என் வழி தனி வழி

யுத்தம் நிறைவடைந்து 11 வருட பூர்த்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக நடத்தப்பட்ட இராணுவ வெற்றியின் தேசிய விழா இன்று இடம் றெ்றது.

இலங்கை இராணுவ வீரர்களையும் நாட்டையும் தொடர்ந்து இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக ஒருபோதும் தயங்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகால போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் காணாமற்போன படைவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் தேசிய படைவிரர் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.


Advertisement