(க.கிஷாந்தன்)
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த போதை பொருளான 100 என்.சி டின்னுடன் ஒருவர் 20.07.2017 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
19.07.2017 அன்று 25 என். சி டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்தே இந்த 100 என்.சி டின்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ பிரதேசத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்துவருவதாக பெற்றோர்கள் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து இவ் என்.சி.டின்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 25 ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment