பிறந்த நாள் பரிசு


கோட்டாபய ராசபக்ச (Nandasena Gotabaya Rajapaksaசிங்களம்ගෝඨාභය රාජපක්ෂநந்தசேன கோட்டாபய ராஜபக்ச; பிறப்பு: 20 சூன் 1949)[6] இலங்கை அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும், இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2005 முதல் 2015 வரை இவரது தமையன் மகிந்த ராசபக்சவின் அரசில் பாதுகாப்பு அமைச்சு செயலாளராகப் பணியாற்றி, இலங்கை ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பிரபலமான அரசியல் குடும்பத்தில் பிறந்த கோத்தாபய கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை படைத்துறையில் 1971 ஏப்ரலில் இணைந்தார். தியத்தலாவை இராணுவப் பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட பின்னர், பல காலாட் படையணிகளில் சேர்ந்து பணியாற்றினார். ஈழப்போரின் ஆரம்பக் கட்டங்களில் கஜபா படையணியில் சேர்ந்து சமர்களில் நேரடியாக ஈடுபட்டார். வடமராட்சி நடவடிக்கை, திரிவித பலயா போன்ற போர் நடவடிக்கைகளிலும், 1987-89 ஜேவிபி புரட்சியின் போது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டம் கொண்டார். 1998 இல் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 2005 இல் இலங்கை திரும்பிய பின்னர், தனது தமையனாரின் அரசில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் முழுமையாக ஈடுபட்டு 2009 இல் போரை வென்றது. 


2006 திசம்பரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[7] போருக்குப் பின்னர், கோத்தாபய ராசபக்ச பல நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசுப் பதவிகளை இழந்தார்.[8] 2018 இல், 2019 அரசுத்தலைவர் தேர்தலுக்கு ஒரு முக்கிய வேட்பாளராக வெளிக் கொணரப்பட்டார். இத்தேர்தலில் இவர் மகிந்த ராசபக்சவின் தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் சிங்கள தேசியவாத, பொருளாதார மேம்பாடு, தேசிய பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை முன்னெடுத்து,[9][10] தீவின் சிங்கள வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு 52.25% வாக்குகள் பெற்று 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2019 நவம்பர் 17 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.Advertisement