மணற்சேனை மக்கள் மறக்கமாட்டார்கள்

கொரனா தொற்று அச்சம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினாள் தொழிலை இழந்து உண்பதற்கு உணவின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு நோர்வே தமிழ் உறவுகளின் நிவாரணப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி இன்றைய தினம் பொத்துவில் மணற்சேனை கிராமத்தில் 50 குடும்பங்கள் , தீவுக்காளை எகட் வீட்டுத் திட்ட கிராமத்தில் 15 குடும்பங்கள், கோளவில் கிராமத்தில் 29 குடும்பங்களும், கண்ணகிபுரம் கிராமத்தில் 14 குடும்பங்களுக்கும் உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நோர்வே உறவுகள் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட 322 குடும்பங்களுக்கு தலா ரூபா 1,500/- பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்வே உறவுகளின் காலத்தின் தேவை அறிந்த நற்பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை மக்கள் தெரிவித்தனர்.


Advertisement