#பிகில் ஹாஷ்டேக் ,மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பை ட்விட்டரில் பின் தள்ளியது

சர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் 20.3 ஆயிரம் ட்வீட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளது #BigilTrailerday எனும் ஹாஷ்டேக்.
பிகில் ட்ரைலர் இன்று (சனிக்கிழமை) வெளியாவதை முன்னிட்டு இந்த ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இதற்கு அடுத்த இடத்தில் சென்னை டிரெண்டிங்கில் உள்ளது #BigilTrailerFromToday எனும் ஹாஷ்டேக்.
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பை ட்விட்டரில் பின்னுக்குத் தள்ளிய விஜய் ரசிகர்கள்படத்தின் காப்புரிமைTWITTER
இந்த ஹாஷ்டேகில் பதியப்பட்டுள்ள ட்வீட்டுகளின் எண்ணிக்கை 3,502.
சென்னை டிரெண்டிங்கில் இந்த இரண்டு ஹாஷ்டேகுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளது #XiJinpingInChennai.
இந்த ஹாஷ்டேகில் பதியப்பட்டுள்ள ட்வீட்டுகளின் எண்ணிக்கை 1,300 க்கும் மேல்.

'வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான்'

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பை ட்விட்டரில் பின்னுக்குத் தள்ளிய விஜய் ரசிகர்கள்படத்தின் காப்புரிமைVIJAY FANS CLUB
செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள்." என்று பேசி இருந்தார்.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசினார் என்பதை அறிய:
கடந்த நான்கு பட பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசி வருகிறார் விஜய்.
சர்க்கார் திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்க்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்." என்றார்.
அவர், "அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன்... ஒழிப்பது கஷ்டம்தான் ஆனால் ஒழிப்பேன்" என்றும் பேசி இருந்தார்.

பிகில் V கைதி

கைதிபடத்தின் காப்புரிமைDREAM WARRIORS
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் பிகில் திரைப்படத்துடன் கைதி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
கைதி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ்தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.


--- Advertisment ---