#அக்கரைப்பற்று மன்றின் கட்டுக்காப்பில், ஊரடங்கினை மீறியோரின் வாகனம்

#ST,Jamaldeen.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஊரடங்கினை மீறிய 5 பேர்,இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ நீதிபதி ஜனாப் எச்.எம்.ஹம்சா அவர்கள் முன்னிலையில் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.குறித்த சந்தேக நபர்களில் ஊரடங்கினை மீறிச் செயல்பட்ட, சில வியாபாரிகளும் அடங்கி இருந்தனர்.

ஊரடங்கின் விதி முறைகளை மீறிய நபர்களை கடுமையாக எச்சரித்து பிணை  வழங்கிய கௌரவ நீதிபதி அவர்கள், குறிப்பிட்ட சந்தேக நபர் பணித்த வாகனத்தை நீதிமன்றின் கட்டுக் காப்பில்  வைத்திருக்குமாறும் அக்கரைப்பற்றுப்   பொலிசாருக்கு உத்தரவிட்டார். 


Advertisement