அக்கரைப்பற்று -கொழும்பு ,சுப்பர் லைன் சாரதி, விளக்க மறியலில்




ஒலுவிலில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான,சுப்பர் லைன் சொகுசு வண்டியின் சாரதியை எதிர்வரும் 21ந் தகிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதவான், பெருமாள் சிவகுமார் 7/02/2019 அன்று உத்தவிட்டார்.


குறித்த விபத்து நடந்த பின்னர்,அம்பாரை தமணைப் பிரதேசத்தைச் சேர்ந்த சாரதி அக்கரைப்பற்று பொலிசில் சரணடைந்தார். இந்த சந்தேக நபரை அக்கரைப்பற்றுப் பொலிசார், இன்று நண்பகல், நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி வந்த சொகுசு  பஸ், தனது நேர் எதிரே  வந்த தம்பட்டையை சேர்ந்தவரக்குச் சொந்தமான  முச்சக்கர வண்டியில் மோதிக்கொண்டது.  விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான, தம்பிலுவில் ரவீந்திரன்(37வயது) இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.
இவர் மீன் வியாபாரத் தொழில் செய்வதாகவும், அதிகாலை வேளையில், ஒலுவில் துறைமுகத்திற்கு, மீனைக் கொள்வனவு செய்ய, தினாந்தரம் சென்று வருவதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில், பேரூந்து, பாதையை விட்டு  சுமார் 5 அடித் துாரத்தில் வயிலினுள் விழுந்து கிடந்துள்ளது. அதேவேளை, அப்பேருந்தின் அடியில் முச்சக்கர வண்டி நொருங்கிய நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.