சஜித் வருவதற்கு அவர்கள் பயப்படுகின்றனர்

எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டையை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாவதற்கு எதிராக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

காலியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

எமது கட்சியின் வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்திற்கு இணங்க தெரிவு செய்ய நாங்கள் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சஜித் பிரேமதாஸ வருவதற்கு அவர்கள் பயப்படுவதாகவும் அதனால் பிரச்சினை ஒன்றை உருவாக்க பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement