இலங்கைப் பெண்களின் சராசரி வயது 79 ஆனால் இலங்கை ஆண்களின் சராசரி வயது 72


இலங்கைப்பெண்களின் சராசரி வயது 79 ஆனால் இலங்கை ஆண்களின் சராசரி வயது 72 ஆகும். இலங்கை பெண்கள் அறுபது வயதின் பின் மேலும் 19 ஆண்டுகள் வாழ முடியும் எனவும் இலங்கை ஆண்கள் மேலும் 12 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

தென்னாசியாவிலேயே வேகமாய் வளர்ந்து வரும் வயதானோர் குடித்தொகையை கொண்டுள்ள இலங்கையில் 2030ஆம் ஆண்டளவில் 5 இல் ஒரு இலங்கையர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாய் இருப்பார்கள். இலங்கையில் வயதாகும் குடித்தொகையில் பெருமளவானோர் பெண்களாக இருக்கும் இந்நிலை நாட்டுக்கு தனித்துவமான சவால்களையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குகிறது ஆகவே இரண்டுக்கும் நாடு தயாராக இருத்தல் அவசியம். 

இந்த வருடத்துக்கான சர்வதேச குடித்தொகை தினம் ஆனது குடித்தொகை, அபிவிருத்திக்கான சர்வதேச மாநாடு 1994 இல் 179 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத மக்களின் உரிமைகள் , தேர்வுகள் மற்றும் நல்வாழ்வே நிலைபேறான அபிவிருத்திக்கான பாதை என்ற கருப்பொருள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்க விழைகிறது. இதற்கமைய UNFPA எல்லைகளற்ற வயதாதல் என்ற கொள்கைக் கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது நிகழ்வை நடாத்தவிருக்கிறது. 

வயதாதலில் பெண்கள் என்பதே இம்முறை கலந்துரையாடலுக்கான கருப்பொருளாகும். இது முதன்மை கைத்தொழில் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சு, ஹெல்ப்பேஜ் இலங்கை ஆகியவற்றோடு இணைந்து ஒழுங்கமைக்கப்படுகிறது. இந்த கொள்கை கலந்துரையாடல் மூலம் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொண்டு குடித்தொகை வயதாதலை வினைத்திறனாக பயன்படுத்தி கொள்ளும் வகையிலான கொள்கை உள்ளீடுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.வயதாதலில் பெண்கள் என்பதே இக்கலந்துரையாடலின் கருப்பொருள் ஆகும். அது குடித்தொகை வயதாதலின் பரிமாணங்கள், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு பிரச்சனைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 

நிகழ்வில் சமூக நலவாழ்வு மற்றும் முதன்மை கைத்தொழில்கள் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள் கருத்து தெரிவிக்கும் பொது நிலைபேறான அபிவிருத்தியை அடைய வயதாகும் குடித்தொகைக்காக நாடு தயாராக இருத்தல் அவசியம் . இலங்கை வயதான பெண்கள் உள்ளடங்கலாக அனைத்து வயதினருக்குமான ஆரோக்கியமான வாழ்வினையும் நலவாழ்வினையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

பால்நிலை சமத்துவம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து UNFPA இலங்கைப்பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கேன் கருத்து தெரிவித்தபோது பால்நிலை சார்பியலானது பிறப்பு முதல் இறப்பு வரை வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் கிடைப்பதில் தாக்கம் செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கின்றன. உதாரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதில் நிலவும் சமத்துவமின்மையானது ஒரு தனிமனிதனின் வாழ்வில் அதிகரித்துக்கொண்டே சென்று வயதான காலத்தில் உச்சமடைகிறது. ஆண்களை விட பெண்கள் ஊதியமில்லாத பராமரிப்பு பணிகளிலும் நேரம் செலவிடுகிறார்கள். ஆகவே வயதான பெண்கள் வயதான ஆண்களை விட சேமிப்போ ஓய்வூதியமோ இல்லாமல் வறுமையில் வாட அதிக வாய்ப்புக்கள் உண்டு. வயதாதலில் பெண்கள் என்ற கருப்பொருளில் பால்நிலை சமத்துவம், வறுமை மற்றும் வயதாதல் ஆகியன முக்கியதத்துவம் பெறுகின்றன என்கிறார். 

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக திருமதி. தெல்மா கே, சமூக அபிவிருத்தி பிரிவின் முன்னாள் தலைவர், ஐக்கிய நாடுகள் ஆசிய பசுபிக் பொருளாதார, சமூக ஆணையம், வயதாதல் பிரச்சனைகளுக்கான முன்னாள் ஆலோசகர், சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு சிங்கப்பூர், திரு. ரின்டரோ மோரி, குடித்தொகை மற்றும் வயதாதல் பிரச்சனைகளுக்கான வலய ஆலோசகர்,UNFPA வலய அலுவலகம் தாய்லாந்து, Dr. பபாசரி கினிகே, சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் உளவள ஆலோசகர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த கலந்துரையாடல்கள் எவ்வாறு வயதாதலில் பெண்கள் என்னும் பிரச்சனை எவ்வாறு ஒரு வாழ்க்கைச்சக்கர அணுகுமுறை மூலம் அணுகப்பட வேண்டும் எனவும் வாழ்க்கை முழுதும் பெண்களின் உரிமைகளும் தெரிவுகளும் அவர்களின் வாழ்நாள் முழுதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் வயதாதலில் பெண்கள் என்ற பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவம் என்பன கலந்துரையாடப்பட்டன.