மலையகத்தில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் 69 வீடுகள் கையளிப்பு

(க.கிஷாந்தன்)

மலையகத்தில் ரதல்ல மேற்பிரிவு, நானுஓயா டெஸ்போட், ரதல்ல கிளாசோ, வோல்ட்றீம் மெராயா பிரிவு ஆகிய பகுதிகளில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 69 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 02.06.2019 அன்று இடம்பெற்றது.

ரதல்ல மேற்பிரிவில் 20 வீடுகளும், நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் 14 வீடுகளும், ரதல்ல கிளாசோ தோட்டத்தில் 15 வீடுகளும், வோல்ட்றீம் மெராயா தோட்டத்தில் 20 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு மொத்தமாக 69 வீடுகள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, வீடுகளை திறந்து வைத்தனர்.


Advertisement