ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதல் வாட்சப் மூலம் திட்டமிடப்பட்டது

டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை வாட்சப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது என்று கூறி சில வாட்சப் குழுக்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று என்றும், அதற்கான திட்டம் வாட்சப் குரூப் மூலம் வகுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
வைரலாகும் அந்த ஸ்க்ரீன் ஷாட்களில் பலவகையான செய்திகள் இந்தியில் பகிரப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
அதில், "ஜே.என்.யுவுக்குள் எப்படி செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும்?" போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அதில் சில செய்திகள்:
"இன்றைய ஆட்டம் எப்படி இருந்தது?"
"ஜே.என்.யுவில் வேடிக்கையாக இருந்தது. அந்த துரோகிகளை கொல்வது வேடிக்கையாக உள்ளது."
"வாயிற்கதவில் ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்."
"என்ன செய்ய வேண்டும்,"
"ஜே.என்.யுவுக்கு ஆதரவாக முக்கிய வாயிற்கதவில் கூட்டம் கூடுகிறது. நாம் ஏதாவது செய்ய வேண்டுமா?"
"செய்யலாம்,"
"போலீஸ் இன்னும் வரவில்லை."
"அந்த கூட்டத்தில் இடதுசாரி நபரை போல் எனது சகோதரர் சேர்ந்து கொண்டார்,"
ஜே என் யுவில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK
பிபிசி அந்த ஸ்கீரின் ஷாட்டில் தோன்றிய எண்களை 'ட்ரூ காலர்' செயலி மூலம் சோதனை செய்தது.
ட்ரூ காலரில், ஸ்க்ரீன் ஷாட்டில் இருப்பது போன்றுதான் அந்த எண்களின் பெயர்கள் வருகின்றன.
அவ்வாறு சோதனை செய்ததில் ஏழு பேர்களின் பெயர்கள் ஒத்துப்போயின. ஆனால் ஏபிவிபி என்று ஸ்க்ரீன் ஷாட்டில் காணப்பட்ட எண் ஒன்று, ட்ரூ காலரில் ஐஎன்சி என்று காட்டப்பட்டது. ஆனால் ட்ரூ காலரை பொறுத்த வரை இவ்வாறு மாற்றி சேமிப்பது சாத்தியமே.
பிபிசி இந்த எண்களை தொடர்பு கொண்டது.
இந்த சாட்டில் இருவகையான எண்கள் உள்ளன. ஒருசில எண்கள் அந்தக் குழுவில் ஏற்கனவே சேர்க்கப்பட்டவை.
பிற எண்கள் இன்வைட் லிங்கின் மூலம் அந்த குழுவில் இணைந்தவர்கள்.
ஒரு வாட்சப் குரூப்பின் அட்மின் லிங்கை ஷேர் செய்து அந்த குழுவில் சேர ஆட்களை அழைக்கலாம். அந்த லிங்கின் மூலம் குழுவில் சேர அட்மினின் அனுமதி தேவையில்லை.
வாட்சப் செய்திபடத்தின் காப்புரிமைBBC HINDHI
நாங்கள் அந்த ஸ்கிரீன் ஷாட்டில் உள்ள எண்களை ஒவ்வொன்றாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அதில் எந்த எண்ணில் இருந்து செய்திகள் வந்ததோ அது அனைத்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
அதில் ஒருவரிடம் பேச முடிந்தது. அந்த எண் ஹர்ஷித் ஷர்மா என்பவரின் எண். அவர் தன்னை ஜே.என்.யுவின் மாணவர் என்று கூறினார். அந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அவர் பல்கலைக்கழக வளாகத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாட்சப் குழுவில் ஒன்றில் பேச்சுகள் நடைபெற்றதாக அவர் தெரிவிக்கிறார்.
அதில் பல ஜே.என்.யு மாணவர்கள் அவர்களின் எதிர்கால திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள அந்த குழுவில் சேர்ந்தனர்.
"அந்த குழுவின் பெயர் 'இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை' என இருந்தது. அப்போது மணி ஒன்பதரை இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். அதன்பின் 100-150 பெயர் தெரியாத நபர்கள் அந்த குழுவில் சேர்ந்தனர். பல இடதுசாரிகள் அந்த குழுவில் சேர்ந்தனர் என்ற அந்த குழுவில் செய்தி அனுப்பப்பட்ட்து அதன்பின் அவர் அந்த குழுவில் செய்தியை அனுப்புவதை நிறுத்திவிட்டனர்."
அந்த குழுவில் இருந்த பலர் அந்த குரூப்பின் பெயர் அடிக்கடி மாறிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றனர். சில நேரத்தில் 'இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை', 'ஏபிவிபி முராதாபாத்', 'ஏபிவிபி ஜிந்தாபாத்', 'இடதுசாரிகள் சரிந்துவிட்டனர்' என்று மாற்றப்பட்டது.
