அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க புதிய நிருவாகிகள்

#A,L.ஜெனீர்.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் 2020ம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகளைக் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று நண்பகல் அக்கரைப்பற்று நீதிமன்றில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எஸ்.எல்.ஏ றசீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் இடம் பெற்ற 2020ம் ஆண்டுக்கான வருடாந்த மாட்டில், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ். ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.


(இடமிருந்து வலமாக 3 வது இடத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி ஆர்கிலா)
இதேவேளை, புதிய செயலாளராக  திருமதி ஆர்கிலா அவர்களும் பொருளாளராக,தமிழினியனும்  தெரிவு செய்யப்பட்டனர்.மேலும் சிரேஸ்ட பிரதித் தலைவர்களாக சட்டத்தரணிகள் எஸ.எம்.கபுர்,


எஸ்.எல்.ஏ .றசிட், ஏ.எச்.சமீம் ஆகியோர் தெரிவாகினர். உப செயலாளாளராக, பி.எம். சகீக், வர்களும், வாசிகசாலைப் பொறுப்பாளராக திருமதி கலைவாசனாவும், மலராசிரியராக ஜெகசுதன் அவர்களும் ஏக மனதானத தெரிவாகினர்.


Advertisement