தொழிற்சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

முதலீட்டு வலயத்திற்கு கீழுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Image captionபிரசன்ன ரணதுங்க
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் முதலீட்டு சபையின் தலைவருக்கு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை ராணுவ பாதுகாப்புடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்து செல்லுமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்டுநாயக்க, பியகம மற்றும் சீதாவக்க ஆகிய சுதந்திர வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளில் சுமார் 25000திற்கும் அதிகமானோர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக கடந்த காலங்களில் சுதந்தர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை சங்கம் குற்றஞ்சுமத்தியிருந்தது


Advertisement