பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சினிமா ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சியடைவார்கள்.

தமிழில் சில தினங்களுக்கு முன் 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியானது அதனையடுத்து தற்போது பென்குயின் படம் வெளியாகியுள்ளது.

மேலும் பல மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியானது.

ஹிந்தியிலும் கூட அமிதாப் பச்சம் நடித்த குலாபு சிதாபு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

”அமேசானை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தேவையை அறிந்து அதற்கேற்ப பணியாற்றுகிறோம்,” என்கிறார் அமேசான் இந்தியாவின், ஹெட் ஆஃப் கன்டண்ட்.

”வாடிக்கையாளர்களின் வீடுகளில் சிறப்பான திரைப்பட அனுபவத்தை கொண்டு வரும் எங்கள் திட்டத்தின் முதல் முயற்சி இது.” என்கிறார் அவர்.

எனவே நமது ஸ்மார்ட் டிவிகளிலும், லாப்டாப்களிலும் அலைபேசிகளிலும் எதிர்கால பொழுதுபோக்கு அமைந்துள்ளது.

புதிய முயற்சிகள்

ஒரே அரங்கத்தில் பலபேர் ஒன்றாக சேர்ந்து கைத்தட்டுவதும், சிரிப்பதும், ரகசியமாக அழுவதும், அதன்மூலம் அந்த அரங்கத்தில் உள்ள முகம் தெரியாத அனைவரும் அந்த தருணத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர் என்பது ஒரு ரசிக்கத்தக்க அனுபவம்.ங்கள் என்ன?

  • Banner

ஆனால் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்ல வாடிக்கையாளர்களும்கூட தங்களின் பொழுதுபோக்கிற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள 21 வயது ஹர்ஷீதா மேதாவும் கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தில் சிக்கிக்கொண்ட பலரில் ஒருவர். எனவே அவர் நெட்பிலிக்ஸ் பார்டி என்ற ஒன்றை ஒருங்கிணைக்கிறார்.

நெட்பிலிக்ஸில் ஒரே நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான ஒரு திரைப்படத்தையோ அல்லது தொலைக்காட்சி தொடரையோ நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதில் லைவ் சாட் செய்வதற்கான வசதியும் உண்டு.

இது திரையரங்கம் போன்ற ஒரு அனுபவத்தை தர முடியாது என்றாலும் தனது எண்ணங்களை சாட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார்.

கொரோனா வைரஸ்

புகழ்பெற்ற கோன் பனேகா க்ரோர்பதி (Kaun Banega Crorepati) நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் சூழலால் இந்த வருடம் அதில் கலந்து கொள்பவர்கள் தொலைக்காட்சியின் செயலி மூலம் போட்டிக்கான தேர்வில் பங்கேற்பார்கள். அதன் பின் கடைசியாக வீடியோ கால் மூலம் நேர்காணல் செய்யப்படும். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவைக் கூட அமிதாப் பச்சன் தனது வீட்டிலிருந்தே அவரே படம் பிடித்தார்.

இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புதிய முயற்சியின் தொடக்கமாகும். அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்களும், பொழுதுபோக்கு துறையினரும் புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஒரு புதிய தொடக்கம்

ஆனால் இம்மாதிரியாக ஓடிடி தளத்தில் படம் பார்ப்பது திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்திற்கு ஈடாகுமா என்பது பெரிய கேள்வியே.

”அமேசான் ப்ரைம் வீடியோவில், 200 நாடுகளில் பல பகுதிகளில் படங்கள் வெளியாகும்போது அது அதிகமான மக்களை சென்றடைகிறது,” என்கிறார் அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர் கெளரவ் காந்தி.

இந்த புதிய ட்ரெண்டை சினிமா விமர்சகர் ஷுப்ரா குப்தா “தைரியமான புதிய பாலிவுட்” என டிவிட்டரில் விமர்சிக்கிறார்.

ஆனால் எதிர்காலத்தில் இந்த டிஜிட்டல் முயற்சி மல்டிப்ளக்ஸ்களை மாற்றியமைக்குமா என்பது சந்தேகமே என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சினிமா விமர்சகர் நம்ரதா ஜோஷி.

நல்லதோ கெட்டதோ இந்த புதிய அனுபவத்துக்கு மக்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர். பாப்கார்ன்கள் இல்லை, முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் பெறுவதற்கான அவசரம் இல்லை, நீண்ட வரிசையோ அல்லது ஆன்லைன் புக்கிங்கோ எதுவும் இல்லை. வீட்டிலிருந்தே பெரிய படங்களை பார்த்துக் கொள்ளலாம்.

கூட்டமாக பார்த்தல் என்பது இல்லாமல் தனிப்பட்ட முறையில் சினிமா பார்க்கும் ஒரு அனுபவம்.

சிறியக் குழுக்களும், தனிநபர் முயற்சியும்

சினிமா அரங்கில் குறைந்த அளவிலான மக்களை அனுமதிப்பது, தீவிரமாக சுத்தம் செய்வது, மருந்து தெளிப்பது என்ற எதிர்காலத்திற்கு சினிமா தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.

படப்பிடிப்பு முறைகள்கூட மாறலாம்.

கொரோனா வைரஸ்

தென் ஆப்ரிக்காவில் லாக்டவுன் ஹைட்ஸ் என்ற தொடரை நடிகர்கள் தங்களின் வீடுகளிலிருந்தே படம்பிடித்து அதை படத்தொகுப்பு மூலம் ஒன்றிணைத்துள்ளனர்.

பாலிவுட்டிலும் படப்படிப்புகள் தொடங்கவுள்ளன. ஆனால் படக்குழுவில் 33 சதவீத நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். நடிகர்களுடன் குறைந்த நபர்கள் மட்டுமே வர வேண்டும். நடிகர்கள் தேர்வு வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நடைபெறும். மேக் கப் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கு பாதுகாப்பு கவசமோ முகக்கவசமோ அவசியம்.

உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்

 

பார்வையாளர்கள் இல்லாத ரியாலிட்டி ஷோக்கள் நடைபெறும்.

அக்‌ஷய் குமார் சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். அந்த படப்பிடிப்பு தலத்தில் உடல் வெப்பநிலை சோதனைகள், கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை பார்க்க முடிந்தது.

கொரோனா வைரஸ்

இம்மாதிரியான கடினமான சூழல் புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும் அல்லது பழைய வழிமுறைகளுக்கு மீண்டும் வித்திடும்.

கொரோனாவால் உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கக்கூடிய அமெரிக்காவிலும் திரையரங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே அங்கு காருக்குள் அமர்ந்து கொண்டு சினிமா பார்க்கும் முறையை மீண்டும் தொடங்கவுள்ளனர். இதுவும் டிரண்டாகும், ஏன் இந்தியாவிலும் இது பழகிப்போகலாம்.

இசை நிகழ்ச்சிகள்

இந்த பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் இசைத்துறையும் ஒன்று. ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டு நடத்தப்படும் இசை கச்சேரிகளோ அல்லது இசை நிகழ்ச்சிகளோ ரத்து செய்யப்பட்டுவிட்டன. இசைப்பிரியர்கள் இன்னும் சில காலம் காத்திருக்கதான் வேண்டும்.

எனவே இசைப்பிரியர்கள் என்ன செய்யலாம்? சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரும், இண்டி பாண்ட் பரிக்ரமாவின் துணை நிறுவனருமான சிந்தன் கல்ரா, இசைக்கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய முயற்சி பிறக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

”தொழிநுட்பரீதியாக பார்த்தால் மெய்நிகர் உலகம் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு உண்மையான அனுபவத்தை கொடுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று கூறும் கல்ரா, ஆனால் இது இந்தியாவில் வருவதற்கு பல காலம் பிடிக்கலாம் என்கிறார்.

கொரோனா வைரஸ்

தற்போதைய சூழ்நிலை, கலைஞர்கள் அவர்கள் துறையில் மெருகேற ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது என்றும் இது நிச்சயம் அவர்கள் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள உதவும் என்றும் அவர் கூறுகிறார்.

“இப்போது பயணங்களை மேற்கொள்ளாமலேயே தங்களுக்கு பிடித்தமான கலைஞர்களின் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தளங்களில் மக்கள் பார்க்கலாம்.”

ஸ்டூஃபிஷ் என்னும் சர்வதேச பொழுதுபோக்கு மேடை கலை வடிவமைப்பு நிறுவனம், சமூக இடைவெளியை பின்பற்றி எவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துவது என கண்டறிந்து வருகிறது. இந்த ஸ்டூவிஃபிஷ் நிறுவனம் யு2, ரோலிங் ஸ்டோன், பியான்ஸ் நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளது.

கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் மத்தியில் ஒரு புதிய உறவு வளரலாம்.

சவுண்ட்க்ளவுட், கலைஞர்களின் ப்ரோஃபைல் பக்கங்களில், பேபால் அல்லது கிக்ஸ்டாடர் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்கள் பணம் வழங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.

ஜியோசாவன் ஃபேஸ்புக்கில் நேரடியாக கலைஞர்கள் வழங்கும் நிகழ்ச்சியை தனது தளத்தில் வழங்குகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் 100 சதவீதம் கலைஞர்களை சென்று சேரும்.

கேளிக்கை பூங்காக்கள்

சினிமா மற்றும் இசையை தவிர கேளிக்கை பூங்காக்களும் புதிய வழிமுறைகளை கையாளும்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க் 24,000 என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்களை குறைத்துள்ளது. ஊழியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனையும் செய்யப்படும்.

கொரோனா வைரஸ்

எனவே சில மாதங்களுக்கு பிறகு நீங்களும் உங்கள் குடும்பமும் இந்தியாவில் கேலிக்கை பூங்காக்களுக்கு செல்லலாம் ஆனால் சமூக இடைவெளி, முகக் கவசம் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சோட்டா பீம் மற்றும் மிக்கி மவுஸ் போன்ற கதாபாத்திரங்களுடன் மாஸ்க் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை சற்று எண்ணிப்பாருங்கள்.

ஓடிடி தளங்களின் வளர்ச்சி

கேஎம்பிஜியின் அறிக்கை ஒன்றின்படி, கோவிட்-19ஆல் டிவி, டிஜிட்டல், ஆன்லைன் விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் சினிமா அரங்கங்கள், பொது நிகழ்ச்சிகள், கேளிக்கை பூங்காக்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவும் ஒரு நெருக்கடியான சூழலில் பொழுதுபோக்கு என்பது அடிப்படை சேவையாக பார்க்க இயலாது.

இருப்பினும் நமக்கு பிடித்தமான படங்களையும், தொடர்களையும் ஓடிடியிலும், டிவி மற்றும் இசை நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களிலும் காண இயலாமல் போயிருந்தால்… இந்த பொதுமுடக்க சமயத்தில் என்ன செய்திருப்போம்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் சர்ச்சிலிடம் ஒருமுறை, கலைகளுக்கான நிதியை நிறுத்த கூறியபோது, “பின் எதற்காக நாம் போரிட வேண்டும்” என கேட்டாராம்.

பொழுதுபோக்குத்துறை என்பது எப்போதும் நீடித்திருக்கும். ஆனால் அதன் வடிவங்கள் மாறலாம்.

கட்டுரை: வந்தனா விஜய்

வரைகலை: நிகிதா தேஷ்பாண்டேAdvertisement