வெள்ளத்தால் மூழ்கிவிடும்.

தற்போது இப்பாலம் உடைந்த நிலையில் காணப்படுவதால் பாலம் எந்த நேரத்திலும் உடைந்து போககூடும் என்ற அச்சத்தில் பயணத்தினை தொடர்வதாக அங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தோட்ட மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக மன்றாசி அல்லது ஹோல்புறூக் நகரங்களுக்கு செல்லவேண்டும்.

பாலம் உடைந்து காணப்படுவதால் சுமார் 06 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதையின் ஊடாக பயணிக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தோட்ட மக்கள் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு செல்வதாகயிருந்தால் இப்பாலத்தின் ஊடாக 30 நிமிடங்களில் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், பாலம் உடைந்திருப்பதன் காரணமாக ஒரு மணி நேரம் தேவைப்படுவதாகவும், போக்குவரத்திற்கு அதிக பணம் செலவு செய்யவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பாலத்தினை உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்ற தலைவர்கள் தற்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

(க.கிஷாந்தன்)
டெங்கு நோய் காரணமாக பதுளை பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 02.07.2017 அன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவன், 03.07.2017 அன்று உயிரிழந்துள்ளார்.

தற்போது, பதுளை பெரிய வைத்தியசாலையில் 61 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன


மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலை திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த எட்டு வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் 6 சிறைக்கைதிகளை தனது சொந்த செலவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தள்ளார். 

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை விடுதலை செய்யவும் தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதி வழங்கியுள்ளார். 

மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர், அங்கு இரண்டு ரக்ஆத் சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றினார். பின்னர், அங்குள்ள சிறைக்கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். 

இதன் போது, குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 8 வருடங்களாக சிறைவாசம் இருந்து வரும் 6 கைதிகளுடனும் பேசிய இராஜாங்க அமைச்சர், உடனே அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான 70ஆயிரம் ரூபா பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார். 

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை விடுதலை செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது வாக்குறுதி வழங்கியுள்ளார். 

(க.கிஷாந்தன்)

இளம் தாய் ஒருவர் பிரசவித்து 15 நாட்களான தனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட்டு உறங்க வைத்த பின் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை சவூத் மடக்கும்புர தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் 20.05.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

20 வயதான குறித்த இளம் தாய் பிரசவித்து 15 நாட்களான தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்து சென்றதாகவும், சில நிமிடங்களுக்கு பின் தாய் தனது பிள்ளையை பார்ப்பதற்காக சென்ற பொழுது குழந்தை உயிரிழதுள்ளதாக தலவாக்கலை பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை உயிரிழந்திருப்பதற்கான காரணத்தை கண்டறியமுடியாமல் சந்தேகத்தை ஏற்பட்டுத்தியதன் காரணமாக பொலிஸார் குழந்தைக்கும் வீட்டிற்கும் 20.05.2017 அன்று பாதுகாப்பு வழங்கினர்.

இதனையடுத்து 21.05.2017 அன்று நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவத்தை விசாரணையை செய்த பின் குறித்த குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா பணம் காணாமல் போனதை தொடர்ந்து குறித்த ஆசிரியை ஆறு மாணவர்களை அழைத்து பணத்தினை எடுத்தவர்கள் திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அத்துடன் மாணவர்களை அச்சுறுத்துவதற்காக கற்பூரத்தை கொழுத்திய போது பரமேஸ்வரன் பவித்திரன் என்ற மாணவனின் உள்ளம் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஆசிரியையை அழைத்து விசாரணை செய்வதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் இருந்து குழு ஒன்று ரோப்கில் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாடசாலையின் ஆசிரியை இடம் மாற்றம் செய்யுமாறு கோரி ரொப்கில் தோட்ட மக்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனை ஆகியன விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இவ்வருடம் குழு விளையாட்டுகளாக அமைந்திருந்தன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.