அக்கரைப்பற்றின்- பேடன் பவல் -ஷரீபுதீன் ஆசிரியர் காலமானார்

அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, 2/3 பொது வீதியைச் சேர்ந்த மருதமுனை புலவர்மணி ஆ.மு.ஷரீபுதீன் மாஸ்டரின் மகன் பாரூக் மாஸ்டர் (10) புதன்கிழமை காலை காலமானார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில், வாழ்க்கைத் திறன் விளையாட்டு உடற் கல்விப் பாடங்களையும் போதித்தவர் இவர்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியில் சாரணியத்தைச் செதுக்கியவர் ஷரீபுதீன் ஆசிரியராகும். தேசிய மட்டத்தில் இக் கல்லுாரி சாதனையினை சாரணியத்தில் பெற ஆதார சுருதியாகச் செயற்பட்டவர் எ்னபது கண்கூடு.


இவர் ஓய்வு பெற்ற அதிபர் ஷஹ்பானின் கணவரும்,டொக்டர் ஆக்கில்,முஸ்னத் ஆசிரியர்,முர்சித் அஹமத், சட்டத்தரணி சிபானாஆகியோரின் தந்தையுமாவார். 

ஜனசா நல்லடக்கம் வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்றில் இடம்பெறும்.


--- Advertisment ---