மஸ்கெலியா பாடசாலையின் அதிபர் வேண்டாம் என கோரி




(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலையில் தற்போது பணிப்புரியும் அதிபர், வேண்டாம் என கோரி 19.03.2019 அன்று சுமார் 50 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த 8 நாட்களாக பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை. மேலும் இப்பாடசாலைக்கு அதிபர் வருகைதந்த காலம் தொட்டு, பாடசாலைக்கு எந்தவிதமான அபிவிருத்தியும் இல்லை என்பதால், 19.03.2019 அன்று மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 
இந்த அதிபர் வந்த காலம் தொட்டு பாடசாலைக்கு எந்த விதமான அபிவிருத்தியும் இல்லை, மேலும் பாடசாலை கற்றல் நடவடிக்கையும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். கற்றல் நடவடிக்கையானது 10 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் போய்விட்டது. ஆசிரியர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது. ஆகவே உடன், வலய பணிப்பாளர் முன்வந்து உடனே இவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மேலும் கல்வி அமைச்சர் முன்வந்து இந்த பாடசாலை தொடர்பான தகவல்களை பெற்று உடன் பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வழி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.