இயல்பு வாழ்க்கை பாதிப்பு




நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில் அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. 

அறுகளில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதால் சில பிரதேசங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

காலி மாவட்டம் உள்ளிட்ட மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற மலையப் பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் தொடர்வதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 58 குடும்பங்களின் 222 பேர் நிலவுகின்ற காலநிலையால் பாதிக்ப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முதின மஞ்சுள கூறினார். 

காலியின் சில பிரதேசங்களில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

இது தவிர வவுனியா பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார். 

இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழையை எதிர்பார்க்கமுடியும் என்றும், விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஓரளவுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தெற்கு பக்கமாக காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றரை கொண்டதாக இருக்கும். மன்னாரிலிருந்து கொழும்பு காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது