இறந்தே பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை இருபத்து ஐந்து லட்சம்




இறந்தே பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை உலக அளவில் கடந்த ஓராண்டில் மட்டும் இருபத்து ஐந்து லட்சத்தைவிட அதிகமாக இருந்துள்ளது என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
அவற்றில் மூன்றில் இரண்டு பங்கிலானவை ஆப்பிரிக்காவில் பிறந்தனவாம்.
தி லான்ஸெட் சஞ்சிகையில் வெளியான ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தே பிறந்த குழந்தைகளின் தொகையில் பாதிக்கும் மேலானவை பிரசவத்தின்போது இறந்தது தான், பயங்கரமான அதிர்ச்சியை தருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, அப்படியான இறப்புகளில் பெரும்பாலானவற்றை தடுத்திருக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ள நாடு பாகிஸ்தான். அந்த வரிசையில் அடுத்த ஒன்பது இடங்களிலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகள்தான் உள்ளன.