உயிலில் கைரேகை வைத்த #ஸ்டீபன் ஹாகிங்


லண்டன்: உயிரிழந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங், தன் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அதில் கைவிரல் ரேகையை அவர் பதிவு செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங். இயற்பியல் சார்ந்த கோட்பாடுகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்ட அவரால், நடக்கவோ, எழுந்திருக்கவோ முடியாது. சக்கர நாற்காலியில் தான், வாழ்க்கையை கழித்தார். இவர், தன், 78வது வயதில், 2018ல், பிரிட்டனில் காலமானார்.

latest tamil news



இவரது உயில் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவர், தன், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, தன் மூன்று பிள்ளைகள், மூன்று பேரப் பிள்ளைகள் மற்றும் தன் உதவியாளர் ஆகியோருக்கு, உயில் எழுதி வைத்துள்ளார். ஸ்டீபன் ஹாகிங்கின் கைகள் செயல்படாது என்பதால், உயிலில், கையெழுத்துக்கு பதிலாக, கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.