தாழ் நிலப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடம் இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது. தற்போதைய நிலையில் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு ஒரு இலட்சத்து 400 ஆக காணப்படுவதாகவும், ஒரு இலட்சத்து நான்காயிரம் மாத்திரமே நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு எனவும் நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


--- Advertisment ---