நீதிமன்றம் மறுப்பு

சிங்கப்பூரில் ஒரு பாலுறவு தடை சட்டத்தை நீக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவு சிங்கப்பூரில் உள்ள பாலின சிறுபான்மையினர் (எல்.ஜி.பி.டி) இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
காலனியாதிக்க காலத்தில் இயற்றப்பட்ட ஒரு பாலுறவு தடை சட்டம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விரோதமானது என வழக்கு தொடர்ந்த மூன்று ஒருபாலுறவினர்களின் மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சிங்கப்பூரில் "பொது மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பதில் சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் சட்டப்பிரிவு 377ஏ-வின்படி, பொது வெளியில் அல்லது தனிமையில் ஒருபாலுறவினர் உறவு கொள்வது குற்றச் செயலாகவே கருதப்படும். இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.


Advertisement