வாட்சப்படத்தின் காப்புரிமைBBC HINDHI
வாட்சப்படத்தின் காப்புரிமைBBC HINDHI
ஹர்ஷித் ஷர்மா அந்த குழுவில் ஒரு செய்தியை அனுப்பி அதை டெலிட் செய்துவிட்டார் அதுகுறித்து கேட்டபோது, "அந்த குழுவில், பலர் வாயிற்கதவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர் என செய்தி வந்த சமயத்தில், என நண்பர்கள் சிலரும் வாயிற் கதவுக்கு அருகில் இருந்தனர். எனவே அதை நான் ஸ்கீரின்ஷாட் எடுத்து எனது நண்பர்களுக்கு அனுப்பினேன். ஆனால் தவறுதலாக அந்த குழுவிற்கு அதை அனுப்பிவிட்டு பின் அதை அழித்துவிட்டேன்." என்கிறார்.
அந்த குழுவில் லிங்க் மூலம் வந்தவர்கள் பலரும் அவர்களுக்கு வாட்சப்பிலும், பிற சமூக ஊடகங்களில் மூலமாகவும் அந்த லிங்க் வந்ததாகவும், அந்த குழுவில் சேர்ந்த பிறகே என்ன நடக்கிறது என்று தெரிந்ததாகவும் கூறுகின்றனர்.
அந்த வாட்சப் குழு சாட்டில் பலர், தாங்கள் கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து வந்ததாக கூறுகின்றனர். பிகாரை சேர்ந்த ஒருவர் தான் இதுவரை டெல்லிக்கு வந்ததில்லை என்று கூறுகிறார். மேலும் அவருக்கு ஜே.என்.யுவில் யாரையும் தெரியாது என்றும் கூறுகிறார்.
சிலர் தங்களுக்கே தெரியாமல் தவறுதலாக அந்த குழுவில் சேர்ந்ததாக சொல்கின்றனர். சிலர் அந்த குழுவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது அவசியமாக இருந்தது என்றும் கூறுகின்றனர்.
இருப்பினும் அந்த குழுவில் பல ஜே.என்.யு மாணவர்களின் எண்கள், பலர் ஹர்ஷித்தை போல என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அந்த குழுவில் சேர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
வாட்சப்படத்தின் காப்புரிமைWHATSAPP FAQ
ஜே.என்.யுவில் பெர்சிய மொழி பயிலும் மாணவர் ஒருவர், தனது துறை சார்ந்த குழுவில் இந்த இன்வைட் லிங்க் வந்ததாகவும், ஆனால் அந்த குழுவில் செய்திகளை பார்த்து அது தவறானது என்பதை புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியே வந்ததாகவும் கூறுகிறார்.
அதே போன்று வேறொரு மாணவர், ஏபிவிபியின் திட்டத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பாருங்கள் என தனக்கு அந்த லிங்க் பகிரப்பட்டதாக கூறுகிறார். இந்த மாணவர்கள், தாக்குதல் நடத்தப்பட்ட சபர்மதி விடுதியை சேர்ந்தவர்கள். பல வெளிநபர்களும் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஜே.என்.யுவை சேர்ந்தவர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை.
பவ்தீப் என்ற பத்திரிகையாளரும் இந்த குழுவில் என்ன திட்டம் தீட்டுகின்றனர் என தெரிந்து கொள்ள அதில் சேர்ந்ததாக கூறுகிறார்.
அந்த குழுவில் 250 பேர் இருந்ததாக கூறுகிறார் அவர்.
வாட்சப் செய்திபடத்தின் காப்புரிமைBBC HINDHI
அதே சமயம் ஆதித்யா என்பவர் தான் பிறரால் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார். அவர் ஜே.என்.யு மாணவரும் இல்லை என்றும், தனக்கு எந்த அரசியல் கொள்கையும் இல்லை என்றும் கூறுகிறார்.
ஆனால் இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருப்பது தனக்கு தெரியும் என்றும், வலதுசாரி கொள்கையுடைய சில பேராசிரியர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
அதே போன்றே முனைவர் பட்ட ஆய்வு பட்ட மாணவர் ஆஷிஷும் கூறுகிறார். அவர் அந்த குழுவின் அட்மின்களில் ஒருவர்.
தான் அந்த வளாகத்தில் இல்லை என்றாலும் யாரோ ஒருவரால் அந்த குழுவில் சேர்க்கப்பட்டு அட்மின் ஆக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
"சம்பவம் நடைபெற்ற அன்று, நான் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். நான் ஜே.என்.யுவுக்கு இரவு பத்து மணிக்கு வந்தேன். அப்போது ஐந்து மணி நேரம் வெளியே நின்றேன். எனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை," என்கிறார் ஆஷிஷ்
இவர்கள் அனைவரும், தங்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், அதில் தங்களின் இருப்பிடங்களை கேட்டு அச்சுறுத்தவதாகவும், அதனால் தாங்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Advertisement