அக்கரைப்பற்று மாநகர சபையின் அவசர அவதானத்திற்கு!




(இர்சாத்)
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் பல்வேறுபட்ட இடங்களில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நீர் வடிந்தும் செல்கின்றது.

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. 

அக்கரைப்பற்று பிஸ்கால் வீதி, சித்தீக் டொக்டர் சந்தியிலிருந்து முனவ்வர் டொக்டர் சந்தி வரையும், 2/3 பொது வீதி, உதுமால்லெப்பை எம்.பி. வீதி, அஸ்ஸிராஜ் மஹாவித்தியாலயத்தில் இருந்து, மக்கத்தார் பள்ளி வரையான வீதிகளில் வீதியில் இருந்து 3 அடி மட்ட உயரத்தில் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்கின்றது.

கடந்த வெள்ளிக் கிழமை, அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மாணவ மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மூன்றாம் தவணைப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைக்கு மழைக் காலங்களில் செல்வது என்பது எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது.

கனத்த மழை அதிகரித்து வேளையில் அன்றாட அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அதிகாரிகள்  திண்டாடுகின்றனர். பொது மக்கள் தமது அன்றாடப் பணிகளைன்றனர்  புரிய அல்லறுகின்றனர். நேற்றை கன மழைக்கு, சில வீடுகளில்கூட வெள்ள நீர் ஏறியுள்ளது.  சொல்லவும் முடியாமல்,மெள்ளவும் முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.

மாநகர சபை இந்த இடத்தில், வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வடிகான்களைச் சீரமைத்து,வழிந்தோடமால் இருக்கின்ற நீரை வெளியேற்ற வேண்யுள்ளது.  

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள, பிரதான கால்வாயின் இரு மருங்கும் இன்னும் ஆழமாகத் தோண்டப்பட வேண்டியுமுள்ளது.. இது தற்போதைய அவசரப் பணியாகக் காணப்பட்டாலும், இதற்கென நீண்ட காலத் திட்டம் உடனடித் தேவையாகவுள்ளது.