ஞானசாரவுக்கு கட்டாய சிறைத் தண்டனை கோரி


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை கட்டாய தண்டனையாக உத்தரவிடக் கோரி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 22ம் திகதி அழைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த மனு நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

அது சட்டவிரோதமானது என்றும் கட்டாய தண்டனையாக உத்தரவிடக் கோரிக்கை விடுத்தும் சந்தியா எக்னெலிகொட இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.