மாமன்னரும் துணைவியரும் தனிமையில்

மலேசிய அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாமன்னரும் அவர் துணைவியாரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 235 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அங்கு நோய்த்தொற்று ஏற்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,031 ஆகும். நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 215 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றாலும் சுகாதார துறையின் ஊழியர்கள் 80 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.Advertisement