அக்கரைப்பற்றில் 320 குடும்பங்கள் முடக்கப்பட்டுள்ளன

#ST.Jamaldeen.
அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலை அண்டிய பகுதியில் 320 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 900 பேர் முடக்கப் பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் அறிவிக்கின்றார்.  நேற்றை தினம், கொரொனா தொற்றுக்கு ஆட்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து,  இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்கரைபற்று சுகாதாரப் பகுதியினர், பொலிசார், பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணைந்த நடவடிக்கையாக  மறு அறிவித்தல் வரை யாரும் அப்பகுதி மக்கள் வெளியில் செல்லவும் முடியாமலும், வெளியில் உள்ளோர் அப் பகுதிற்குள் உட் செல்லவும் முடியாமலும் முடக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முடக்கப்பட்ட பகுதியில் நலிவுற்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுகளை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனம் இலவசமாக வழங்கவுள்ளது. மேலதிக பொருட்களைப் பெற விரும்புவோர்கள் இணையத்தின் ஊடாக பொருட்களை சுகாதார முறைப்படி பெற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Advertisement