பாகிஸ்தான் அணியை 105 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி




மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்து வீச்சுகளில் நிலைகுலைந்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றுள்ளது.
12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மேற்கிந்திய பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் 21.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் பகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் தலா 22 ஓட்டத்தையும், வஹாப் ரியாஸ் 18 ஓட்டத்தையும் மொஹமட் ஹபீஸ் 16 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன் ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள்  அணிசார்பில் உஷேன் தோமஸ் 4 விக்கெட்டுக்களையும் ஹோல்டர் 3 விக்கெட்டுக்களையும், ரஸல் 2 விக்கெட்டினையும், ஷெல்டன் கோட்ரெல் ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
photo credit : ICC