விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது


பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானியை முழங்காலில் இடப்பட்டமை தொடர்பில், ஊவா மாகாண ஆளுனரின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை ஆசிரிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபருக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அறிக்கை வௌியிடப்பட்ட பின்னர் முறையான விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.