"கருணாவை எப்பொழுதோ போர்க்குற்றச்சாட்டுக்களிற்காக விசாரித்திருக்க வேண்டும்"


meenakshi ganguly
@mg2411

#SriLanka will investigate Karuna Amman after he boasts of killing soldiers; was shielded in the past by folks now in office including although whether with LTTE or pro-govt TMVP, he was accused of killings, torture, using child soldiers .

விநாயகமூர்த்தி முரளிதரன் மீது அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.

நீண்டகாலத்திற்கு முன்னரே அவர் போர்க்குற்றங்களுக்காக குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகால ஆயுத மோதலின் போது, சட்டவிரோதமான கொலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட எண்ணற்ற கடுமையான மனித உரிமை மீறல்களிற்கு புலிகள் காரணமானவர்கள்.

950 ஜூன் மாதம் புலிகளிடம் சரணடைந்த பல நூறு காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொல்வதற்கு கருணா கட்டளையிட்டிருந்தார்.

இதற்கு அடுத்த மாதம் சுமார் 75 முஸ்லீம் பயணிகளை அவரது படைகள் கொன்றன. அதே வருடம் ஓகஸ்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட அவரது படையணி காரணமாக இருந்தது.

2004ஆம் ஆண்டு அவர் புலிகளில் இருந்து பிரிந்து சென்றபோது, அவரது குற்றங்களை அரசாங்கம் விசாரிக்கவில்லை . மாறாக, அவரது குழு அரச ஆதரவுடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புக்களின் அறிக்கையில், கருணா குழு- பின்னாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என அறியப்பட்ட குழு- பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. கடத்தி காணாமல் போகச் செய்தல், சித்திரவதை. குழந்தைகளை கட்டாயமாக படைக்கு சேர்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மேல் உள்ளன.

கருணா செய்த குற்றங்களுக்கு ஒருபோதும் பொறுப்புக் கூறவில்லை. 2007 ஆம் ஆண்டில், அவர் தவறான ஆவணத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணம் செய்ததற்காக கைது செய்யட்டட்டார்.

தனது போலி இராஜதந்திர பாஸ்போர்ட்டை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ வழங்கினார் என்று சாட்சியமளித்தார். தற்போது அவர் நாட்டின் ஜனாதிபதி. தற்போதைய பிரதமர் மஹிந்தவின் அரசில் 2009 ல் கருணா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

போர்க்குற்றங்கள் மற்றும் பிற கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு கருணா மீது விசாரணை நடத்த வேண்டும். எவ்வாறாயினும், ஜனாதிபதி கோதபய ராஜபடி பதவியில் இருப்பதால் கருணா மீண்டும் நீதியிலிருந்து தப்பிப்பார் என்ற கவலைகள் உள்ளன என்று அவர் கூறினார்.Advertisement