வைத்தியசாலையில் மதுபோதையில் ரகளை புரிந்த சுகாதார உதவியாளருக்கு விளக்கமறியல்


#IRSA

#IRSAATH.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் சென்று, அங்குள்ள சுகாதாரத்துறை உதவி மேற்பா்வையாளரை தகாத வார்தைகளால்ஏசியதுடன் அவரது கடமைக்கும் பங்கம் விளைவித்த  அதே வைத்தியசாலையின் சுகாதார உதவி உத்தியோகத்தரை விளக்கமறியில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிபதி பொருமாள் சிவக்குமார் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சம்பவமானது, இரவு நேரத்தில் நடை பெற்றுள்ளது. அதிக மது போதையில் சென்று, நீண்ட நேரமாக ஏனைய உத்தியோகத்தர்களின் வேலைகளுக்கு இடையுறு ஏற்படுத்திய இந்தச் சந்தேக நபர், நோயாளிகளின் துாக்கத்திற்கும், வைத்தியர்களின் பணிக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்ட அன்று செயற்பட்ட இவரை அக்கரைப்பற்றுப் பொலிசார் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.Advertisement