மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு

நாட்டில் தற்சமயம் நிலவும் நெருக்கடியை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் குறைந்த வருமானம் பெருபவர்கள் ஆவார். 

அவர்களின் வாழ்க்கை மட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும். இதனையடுத்தே ஏனைய விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவது அவசியம் என்று முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

அரசியல்வாதிகள் இதற்காக அர்ப்பணிபுடன் செயற்பட வேண்டும் என்றும் முத்தையா முரளிதரன் மேலும் வலியுறுத்தினார்.


--- Advertisment ---