
அம்பாறை உகண ஹிமிதுராவ 100 ஏக்கர் பிரதேசத்தில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காட்டுப் பகுதி ஒன்றுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் இந்த சடலங்கள் காணப்பட்டன.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் அம்பாறை அபயபுர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபர் எனவும் பெண் 30 வயதான முல்லேரியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
