புற்று நோய் பராமரிப்பு நிலையத்துக்கு உதவிடுவோம்!




அன்பின் நண்பர்களே!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிந்திய நிலையை அடைந்து(late stage) தங்களது வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாத நோயாளர்களுக்கும், புற்று நோயின் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுவரும் தூர பிரதேச நோயாளர்கள் தற்காலிகமாக தங்கி தமது சிகிச்சைக்குரிய நேரத்தில் சென்று தமக்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்வதற்குமாக
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் #EASCCA #HOSPICE எனும் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் தனவந்தர்கள்,கொடையாளிகள்,புத்திஜீவிகளின் நூறுவீதப் பங்களிப்புடன் இயங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் இன மத மொழி வேறுபாடின்றி இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்நிலையத்தில் மன நிறைவான பராமரிப்பு சேவையின் முற்றிலும் இலவசமாகப் பெற்று பலனை
அடைந்திருப்பதென்பது மிகவும் மகிழ்வுடன் அறியத்தரவேண்டிய விடயம்.

முற்று முழுதாக தனி மனிதர்கள், குழுக்களின் பொருளாதார மற்றும் பல்வேறு பங்களிப்புடன் நடந்தேறிக் கொண்டிருக்கும் இந்நிலையத்தின் தற்கால சவாலாக நாளாந்த பராமரிப்பு செலவினங்களுக்கான நிதி மூலங்களை ஒழுங்கு படுத்துவதுதான் என்றால் அது மிகையல்ல.....

அன்பான உறவுகளே.....

நாளாந்தம் எமது அன்றாட வாழ்வின் எத்தனையோ சந்தோசமான தருணங்களுக்காக, களியாட்ட நிகழ்வுகளுக்காக அல்லது நம்மைச் சார்ந்தவர்களின் மறுமை ஈடேற்றத்திற்கான தர்மமாக பல ஆயிரம் ரூபாய்களை செலவுகள் செய்கிறோம்.

உங்களால் முடிந்தால்......
வருடத்தில் ஒரு நாளை மிகக் காத்திரமான இம்மனித நேயப் பணிக்காக உங்களது பொருளாதாரத்தில் #ரூ25000 ஐ வாரி வழங்கி வாழும் போதே சகோதர உறவொன்றை வாழவைத்த திருப்தியுடன் உங்கள் வாழ்க்கையை கடந்து செல்லுங்கள்.

ரூ.25000 எனும் இத்தொகையை நீங்கள் தனியாகவோ, கூட்டாகவோ வருடத்தின் 365 நாட்களில் ஒரு நாளை தீர்மானித்து எங்களிடம் முற்பதிவு செய்து கொள்ளலாம்..

நாம் நமது வாழ்வின் ஈடேற்றத்திற்காகவும் நமது பரம்பரையின் நல் வாழ்வுக்காகவும் இன்றே முதலீடு செய்வோம் இறைவனுக்காக என்னும் தூய எண்ணத்துடன்.....

உங்களது உள்ளமும் உங்களது உணர்வும் உங்களை தூண்டினால் எங்களை அழையுங்கள்.

0779919986
0777006280
0773662821

உங்களால் முடிந்தால்.......

உங்களது

#whatsapp, #Viber,
#Twitter,#Messenger,#Instagram

போன்ற

#சமூக_வலைத்தள_குழுமங்களுக்குள் (Groups)

இம்மனித நேயப் பணிக்கான எமது தூதை இயலுமான வரை எத்திவையுங்கள்.

"ஒரு நல்ல பணி அது நடைமுறையில் உள்ள காலமெல்லாம் அதனை வழிகாட்டியவர்களுக்கு நன்மையை வழங்கிக் கொண்டே இருக்கும் இந்த உலகம் அழியும் வரை."