கிண்ணியா வைத்தியசாலையில் ATM அட்டையைத் திருடிய தாய்க்கு விளக்க மறியல்.மகன் பிணையில்




(அப்துல்சலாம் யாசீம்)

ATM  அட்டையை திருடி பண மோசடியில் ஈடுபட்ட  தாயை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது  பதினாறு வயது மகனை ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில்  விடுவிக்குமாறும் இன்று (01) திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா  உத்தரவிட்டார்.



சம்பவம் குறித்து தெரியவருவதாவது 

கிண்ணியா தள வைத்தியசாலை சுத்திகரிப்பு  பிரிவின் மேற்பார்வையாளராக கடமையாற்றும்  திருகோணமலை,என்.சீ .வீதியைச்சேர்ந்த அமதூறு துப்பஹிகே வசந்தி சமன்திகா   என்பவருடைய   சம்பத் வங்கி  ATM அட்டையை   அவரது பயணப்பையிலிருந்து திருடி  அவரது மகனிடம்  அந்த அட்டையை கொடுத்து ஹற்றன் நஷனல் வங்கி கிண்ணியா கிளையில் ஜம்பதாயிரம் ரூபாயினை பெற்றுக்கொண்டமை தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டை விசாரணை செய்த கிண்ணியா பொலிஸார் தாயையும் மகனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தாய்க்கும் ,மகனுக்கும் கிண்ணியா பொலிஸார் மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

அத்துடன்   கைது செய்யப்பட்வர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இக்கட்டளையை பிறப்பித்தார்.

 தமது வங்கி அட்டைகளை பயணப்பையில் வைத்திருப்பவர்கள் அதே இடத்திலோ அல்லது அட்டைக்கு பின்புறமாகவோ இரகசிய இலக்கத்தை  காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.