'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்'




எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும்.
அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும்.
இந்த பருவக் காலநிலை, உலக வெப்பத்தை அதிகரித்து காலநிலை மாற்றப் போக்குக்கு இடையூறாக அமையும்.