புதிய அமைச்சுப் பொறுப்பின் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயராக இருப்பதாக, புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சுப் பொறுப்பின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்வின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், புதிய நிதி அமைச்சருமான மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ரவி கருணாநாயக்கவிற்கு மங்கள சமரவீர முத்தம் கெடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோசடிக்காரர்கள் நிரம்பிக்கிடந்த துறைமுகத்தை, தமது காலத்தில் விடுவிக்க முடிந்திருப்பதாக, கனியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சுப் பொறுப்பின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment