உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டது

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,02,667ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது.


Advertisement