கரையோர பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தல்

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக செயல்படுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த கடற்கரை பகுதியில் கறுப்பு நிறத்தில் எண்ணெய் கழிவுகள் தென்படுவதானால் இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடற்கரைப்பகுதிக்கு 1 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement